வவுனியா :மனைவியை காணவில்லை என கணவன் பொலிஸில் முறைப்பாடு!

0
914

மனைவியை காணவில்லை என கணவன் ஓருவர் வவுனியா பொலிஸில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.

நேற்றுமுன்தினம்  குறித்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

00 (1)

வவுனியா, நான்காம் கட்டை கிச்சிராபுரம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஆரோக்கியஜோதி லெம்பேட் திவியா என்ற தனது மனைவி கடந்த திங்கட்கிழமை காலை தான் வேலைக்கு செல்லும் போது வீட்டில் தனிமையில் இருந்ததாகவும் வேலை முடிந்து மாலை வீட்டிற்கு சென்ற போது மனைவியை காணவில்லை எனவும், தனது மனைவியின் தொலைபேசியும் இயங்கவில்லை என கணவன் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

00 (2)

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.