கஷ்ட காலத்தில் தூங்கிய கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்ட நகைச்சுவை நடிகர்

0
441

கஷ்டப்பட்ட போது தூங்கிய அதே கோவிலில் வைத்து தேன்மொழி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார் நகைச்சுவை நடிகர் முனிஸ்காந்த்.

சினிமாவில் பெரிய ஆளாக வேண்டும் என்ற ஆசையில் 2002ம் ஆண்டு சென்னை வந்தவர் ராமதாஸ். படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். பல ஆண்டுகளாக ஜூனியர் ஆர்டிஸ்டாகவே இருந்தார்.

எதிர்பார்த்தபடி பெரிய கதாபாத்திரங்கள் கிடைக்காததால் ஒரு கட்டத்தில் விரக்தி அடைந்த ராமதாஸ் மலேசியா சென்றதாக கூறப்பட்டது. இருப்பினும் சினிமா ஆசை விடாததால் மீண்டும் சென்னை திரும்பிவிட்டாராம்.

முண்டாசுப்பட்டி படம் மூலம் தான் ராமதாஸின் நடிப்பு அனைவருக்கும் தெரிய வந்தது. அந்த படத்தில் அவர் முனிஸ்காந்தாக நடித்தார். அதில் இருந்து அவரை அனைவரும் முனிஸ்காந்த் என்றே அழைக்கிறார்கள்.

சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோவிலில் வைத்து தேன்மொழி என்ற பெண்ணை முனிஸ்காந்த் இன்று திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சினிமாவில் நடிக்க சென்னை வந்து கஷ்டப்பட்ட காலத்தில் முனிஸ்காந்த் வடபழனி கோவிலில் தான் தூங்கினாராம். தற்போது சினிமாவில் வளர்ந்த பிறகு அதே கோவிலில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.