சமூக வலைதளங்களில் வைரலாகும் ஸ்ரேயாவின் திருமண புகைப்படம்

0
317

ரஷ்யாவை சேர்ந்த டென்னிஸ் வீரரை ரகசியமாக திருமணம் செய்து கொண்ட நடிகை ஸ்ரேயாவின் திருமண புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு திரை உலகில் முன்னணி இடம் பிடித்தவர் நடிகை ஸ்ரேயா. இவருக்கும், ரஷ்யாவை சேர்ந்த டென்னிஸ் வீரரும், தொழில் அதிபருமான ஆண்ட்ரே கோசீவுக்கும் இடையே காதல் இருந்து வந்தது.

ஆனால் இவர்களது காதலை வெளியே தெரிவிக்காமல் ரகசியமாக வைத்து இருந்தனர்.

ஸ்ரேயா அவருடைய ரஷ்ய காதலரை திருமணம் செய்ய இருக்கிறார் என்ற தகவல் முதலில் வெளியான போது, அதை அவருடைய தாயார் நீரஜா மறுத்தார். ஸ்ரேயாவும் தனக்கு இப்போது திருமணம் இல்லை என்று கூறினார்.

இந்த நிலையில், ஸ்ரேயா அவரது காதலர் ஆண்ட்ரே கோசீவை கடந்த 12-ந் தேதி மும்பையில் உள்ள வீட்டில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.

ரகசிய திருமணத்திற்கான காரணம் என்னவென்பது குறித்து பல வதந்திகள் கிளம்பிய நிலையில், ஸ்ரேயாவின் அம்மாவுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை.

இதனால் பிரச்சினை ஏற்பட்டு திருமணம் தடைபட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான், முன்னதாகவே ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக இந்தி பட வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இந்நிலையில், ஸ்ரேயா தனது காதலரை ரகசிய திருமணம் செய்து கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைராகி வருகிறது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.