சிங்கத்திடம் சிக்கிய சிறுமி தப்பிய அதிஸ்டம்; வைரல்! (வீடியோ)

0
472

சிங்கத்திடம் இருந்து அதிஸ்டவசமாக தப்பிய சிறுமியின் காணொளி வைரலாகி வருகின்றது.

 சவுதி அரேபியாவின் ஸெடா நகரில் ஆண்டுதோறும் வசந்த விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. இவ் வசந்த விழாவில் சவுதி அரேபியாவின் பாரம்பிரிய நிகழ்வுகளும், பல வித்தியாசமான நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன.

lion-attacks-girl-saudi-arabia-650_650x400_81520586469

இதனடிப்படையில் இந்த வருடம் நடைபெற்ற வசந்த விழாவில் நிகழ்ச்சி ஒருங்கமைப்பாளர்கள் வித்தியாசமான முறையில் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். அதாவது சிங்ககுட்டி ஒன்று அடைக்கப்பட்ட கூன்றினுள் சிறுவர்களை சென்று விளையாடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிறுவர்கள் விளையாடிய வேளை திடீரென பாய்ந்த சிங்ககுட்டி சிறுமி ஒருவரின் தலையை பிடித்துள்ளது.

இருந்த போதும் பயிற்சியாளரால் உடனடியாக சிறுமி மீட்கப்பட்டுள்ளதுடன், சிறுமிக்கு ஆபத்து எதுவும் ஏற்படவில்லை.

இது குறித்து காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருவதுடன். இந்த காணொளியை பார்த்த பலர் பயிற்சியாளர் தண்டிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.