தாடியை எடுத்தாதான் கல்யாணம்.. மத்திய பிரதேச திருமண மேடையில் நடந்த பரபரப்பு!

0
881

மணமகன் தாடியை எடுத்துவிட்டு வந்ததால் தான் திருமணம் செய்து வைப்போம் என்று மத்திய பிரதேசத்தில் கல்யாணம் ஒன்று நிறுத்தப்பட்டு இருக்கிறது. கந்தவா என்ற பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்று இருக்கிறது.

போலீஸ் வந்து பிரச்னையை தீர்க்கும் அளவிற்கு இந்த சம்பவம் சென்று உள்ளது. கடைசியில் நீண்ட போராட்டத்திற்கு பின் இந்த திருமணம் நடந்துள்ளது. ஆனால் அதற்கு பின்பும் நிறைய சுவாரசியமான விஷயங்கள் அடங்கி இருக்கிறது.

மணமகன் ‘மங்கல் சௌகான்’ தாடி வளர்த்ததுதான் பிரச்சனை ஆகி இருக்கிறது. இதற்காக மணமகள் ருபாலியின் குடும்பத்தில் பிரச்சனை செய்து உள்ளார்கள்.

marriagestopped-beard-madhyapradesh1-1521185449தாடி வைத்த மாப்பிள்ளைக்கு கண்டிப்பாக பெண் கொடுக்க முடியாது என்று சண்டை போட்டு இருக்கிறார்கள்.

இதனால் உடனடியாக கல்யாணத்தை நிறுத்தினார்கள். மொத்தமாக 12 மணிநேரம் கல்யாணம் நடக்காமல் இருந்துள்ளது. மாப்பிள்ளை என்ன நடந்தாலும் தாடியை வெட்ட மாட்டேன் என்று சண்டை போட்டு இருக்கிறார்.

இதன் உச்சகட்டமாக போலீசில் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது. 12 மணி நேரம் கழித்து போலீஸ் வந்து சமாதானம் பேசினார்கள். பின் பெண் வீட்டாரை சமாதானப்படுத்தி கல்யாணத்திற்கு ஒப்புக்கொள்ள வைத்து இருக்கிறார்கள்.

போலீஸ் தலையிட்ட பின் மணமகன் தன்னுடைய தாடியை எடுத்து இருக்கிறார். அதற்கு பின்பே அவர் மணமேடையில் உட்கார மணமகள் குடும்பம் அனுமதித்துள்ளது. இந்த சம்பவம் அந்த மாநிலம் முழுக்க வைரல் ஆகி இருக்கிறது.

 

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.