இதற்காகத்தான் விஜய் படங்களில் என்னை கமிட் செய்தார்கள் – சங்கவி

0
605

விஜய்யுடன் பல படங்களில் நடித்த சங்கவி, எதற்காக படங்களில் கமிட் செய்தார்கள் என்பதை சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

அஜித் சினிமாவுக்கு அறிமுகமான ‘அமராவதி’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சங்கவி.

விஜய்யுடன் ‘ரசிகன்’, ‘விஷ்ணு’, ‘கோயமுத்தூர் மாப்ளே’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். ரஜினியுடன் ‘பாபா’, கமலுடன் ‘பஞ்சதந்திரம்’ உள்ளிட்ட படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

201803251705421771_1_sanghavi-1._L_styvpfதற்போது சமுத்திரகனி ஜோடியாக ‘கொளஞ்சி’ என்ற படத்தில் ஹீரோயினாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ‘அமராவதி’ படத்துக்குப் பிறகு ‘ரசிகன்’ பட வாய்ப்பு கிடைத்தது.

விஜய் ஹீரோவாக நடிக்க ஏஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கினார். ‘அமராவதி’ படத்தைப் பார்த்துவிட்டு என்னை இந்தப் படத்தில் கிளாமர் ரோலில் யோசனையுடன் நடிக்க வைத்தார்.

இப்படம் சூப்பர் ஹிட்டானதால், ‘இனி இந்தப் பொண்ணு கிளாமர் கேரக்டருக்குத்தான் செட் ஆகும் என்று நிறைய விஜய் படங்களில் என்னைக் கமிட் செய்தார்கள்.

விஜய், அஜித் ரெண்டுபேரும் நல்ல உழைப்பாளிகள். சில சமயம் நடிகர், நடிகைகளின் ரீயூனியன் நடக்கும்போது விஜய்யைப் பார்ப்பேன். ஆனா, அஜித்தைப் பார்த்தே பல வருடமாச்சு’ என்றார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.