காணாமல்போனவர் கல்லடி வாவியில் சடலமாக மீட்பு!

0
208

காத்தான்குடி நகரில் சனிக்கிழமை இரவு காணாமல்போன வர்த்தகர், இன்று (11) மாலை மட்டக்களப்பு – கல்லடி வாவியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டதாக, காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

பிரபல பாதணிகள் உற்பத்தி நிறுவனங்களின் வர்த்தகரான, காத்தான்குடி நகர், மீன்பிடி இலாகா வீதி, மனேஜர் ஒழுங்கையைச் சேர்ந்த ஏ.எல்.எம். முஹம்மது முபாறக் (வயது 35) என்ற வர்த்தகரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

00 (2)குறித்த வர்த்தகர், நேற்று (10) இரவு, மஞ்சந்தொடுவாயிலுள்ள தனது தொழிற்சாலையிலிருந்து வெளியேறி, அருகிலிருந்த உணவகத்தில் தேனீர் அருந்தி விட்டு வெளியேறும்போதே, இரவு 7.30 மணியளவில் காணாமல் போயுள்ளார்.

அவர் கடைசியாக அந்த உணவகத்திலிருந்து வெளியேறியபோது பதிவான சி.சி.டி.வி காணொளியை வைத்து, விசாரணைகளை முன்னெடுத்து வந்த பொலிஸார், கல்லடிப் பகுதி வாவியிலிருந்து, குறித்த வர்த்தகரை சடலமாக மீட்டுள்ளனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.