இந்த வார பலன்கள் (மார்ச் 9 – 15

0
329

 ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் இந்த வார (மார்ச் 9 – மார்ச் 15) பலன்களை துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பயனடைவோம்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

அதிஷ்டகரமான வாரம். கவலைகள் மறைந்து இன்பங்கள் பெருகும். பணவரவு சீராகும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். உற்றார் உறவினர்கள் நண்பர்களிடம் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். உடன்பிறந்தோருக்கிடையே இருக்கும் பிரச்னைகளில் தலையிட வேண்டாம்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து நடந்து கொள்வீர்கள். அலுவலக ரீதியான பயணங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். வியாபாரிகள் எதிர்பார்த்த வருமானத்தைப் பெறுவீர்கள். புதிய சந்தைகளை நாடிச் செல்வீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருந்தாலும் ஓய்வின்றி உழைக்க வேண்டியிருக்கும். கறவை மாடு வாங்கி பால் வியாபாரம் செய்து லாபத்தைப் பெருக்கலாம்.

அரசியல்வாதிகளுக்கு அலைச்சல் அதிகரிக்கும். யாரிடமும் வீண் விரோதத்தை வளர்த்துக் கொள்ள வேண்டாம். கலைத்துறையினரைத் தேடி புதிய ஒப்பந்தங்கள் வரும். திறமைகளை நன்றாக வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையை காண்பீர்கள். மாணவமணிகள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவீர்கள்.

பரிகாரம்: நவக்கிரகத்தில் சூரியபகவானை ஞாயிறன்று வழிபடுங்கள்.

அனுகூலமான தினங்கள்: 10,11.

சந்திராஷ்டமம்: 9.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

சிறப்பான வாரம். வேலைகளை எப்பாடுபட்டேனும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிப்பீர்கள். உங்களின் மதிப்பு உயரும். வருமானம் அதிகரிக்கும். மனதிற்கு நிம்மதி தரும் செய்திகளைக் கேட்பீர்கள். சில நேரங்களில் எதையோ இழுத்துவிட்டது போன்ற மனக் கவலைகளுக்கும் ஆளாவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளைத் திட்டமிட்டு செய்து முடிப்பீர்கள். உங்கள் பொறுப்புகளைப் பிறரிடம் ஒப்படைப்பதைத் தவிர்க்கவும். வியாபாரிகள் மன உறுதியுடன் செயல்பட்டு வருமானத்தைப் பெருக்குவார்கள். சிலருக்கு கூட்டாளிகளை விட்டுப் பிரிய நேரிடும். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். தடைகள் ஏற்பட்டாலும் திட்டமிட்ட வேலைகள் வெற்றியடையும்.

அரசியல்வாதிகள் தொண்டர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் சுமாராகவே கிடைக்கும். ஆகையால் திறமைகளை வளர்த்துக்கொள்வீர்கள். பெண்மணிகள் இல்லத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். வருமானம் சீராகவே இருக்கும்.
மாணவமணிகள் கல்வியில் கவனத்தைச் செலுத்துங்கள்.

பரிகாரம்: பெருமாளை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 9,13.

சந்திராஷ்டமம்: 10,11,12.

மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

வீண் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் உங்கள் வேலைகளை முடித்து வெற்றி பெறுவீர்கள். உங்கள் செயல்களில் விவேகம் அதிகரிக்கும். பொருளாதாரம் சீராக இருந்தாலும் சேமிப்புக்கு வழி இருக்காது. மற்றபடி குடும்பத்தில் அன்பும் பாசமும் அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு இந்த வாரம் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். மேலதிகாரிகளை மதித்து நடந்துகொண்டு காரியமாற்றுவீர்கள். வியாபாரிகளுக்கு கொள்
முதலில் சுமாரான லாபம் கிடைக்கும். அதனால் புதிய வாடிக்கையாளர்களை நாடிச் செல்வீர்கள். விவசாயிகள் நீர்ப்பாசன வசதிகளுக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் பலனளிக்கும். கால்நடைகளால் லாபமும் உண்டாகும்.

அரசியல்வாதிகளின் கோரிக்கைகள் நிறைவேறும்.  அரசு அதிகாரிகளிடம் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். பண வரவுக்குக் குறைவு ஏற்படாது. பெண்மணிகள் கணவரிடம் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். மாணவமணிகள் படிப்பில் மேலும் ஆர்வம் செலுத்தவும்.

பரிகாரம்: குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 10,11.

சந்திராஷ்டமம்: 13,14.

கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய) 

மகிழ்ச்சிகரமான வாரம். பொறுமையுடன் செயல்பட்டு உங்கள் வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். தொழிலில் உங்கள் எதிர்பார்ப்புகள் கைகூடும். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். உறவினர்கள் சுமுகமாக இருக்க மாட்டார்கள்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் ஒத்துழைப்புடன் நடந்து கொள்வீர்கள். சக ஊழியர்கள் உதவமாட்டார்கள். வியாபாரிகள் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். புதிய முதலீடுகள் செய்வதற்கு இது உகந்த நேரமல்ல. விவசாயிகள் கையிருப்புப் பொருள்கள் மீது அக்கறை காட்டவும். சந்தையில் போட்டிக்குத் தகுந்தவாறு தானியங்களின் விலையை நிர்ணயித்தால் லாபம் அடையலாம்.

அரசியல்வாதிகள் எதிர்கட்சியினரிடம் உஷாராக இருக்கவும். கட்சி மேலிடத்திடம் கவனமாக நடந்து கொள்ளவும். கலைத்துறையினருக்கு உழைப்புக்குத் தருந்த பலன் கிடைக்கும். வரவேற்புகள் குறைவதைப் பற்றி கவலைப்படாதீர்கள். பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். மாணவமணிகள் கல்வியில் முன்னேற்றம்
காண்பீர்கள். உடற்பயிற்சிகளில் ஈடுபடவும்.

பரிகாரம்: பார்வதி பரமேஸ்வரரை தரிசித்து “நமசிவாய’ என்று ஜெபித்து வரவும்.

அனுகூலமான தினங்கள்: 10,13.

சந்திராஷ்டமம்: 15.

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

உற்சாகமான வாரம். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி வாகை சூடுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். மறைமுக போட்டிகள் உருவாகாது. நண்பர்களும் கூட்டாளிகளும் உங்களின் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். உங்களின் வசீகரப் பேச்சின் மூலம் பிறரைக் கவருவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகச் சூழல் சாதகமாகவே இருக்கும். பணம் தேவைக்கேற்ப வந்து சேரும். வியாபாரிகளுக்கு திட்டமிட்ட பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். அதனால் புதிய யுக்திகளைப் புகுத்தி லாபத்தை அள்ளுவீர்கள்.  விவசாயிகளுக்கு வருமானம் திருப்திகரமாகவே இருக்கும். உழைப்புக்கு
ஏற்றவாறு பலன்களைப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு சமுதாயத்தில் செல்வாக்கு உயரும். தொண்டர்களின் ஆதரவும் நன்றாக இருக்கும். கலைத்துறையினருக்கு ஆற்றல் அதிகரிக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தையும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். பெண்மணிகள் குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பீர்கள். உற்றார் உறவினர்களிடமிருந்து நல்ல செய்தி வந்து சேரும். மாணவமணிகள் கல்வியில் அக்கறை காட்டவும். பாடங்களை உடனுக்குடன் படித்து முடிக்கவும்.

பரிகாரம்: பைரவரை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 9,12.

சந்திராஷ்டமம்: இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

பொருளாதார நிலைமை சீராக இருக்கும். விலை உயர்ந்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிரிகளின் பலம் குறையும். சமூகத்தில் உங்கள் மதிப்பு மரியாதை வளரும். சுபச்செய்திகளால் மனம் நிம்மதி அடையும். புனிதப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு குறையும். பண வரவு கூடும். வியாபாரிகள் நல்ல லாபத்தை அடைவீர்கள். புதிய யுக்திகளைப் புகுத்தி பொருள்களின் விற்பனையை பலமடங்கு பெருக்குவீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். அதோடு புதிய பயிர்களை உற்பத்தி செய்து பலன் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் மேலிடத்தின் பாராட்டைப் பெறுவீர்கள். எதிரிகளிடம் எச்சரிக்கையுடன் இருக்கவும். கலைத்துறையினருக்கு முன்னேற்றகரமான வாரம் இது. புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். பெண்மணிகள் குடும்பத்தில் நிம்மதியைக் காண்பீர்கள். ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல்நலத்தில் கவனம் தேவை.
மாணவமணிகள் கூடுதலான மதிப்பெண்களைப் பெறுவீர்கள். விளையாட்டில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை “ராம் ராம்’ என்று ஜபித்துக் கொண்டே சுற்றி வரவும்.

அனுகூலமான தினங்கள்: 10,14.

சந்திராஷ்டமம்: இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

நன்மைகள் உண்டாகும். நீங்கள் செய்த வியாமுயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். நண்பர்களுக்கும் கூட்டாளிகளுக்கும் தேவையான ஒத்துழைப்பை நல்குவீர்கள். உங்களின் கொள்கை லட்சியத்தை நோக்கி படிப்படியாக முன்னேறுவீர்கள். பணத்தட்டுப்பாடு ஏற்படாது.

