‘லவ் என்ன படிக்க விடல சார்’ 12ஆம் வகுப்பு தேர்வில் எழுதிய மாணவர் !

0
580
“காதல் என்பது இனம்புரியாத உணர்வு. அது உங்கள வாழவும் விடாது. சாகவும் விடாது. சார்…,

பிளஸ் 2 பொதுத் தேர்வில், தன்னை பாஸ் செய்து வைக்கும்படி, விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு சில வரிகளில் கோரிக்கை வைப்பதுண்டு.

ஆனால், தான் காதலில் விழுந்ததால் தேர்வுக்கு படிக்க முடியவில்லை; அதனால் தன்னை பாஸ் செய்து விடும்படி மாணவன் ஒருவன் கோரிக்கை விடுததுள்ள சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளின் விடைத்தாள்களை திருத்தும் பணியில் 1.46 லட்சம் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஆசிரியர் ஒருவர் விடைத்தாள் ஒன்றை திருத்தும்போது காதல் கதையும் ஒன்று எழுதி இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்துள்ளார்.

அந்த மாணவன் தனது விடைத்தாளில், தான் பூஜா என்ற பெண்ணை காதலிப்பதாக கூறியுள்ளார். தான் காதலில் விழுந்ததால், தேர்வுக்காக படிக்க முடியவில்லை என்றும் மாணவன் அதில் எழுதியுள்ளார்.

மற்றொரு மாணவன் ஒருவன், விடைத்தாளில் சில ரூபாய் நோட்டுகளை வைத்து அனுப்பியுள்ளார். தேர்வில் எப்படியாவது தன்னை பாஸ் செய்து விடுமாறு விடைத்தாளில் கோரிக்கை விடுத்துள்ளான்.

அதோடு, தனக்கு தாய் இல்லை என்றும் தந்தை மட்டுமே இருப்பதாகவும் கூறிய அந்த மாணவன், தேர்ச்சிபெறவில்லை என்றால் என்னை கொன்று விடுவார் என்றும் எழுதியுள்ளான்.

இது குறித்து, முஸாப்பர்நகர் பள்ளிக்கல்வித்துறை ஆய்வாளர் முனேஷ் குமார் செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டதாவது,

மாணவர்களின்விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஆசிரியர்கள் முழுமையாக ஈடுபட்டுள்ளார்கள்.

வழக்கம்போல, மாணவர்கள் தங்கள் விடைத்தாள்களில் சில சுவாரசியங்களை நிகழ்த்தியுள்ளனர்.

எனக்கு எப்படியாவது மதிப்பெண்களை போட்டு என்னை தேர்ச்சி பெற வைத்துவிடுங்கள் என்றுதான் எழுதிவைப்பார்கள்.

ஆனால், இந்தமுறை மாணவன் ஒருவன், காதல் ஒரு இனம்புரியாத உணர்வு. அது நம்மை வாழவும் விடவிடாது, சாகவும் விடாது.

காதல் என்னை படாய்படுத்துகிறது அதனால், என்னால் படிக்க இயலவில்லை என்று எழுதி, தான் காதலிக்கும் பெண்ணின் பெயரையும் எழுதிவைத்துள்ளான் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.