முகேஷ் அம்பானியின் மகன் யாரை திருமணம் செய்கிறார்?

0
542

இந்தியாவின் மிகப்பெரிய செல்வந்தரும் தொழிலதிபருமான முகேஷ் அம்பானியின் மகனின் திருமணம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கிறது.

அம்பானியின் மருமகள் யார் என்பதை தெரிந்து கொள்ள அனைவருக்கும் ஆவல் அதிகமாகவே இருக்கும்.

பிடிஐ செய்தி நிறுவனத்தின்படி, ஆகாஷ் அம்பானி-ஷ்லோகா மெஹ்தாவின் திருமண நிச்சயதார்த்தம் கோவாவில் நெருங்கிய குடும்பத்தினரின் முன்னிலையில் நடந்தேறியது.

இந்த திருமணம் தொடர்பாக நீண்ட காலமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில் தற்போது திருமணம் உறுதி செய்யப்பட்டுவிட்டது.

நிச்சயதார்த்த வைபவத்தின் புகைப்படங்கள் சமூக ஊடங்களில் வெளியாகியுள்ளன. இந்த புகைப்படங்களில் மணமக்களுடன் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீதா மற்றும் தாய் கோகிலாபென்னும் இடம்பெற்றுள்ளனர்.

திருமணச் செய்தி வெளியானவுடன், ஆகாஷ் அம்பானி திருமணம் செய்து கொள்ளப்போவது யார் என்பதை தெரிந்து கொள்ள அனைவருக்கும் ஆர்வம் எழுந்துள்ளது.

_100562922_dzhf993umaat15kமுகேஷ் அம்பானி, நீதா, கோகிலாபென், ஆகாஷ் மற்றும் ஷ்லோகா மெஹ்தா

வைர வியாபாரி்யின் மகள்

பிரபல வைர வியாபாரி ரசேல் மெஹ்தா-மோனா மெஹ்தா தம்பதிகளின் மூன்றாவது குழந்தை ஷ்லோகா. ப்ளூ டைமண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான ரசேல் மெஹ்தா, உலகின் மிகப்பெரிய வைர வியாபாரிகளில் ஒருவர்.

இரு குடும்பங்களும் ஏற்கனவே நன்கு அறிமுகமானவையே. திருபாய் அம்பானி இண்டர்நேஷனல் பள்ளியில் அகாஷும், ஷ்லோகாவும் ஒன்றாக படித்தவர்கள்.

ரசேலின் தந்தை அருண்குமார் எம். ரம்ணிக்லால் 1960ஆம் ஆண்டு பி.அருண்குமார் அண்ட் கம்பெனி என்ற நிறுவனத்தை நிறுவினார்.

ரோஸி ப்ளூ நிறுவனம், பி.அருண்குமார் என்ற பெயரிலேயே தனது தொழிலை தொடங்கியது. இன்று உலகின் 12 நாடுகளில் இந்த நிறுவனம் செயல்படுகிறது.

_100563389_95dffd1d-d975-4129-ba44-909083c37c41

கல்வியில் சிறந்த ஷ்லோகா சமூகசேவைகளிலும் ஈடுபாடு கொண்டவர்

2009ஆம் ஆண்டில் திருபாயி அம்பானி இண்டர்நேஷனல் பள்ளிப் படிப்பை முடித்த ஷ்லோகா அமெரிக்காவில் ப்ரிஸ்டன் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் கல்வியைத் தொடர்ந்தார்.

பிறகு லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் சட்ட மேற்படிப்பு படித்தார். 2014 முதல் ரோஸி ப்ளூ டயமைண்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநராக பொறுப்பு வகிக்கிறார் ஷ்லோகா.

புத்தகங்கள், படிப்பதிலும் சமூகசேவையிலும் ஆர்வம் கொண்ட ஷ்லோகா 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கனெக்ட் ஃபார் என்ற அமைப்பின் இணை நிறுவனர். இந்த அமைப்பு அரசு சாரா நிறுவனங்களுக்கான தன்னார்வலர்களை கண்டறிகிறது.

_100562924_connect-for

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.