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்காது. பணவரவு சீராகவே இருக்கும். வியாபாரிகளுக்கு இது லாபகரமான வாரம். புதிய முதலீடுகளைச் செய்வதற்கு எடுத்த முயற்சிகளை மறுபரிசீலனை செய்யவும். விவசாயிகளுக்கு கொள்முதல் லாபம் சுமாராகவே இருக்கும். நல்ல நீர்வரத்தால் விளைச்சல் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகளின் பதவிக்கு நெருங்கிய நண்பர்கள் மூலமாகவே சில இடையூறுகள் ஏற்படலாம். மாற்றுக் கட்சியினரிடம் மனம் திறந்து பேச வேண்டாம். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பெண்மணிகள் வீட்டில் சுபநிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். மாணவமணிகள் படிப்பில் அக்கறை காட்டவும். ஞாபக சக்தி வளர விடியற்காலையில் கல்விக்கான பயிற்சிகளை மேற்கொள்ளவும்.

பரிகாரம்: பார்வதி பரமேஸ்வரரை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 11,12.

சந்திராஷ்டமம்: இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

அதிகமான வேலைகளால் அலைச்சல்களுக்கு ஆளாவீர்கள். ஆனாலும் வார இறுதியில் இத்தகைய நிலைமைகளில் மாற்றம் தென்படும். ஸ்பெகுலேஷன் துறைகளிலும்
பயணங்களாலும் நன்மையடைவீர்கள். குடும்பத்தில் அமைதியைக் காண்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் எதிர்வரும் இடையூறுகளை சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். சிலருக்கு விரும்பிய இடமாற்றமும் கிடைக்கும். வியாபாரிகள் தங்கள் முயற்சிகளில் பின்வாங்காமல் செயல்பட்டு வெற்றி பெறிவீர்கள். விற்பனை எதிர்பார்த்ததற்கும் அதிகமாகவே இருக்கும். விவசாயிகளுக்கு திட்டமிட்ட பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். அமோகமான விளைச்சலால் லாபத்தை அள்ளுவீர்கள்.

அரசியல்வாதிகளின் பெயரும் புகழும் அதிகரிக்கும். புதிய முயற்சிகளை வெற்றிகரமாக நிறைவேற்றுவீர்கள். கலைத்துறையினர் புதிய சாதனைகளைச் செய்வீர்கள். எதிர்பார்த்த வாய்ப்புகளும் வாசற்கதவைத் தட்டும். பெண்மணிகளுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். மாணவமணிகள் எதிர்பாராத உதவிகளைப் பெறுவீர்கள்.  நிறைய மதிப்பெண்களை அள்ளுவீர்கள்.

பரிகாரம்: சனிக்கிழமையன்று வேங்கடேசப் பெருமாளை தரிசனம் செய்யவும்.

அனுகூலமான தினங்கள்: 11,15.

சந்திராஷ்டமம்: இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

பணப்புழக்கம் சரளமாக இருக்காது. எனவே புதிய கடன்களை வாங்க நேரிடலாம். நெருங்கியவர்களுடன் விரோதம் ஏற்பட வாய்ப்புள்ளது. சமூகத்தில் உங்கள் மதிப்பு சற்று குறையும். உடல் ஆரோக்கியம் விஷயத்தில் அலட்சியமாக இருக்க வேண்டாம்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். விரும்பத் தகாத இடமாற்றங்கள் உண்டாகும். வியாபாரிகள் போட்டியாளர்களால் தொல்லை அடைவீர்கள். சரக்குவாகன வகையில் செலவு செய்ய நேரிடும். அதோடு கணக்கு வழக்குகளையும் சரியாக வைத்துக் கொள்ளவும். விவசாயிகளுக்கு மகசூல் சுமாராக இருக்கும். ஆகையால் மாற்றுப் பயிர்களை உற்பத்தி செய்து பலன் பெறலாம்.

அரசியல்வாதிகள் பேச்சில் கட்டுப்பாட்டை மேற்கொள்ளவும். மேலிடத்திற்குத் தகவல் அனுப்பும்போது எச்சரிக்கை தேவை. கலைத்துறையினருக்கு  அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். பாராட்டும் பணமும் ஒருங்கே கிடைக்கும். பெண்மணிகள் குடும்பத்தாரிடம் நன்மதிப்பு பெறுவீர்கள். மாணவமணிகள் விளையாட்டில் ஆர்வத்தைக் குறைத்துக்கொண்டால் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறமுடியும்.

பரிகாரம்: மஹாலட்சுமியை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 13,15.

