ஸ்ரீதேவி இரங்கல் கூட்டத்தில் கலந்துகொண்ட சினிமா பிரபலங்கள்

0
617

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் அஞ்சலிக் கூட்டம் சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்று மாலை நடந்தது. இதில் திரைப்பட துறையினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதற்கிடையே, ஸ்ரீதேவி பல மொழிகளிலும் நடித்துள்ளதால், அவருக்கான அஞ்சலி நிகழ்ச்சிகளை முக்கிய நகரங்களில் நடத்த அவர் கணவர் போனி கபூர் முடிவு செய்துள்ளார்.

அந்த அடிப்படையில் அவர் இறந்து 16-ம் நாளான நேற்று சென்னையிலுள்ள க்ரவுன் ப்ளாசா ஹோட்டலில் மாலை ஆறு மணிக்கு அஞ்சலிக் கூட்டம்  நடந்தது.

இதில் தமிழ்த் திரைப்படத்துறையைச் சேர்ந்த பலரும் வந்து போனிகபூருக்கும், அவர்களுடைய இரு மகள்களுக்கும் ஆறுதல் கூறினார்கள்.

இதில் ஏ.ஆர்.ரகுமான், பாக்யராஜ் உட்பட சிலர் மனைவியுடன் வந்து கலந்துகொண்டனர்.

முன்னதாக, சென்னை சி.ஐ.டி நகரில் உள்ள ஸ்ரீதேவி வீட்டில் 16-ம் நாள் சடங்குகள் நடைபெற்றன. இதில், நடிகர் அஜித்குமார் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

Pics 19jpgPics 15jpgPics 14jpgPics 9jpgPics 39jpgPics 38jpgPics 5jpgPics 4jpgPics 2jpg Pics 20jpgPics 25jpgPics 33jpgPics 37jpg

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.