மனைவியை காதலருடன் சேர்த்து வைத்த புதுமாப்பிள்ளை

0
518

ஒடிசாவை சேர்ந்தவர் பாசுதேவ் டோப்போ. இவருக்கும்  ஜார்சுடுடா மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் மார்ச் 4ஆம் தேதி திருமணம் நடைப்பெற்றுள்ளது.

இந்நிலையில் மார்ச் 8ஆம் தேதி இவரது இல்லத்திற்கு வந்த மூன்று இளைஞர்கள் அந்தப்பெண்ணின் உறவினர்கள் எனத் தெரிவித்துள்ளார்.

வந்திருந்த உறவினர்களை வரவேற்று விருந்து உபசரிப்பு எல்லாம் பலமாக கவனித்துள்ளார் பாசுதேவ்.

அந்தப் பெண்ணின் உறவினர்கள் இருவருடன் மது அருந்துவதற்காக பாசுதேவ் சென்றுவிட்டார். மற்றொரு நபர் மட்டும் இருந்துள்ளார்.

பாசுதேவ் மனைவியும் அந்த நபரும் நெருக்கமாக உறையாடிக் கொண்டிருந்ததை கண்ட உறவினர்கள் அந்த நபரை கட்டிவைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இந்நிலையில் மதுஅருந்த சென்ற பாசுதேவும் திரும்பிவிட்டார். உறவினர்கள் அந்த இளைஞரை தாக்குவதை கண்ட பாசுதேவ் அவர்களை தடுத்து நடத்தவற்றை விசாரித்துள்ளார்.

பாசுதேவ் மனைவியும் அந்த இளைஞரும் காதலித்து வந்ததாகவும் உறவினர்களின் கட்டாயத்தின் பேரில் பாசுதேவை அந்தப்பெண் திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்துள்ளது.’

மேலும் அந்த மூன்று இளைஞர்களும் உறவினர்கள் இல்லை. அந்தப்பெண்ணின் காதலனும் அவரது நண்பர்களும் தான் உறவினர்கள் என்று கூறிக்கொண்டு வந்துள்ளனர்.

திருமணம் ஆன 4நாட்களில் இப்படி ஒரு அதிர்ச்சி. இருப்பினும் நிதானமாக முடிவெடுத்த பாசுதேவ் தனது மனைவிக்கு அவரது காதலனுக்கு மணம் செய்து வைத்துவிட்டார்.

இதுதொடர்பாக இருவீட்டாரிடமும் சமாதனம் பேசி இந்தத் திருமணத்தை அவர் நடத்தி முடித்துள்ளார். கிராம மக்கள் முன்னிலையில் தனது  திருமணத்தையும் முறித்துக்கொண்டார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.