சந்திராஷ்டமம்: இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய) 

திருப்திகரமான வாரம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். ஆனாலும் உறவினர்கள் அலட்சியமாக நடந்து கொள்வார்கள். உடன்பிறந்தோரிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உடல்நலம் சீராக இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்கள் உங்களிடம் பாராமுகமாகவே நடந்து கொள்வார்கள். வியாபாரிகள் அவசியமான பொருள்களை மட்டுமே கொள்முதல் செய்யவும். கடன் கொடுத்து வியாபாரத்தைப் பெருக்கும் எண்ணம் வேண்டாம். விவசாயிகள் போட்டிகளைச் சந்திக்க நேரிடும். தானியப் பொருள்கள் உற்பத்தியில் எதிர்பார்த்த லாபத்தை அள்ளுவீர்கள்.

அரசியல்வாதிகள் பொறுப்புகளை உணர்ந்து செயல்படவும். ஆதரவு குறைவாக இருப்பதால் எதிலும் எச்சரிக்கையாக இருங்கள். கலைத்துறையினர் நிதானத்துடனும் கவனத்துடனும் நடந்து கொண்டால் எதிர்பார்த்த வெற்றியை அடைவீர்கள்.

பெண்மணிகளுக்கு வீட்டில் சந்தோஷம் நிலவும். மாணவமணிகள் சோம்பேறித்தனத்திற்கு இடம் தராமல் படித்து நல்ல மதிப்பெண்களைப் பெற முயற்சிக்கவும்.

பரிகாரம்: அம்பாள் தரிசனம் உகந்தது.

அனுகூலமான தினங்கள்: 10,14.

சந்திராஷ்டமம்: இல்லை.


கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

மகிழ்ச்சிகரமான வாரம். தேவையற்ற விஷயங்களைக் கண்டுகொள்ளாமல் “கொக்குக்கு ஒன்றே மதி’ என்கிற ரீதியில் செயல்படுவீர்கள். சமயோசித புத்தியுடன் விவேகமாகக் காரியமாற்றுவீர்கள். ஆன்மிக ஆற்றல் வெளிப்படும். பணவரவு சிறப்பாக இருக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வும் இடமாற்றமும் கிடைக்கும். மேலதிகாரிகளை அனுசரித்து நடந்துகொண்டால் மேலும் நன்மை அடையலாம். வியாபாரிகளுக்கு பணவரவு சீராக இருக்கும். தேவைக்கேற்ற சரக்குகளை வாங்கி விற்பனை செய்வீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் பெருகும். விளைபொருள்களுக்கு செயல்வடிவம் கொடுப்பீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சியில் மாற்றங்களைக் கொண்டுவர நினைக்க வேண்டாம். கட்சி மேலிடத்தில் நற்பெயர் எடுக்க முயலுங்கள். கலைத்துறையினருக்கு சக கலைஞர்கள் உதவிகரமாக நடந்து கொள்வார்கள்.

பெண்மணிகள் அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தவும். நீங்கள் செய்யும் வீண் யோசனைகள் உங்கள் வலிமையை குறைக்கும். மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவதற்கு அதிகமாக உழைக்க வேண்டிய நேரமிது.

பரிகாரம்: மஹாவிஷ்ணுவை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 9,15.

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

உற்சாகமான வாரம். குடும்பத்தில் அமைதி நிலவும். உறவினர்களிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். எடுத்த காரியங்களைத் துணிச்சலுடன் செய்து முடிப்பீர்கள். நல்லோர்களின் தொடர்பு ஏற்படும். எதிர்பாராத செலவுகள் உண்டானாலும் தக்க வருமானம் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்புக்குத் தகுந்த ஊதியம் கிடைக்கும். சக ஊழியர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்காதீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சாதகமாகவே அமையும். கூட்டாளிகளுடன் சேர்ந்து செய்யும் கூட்டு முயற்சிகள் வெற்றியைத் தரும். விவசாயிகளுக்கு கொள்முதல் லாபம் நன்றாக இருக்கும். மாற்றுப்பயிர்களைப் பயிர் செய்து லாபத்தைப் பெருக்கலாம்.

அரசியல்வாதிகளைக் கட்சி மேலிடம் அலட்சியப் படுத்தும். கோபத்தைக் குறைத்துக்கொண்டு பணியாற்றவும். கலைத்துறையினர் புதிய வாய்ப்புகளைக் கடும் போட்டிகளுக்குப்பிறகே பெறமுடியும்.

பெண்மணிகள் கணவரை அனுசரித்து நடந்து கொள்ளவும். மாணவமணிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். படிப்பில் அதிக கவனம் செலுத்தவும்.

பரிகாரம்: குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 14,15.

சந்திராஷ்டமம்: இல்லை.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.