குவைத்தில் பயங்கர சாலை விபத்து: 2. பஸ்கள் மோதியதில் இந்தியர்கள் உள்பட 15 பேர் உடல் நசுங்கி பலி- (வீடியோ)

0
864

குவைத்தில் நடந்த பயங்கர சாலைவிபத்தில் 15-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என கூறப்படுகிறது.

இரண்டு பேருந்துகளில் தொழிலாளர்கள் பணிமுடிந்து தங்களது இருப்பிடம் திரும்பி கொண்டிருந்தனர். எதிரெதிர் திசையில் வந்த இரண்டு பேருந்துகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் விபத்து ஏற்பட்டது.

kuwait-accident-1522594062 குவைத்தில் பயங்கர சாலை விபத்து: 2. பஸ்கள் மோதியதில் இந்தியர்கள் உள்பட 15 பேர் உடல் நசுங்கி பலி kuwait accident 1522594062
பர்கான் பீல்டு என்ற இடம் அருகே நெடுஞ்சாலையில் இரு பேருந்துகளும் எதிரெதிர் திசையில் வந்துகொண்டிருந்தன.

அப்போது எதிர்பாராதவிதமாக இரண்டு பேருந்துகளும் ஒன்றோடு ஒன்று பலமாக மோதி விபத்துக்குள்ளானதில் 15-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியானதாக கூறப்படுகிறது.

இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் உடனடி மீட்பு பணியில் இறங்கியுள்ளனர். காயமடைந்தோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை கூடும் என அஞ்சப்படுகிறது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.