அவன் மட்டும் கையில கிடைச்சான், சட்னி தான்: சாய் பல்லவி ஆத்திரம்

0
363

சென்னை: சாய் பல்லவி மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறாராம்.

தமிழ் பெண்ணான சாய் பல்லவி மலையாள திரையுலகில் அதுவும் ஒரேயொரு படம் மூலம் ஏகப் பிரபலமானார். அதன் பிறகு தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்றார்.

மலையாள ரசிகர்களை போன்றே தெலுங்கு ரசிகர்களுக்கும் சாய் பல்லவியை மிகவும் பிடித்துவிட்டது.

சாய் பல்லவி படப்பிடிப்புக்கு வந்தால் ஓவர் திமிராக நடந்து கொள்வதாகவும், ஹீரோக்களை மதிக்காமல் அடாவடியாக நடப்பதாகவும் பேச்சு கிளம்பியுள்ளது.

சாய் பல்லவிக்கும், ஏற்கனவே திருமணமான நடிகர் ரவி தேஜாவுக்கும் இடையே தொடர்பு என்று யாரோ கொளுத்திப் போட அது தீயாக பரவிவிட்டது.

இறுதியில் ரவி தேஜாவின் தந்தை விளக்கம் அளித்தார்.

சாய் பல்லவி வேகமாக வளர்ந்து வருவதால் அவர் மீது பொறாமைப்பட்டு தான் அவரை பற்றி வதந்திகளாக பரப்பிவிடுகிறார்கள் என்று கூறப்படுகிறது.

தன்னை பற்றி வரும் வதந்திகளால் சாய் பல்லவி மிகுந்த மன உளைச்சலில் உள்ளாராம். வதந்தி பரப்புபவர்கள் யார் என்று தேடிக் கொண்டிருக்கிறாராம் அவர்.

திருமணமான ஆந்திர மந்திரி மகனுடன் சாய் பல்லவி காதலா?

201803141639513790_AP-minister-opens-up-about-Ravi-Teja-and-Sai-Pallavi_SECVPF.gifமலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படம் மூலம் பிரபலமானவர் சாய் பல்லவி.
சாய் பல்லவிக்கும் தெலுங்கு நடிகர் கண்டா ரவிதேஜாவுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாகவும்  தெலுங்கு இணையதளங்களில் தகவல் பரவி உள்ளது. கண்டா ரவிதேஜா திருமணமானவர்.
‘ஜெயதேவ்’ என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் ஆந்திர கல்வி மந்திரி கண்டா ஸ்ரீனிவாஸ் மகன் ஆவார்.
இந்த காதல் கிசுகிசுவை மந்திரி கண்டா ஸ்ரீனிவாஸ் மறுத்துள்ளார். இதுகுறித்து நிருபர்களிடம் அவர் கூறும்போது,”எனது மகனும் சாய் பல்லவியும் காதலிப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை.

இருவரும் இணைந்து ஒரு படத்தில் கூட நடிக்காத நிலையில் இது போன்ற வதந்திகளை பரப்புவது வருத்தமாக இருக்கிறது.

வதந்திகளை நான் பொருட்படுத்துவது இல்லை. எனது மகனின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக செல்கிறது. காதல் வதந்தியால் சாய் பல்லவி மற்றும் எனது மகனின் வாழ்க்கை பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே இந்த விளக்கத்தை வெளியிடுகிறேன்” என்றார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.