வடக்கின் பெருஞ்சமர்: இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்கப் போராடும் சென். ஜோன்ஸ் அணி- (வீடியோ)

0
308

112 ஆவது வடக்கின் பெருஞ்சமர் வருடாந்த மாபெரும் கிரிக்கெட் போட்டியில் சென். ஜோன்ஸ் அணி இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்கப் போராடி வருகிறது.

111 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் சென்.ஜோன்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 4 ஓட்டங்களை ஆட்டநேர முடிவில் பெற்றிருந்தது.

யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் சென். ஜோன்ஸ் அணி 217 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலளித்தாடிய யாழ். மத்திய கல்லூரி அணி இரண்டாம் நாளான இன்று சகல விக்கெட்டுகளையும் இழந்து 328 ஓட்டங்களைக் குவித்தது.

111 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த சென்.ஜோன்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 4 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டம் முடிவுக்கு வந்தது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.