சன் டிவி மேடையில் புருவ அழகி பிரியா.. அரங்கமே அதிர அசத்தல் பெர்ஃபாமன்ஸ்!

0
1980

சென்னை : சில வாரங்களுக்கு முன்பு இணையத்தைக் கலக்கிய மலையாள பிரபலம் பிரியா பிரகாஷ் வாரியர்.

புருவம் நெளித்து, கண் சிமிட்டிய பிரியா வாரியரின் க்யூட் எக்ஸ்பிரஷனில் சொக்கி விழுந்தார்கள் இணைய உலக இளைஞர்கள்.

பிரியா பிரகாஷ் சன் டிவி-யின் சன் சிங்கர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தனராக கலந்துகொண்டு மேடையிலேயே க்யூட் ரியாக்‌ஷன் கொடுத்து அசத்தியிருக்கிறார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சன் சிங்கர் 6-வது சீசனின் மாபெரும் இறுதிச்சுற்று மார்ச் 18 தேதி சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. சன் டிவி-யில் ஒளிபரப்பாகும் பாடகர்களுக்கான ரியாலிட்டி நிகழ்ச்சிதான் சன் சிங்கர்.

சன் சிங்கர் 6-வது சீசனின் மாபெரும் இறுதிச்சுற்று வருகின்ற ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த ரியாலிட்டி நிகழ்ச்சியின் ஜூரிக்களாக நடிகை ஆண்ட்ரியா, பாடகி சின்மயி, ரஞ்சித் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் அனிருத், ஆன்டனி தாஸ், புருவ அழகி பிரியா வாரியர் மற்றும் அவரோடு இணைந்து நடித்த நடிகர் ரோஷன் அப்துல் ரஹூஃப் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியின் மேடையில், ‘ஒரு அடார் லவ்’ படத்தின் பாடலில் வரும் க்யூட் எக்ஸ்பிரஷன்களை செய்து காட்டி அசத்தியிருக்கிறார்கள் பிரியா வாரியர் – ரோஷன் ஜோடி.

பிரியா வாரியரின் புருவ நெளிப்பையும், கண் சிமிட்டலையும் நேரில் பார்த்ததால் அரங்கமே ஆர்ப்பரித்திருக்கிறது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.