“தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ள விஸ்வரூபம் 2: காலா படத்துக்கு முன்பே வெளியாக வாய்ப்புள்ளதா?”

0
253

கமல் நடித்து இயக்கியுள்ள விஸ்வரூபம் 2 படத்தில் பூஜா குமார், ஆண்டிரியா, ராகுல் போஸ் போன்றோர் நடித்துள்ளார்கள். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ளது.

விஸ்வரூபம் படத்துக்குப் பிறகு அதன் அடுத்தப் பாகமான விஸ்வரூபம் 2 படத்தைத் தொடங்கினார் கமல்.

ஆனால் அந்தப் படத்தின் பணிகள் முழுமையடையாததால் வேறு படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

இந்நிலையில் சிறிது இடைவெளிக்குப் பிறகு விஸ்வரூபம் 2 படத்தின் பணிகளை மீண்டும் தொடங்கியுள்ளார் கமல்.

சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் ஹிந்தி, தெலுங்குப் பதிப்புகளுக்கான டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டன.

கடந்த டிசம்பர் மாதம்  கடைசிக்கட்டப் படப்பிடிப்பையும் நடத்தினார் கமல். சென்னையில் ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி தரும் மையத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் கமல், ஆண்ட்ரியா கலந்துகொண்டார்கள்.

டிசம்பர் மாதத்தில் விஸ்வரூபம்-2 படத்தின் இறுதிக்கட்ட சிஜி, சவுண்ட் வேலைக்காக அமெரிக்கா சென்றார் கமல்.

விரைவில் டிரெய்லர் வெளியாகும் என்று இந்த மாதத் தொடக்கத்தில் கமல் அறிவித்தார். இந்நிலையில் விஸ்வரூபம் படத்துக்குத் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்த் திரையுலகில் நீடித்துவரும் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தபிறகு தணிக்கை விவரத்தையும் வெளியீட்டுத் தேதியும் கமல் அறிவிக்கவுள்ளார்.

ரஜினி – பா. இரஞ்சித் கூட்டணியில் உருவாகியுள்ள காலா படம் ஏப்ரல் 27 அன்று வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் வேலை நிறுத்தத்தால் இதன் வெளியீட்டுத் தேதி தள்ளிப் போக வாய்ப்புள்ளது.

இந்நிலையில் காலா வெளியீட்டுக்கு முன்பே விஸ்வரூபம் 2 வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளன.

எனவே ஏப்ரல் 27 அன்று காலா படத்துக்குப் பதிலாக விஸ்வரூபம் 2 வெளியாகும் என்கிற எதிர்பார்ப்பு தமிழ்த் திரையுலகில் நிலவுகிறது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.