மதுபோதையில் “போக்குவரத்துக் காவலரை கடமையைச் செய்ய விடாமல் மிரட்டிய ஐபிஎஸ் அதிகாரி மகள் (வீடியோ இணைப்பு)

0
575

கடந்த சனிக்கிழமை சென்னை கடற்கரையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலர் ஒருவர் இளம்பெண் ஒருவரால் மிரட்டப்பட்ட காட்சி தமிழ்நாட்டில் அதிகார மட்டத்தின் ஆணவத்தை அப்பட்டமாக எடுத்துக்காட்டுவதாக இருந்தது.

அந்த வீடியோ

சனிக்கிழமை மாலையில் சென்னை மெரினா கடற்கரையில் வழக்கம் போல வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து ஊழியர் ஒருவர் ஒரு குறிப்பிட்ட வாகனத்தில் இளம்பெண்கள் மது அருந்தியதை கண்டறிந்தார்.

தாம் கண்டதை அந்தக் காவலர் வீடியோவாகவும் பதிவு செய்திருக்கிறார்.

இதனால் எரிச்சலின் உச்சத்திற்குச் சென்ற அந்த இளம்பெண் காவலரை மிரட்டி வேலை செய்ய விடாமல் தடுக்கும் நோக்கத்துடன்… தான் ஒரு ஐபிஎஸ் ஆஃபீஸரின் மகள் என்றும், தான் நினைத்தால் உடனடியாகத் தனது தந்தையிடம் நடந்ததைக்கூறி குறிப்பிட்ட அந்தக் காவலரை பணியிலிருந்து நீக்கம் செய்ய முடியும் என மிரட்டி இருக்கிறார்.

அதோடு; ‘காவலரின் பெயர், அவர் பணிபுரியும் காவல் சரக எண், உள்ளிட்ட விவரங்களைக் கேட்டதோடு, நீங்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை தெரிந்து தான் செய்கிறீர்களா? யாருடைய வாகனத்தைச் சோதனை செய்கிறீர்கள்? எதற்காக இதை வீடியோ பதிவு செய்கிறீர்கள்? நான் நினைத்தால் உடனடியாக உங்கள் மேல் என் தந்தை வாயிலாக நடவடிக்கை எடுக்க முடியும்?’ என்றும் கூறி மிரட்டி இருக்கிறார்.

இளம்பெண் ஒருவர் கடற்கரை மாதிரியான பொதுமக்கள் கூடும் இடத்தில் காரில் வைத்து மது அருந்தியதோடு, வாகனச் சோதனையில் ஈடுபட்டு இளம்பெண்ணின் தவறைக் கண்டு பிடித்த காவலரையும் அதிகாரம் தந்த ஆணவத்தின் உச்சத்தில் நின்று மிரட்டி இருப்பது அப்போது அங்கிருந்த மக்களிடையே கடும் மனக்கசப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.