அச்சு அசலான லேடி கெட்டப்பில் அனிருத்.. செம வைரலாகும் போட்டோ!

0
333
சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ஏற்கெனவே சில ஆல்பங்களிலும், படங்களிலும் தலைகாட்டியிருக்கிறார்.
இந்நிலையில், அனிருத் பெண் கெட்டப்பில் இருப்பது போன்ற போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் ‘கோலமாவு கோகிலா’ படத்திற்காக அனிருத் லேடி கெட்டப் போட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

nayanthara-hd-images-1521692762தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. நயன்தாரா தற்போது நடித்து வரும் படங்களில் ஒன்றுதான் ‘கோலமாவு கோகிலா’. இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

கோலமாவு கோகிலா’ படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் வெளியான ‘கோலமாவு கோகிலா’ படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியானது.

இந்தப் படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் அனிருத் நடிக்கவிருக்கிறார். அதில் நயன்தாராவிற்கு ஜோடியாக வருவது போல் இருக்குமாம். தன்னை விட 10 வயது குறைவான அனிருத்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருக்கிறார்.

இந்நிலையில், அனிருத் பெண் கெட்டப்பில் இருப்பது போன்ற போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படத்தில் அச்சு அசலாக பெண் போன்றே இருக்கிறார் அனிருத்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.