குழந்தையை மடியில் வைத்ததற்காக தந்தை – மகளை இறக்கிவிட்ட விமான நிறுவனம் – வீடியோ

0
1211

அமெரிக்காவில் விமானத்தில் பயணம் செய்ய பயந்து அழுத குழந்தையை மடியில் வைக்கக்கூடாது என தந்தை – மகள் வலுக்கட்டாயமாக இறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் சிக்காகோ நகரில் உள்ள மிட்வே சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அட்லாண்டா நகரை நோக்கி செல்லும் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது.

இந்த விமானத்தில் ஒரு நபர் தனது மகளுடன் பயணித்தார். அவருக்கு இரண்டு வயது இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில், அவரது மகள் விமானத்தில் பயணம் செய்யப்போவதை நினைத்து பயந்து போயுள்ளார். இதன் காரணமாக அழுதுக்கொண்டிருந்த அவரது மகள், அவளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இருக்கையில் அமராமல் தந்தையின் மடி மீது அமர்ந்திருந்துள்ளார். ஆனால் இதற்கு விமான அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

குழந்தை அழக்கூடாது எனவும், தனி இருக்கையில் அமர்ந்துதான் பயணம் செய்ய வேண்டும் எனவும் கண்டிப்புடன் கூறியுள்ளனர். அவ்வாறு இல்லையெனில் விமானத்தை விட்டு இறங்கும்படியும் கூறியுள்ளனர்.

இதனால் வேறு வழியின்றி தந்தையும் மகளும் விமானத்தைவிட்டு இறங்கியுள்ளனர்.

இதுதொடர்பான வீடியோவை ஜூலியட் பகுதியை சேர்ந்த அலெக்சிஸ் ஆர்ம்ஸ்டிராங் என்பவர் இணையதளத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரணையும் நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.