அதிசயமான ஏழு வெந்நீரூற்றுக்கள்

0
789

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையில் அமையப் பெற்றுள்ளதே, இந்த ஏழு வெந்நீரூற்றுக்கள் ஆகும்.

சுற்றுலாப் பயணிகளை அதிகமாகக் கவரும் இடங்களில் இவையும் பிரதான இடத்தை பிடித்துள்ளன என்றே கூறவேண்டும்.

image_ead814e5f0இவற்றின் சிறப்பம்சம் யாதெனில், ஒவ்வொரு கிணறுகளும் வெவ்வேறு வெப்பநிலையுடன் விளங்குவதோடு எப்பொழுதுமே இவற்றில் நீர் வற்றுவதே இல்லை.

இத்தகைய சிறப்புக்களைகொண்டு விளங்குகின்றமையினாலேயே, இப்பகுதியை உள்ளுர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் சென்று பார்வையிட தவறுவதே இல்லை.

image_f0d059a6e4இந்த வெந்நீரூற்றுக்களை பார்வையிடவும் மற்றும் இவற்றில் நீராடுவதற்கும் கட்டணமுறைப்படி அனுமதிகள் வழங்கப்படுகின்றன.

மேலும் இந்த ஏழு கிணறுகளிலும் நீராடுவதினால், தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கிவிடும் என்ற நம்பிக்கையும் உள்ளுர்வாசி மக்களிடையே நிலவி வருகின்றது.

image_6a3d3ff6d2ஒவ்வொரு கிணறுகளும் 3 மற்றும் 4 அடி ஆழம் உடையவையாகும். அத்துடன் இப்பகுதியை சூழ விகாரையும் கோயிலும் காணப்படுவதினால், இங்கு அமைதி கட்டாயமாகப் பேணப்படுகின்றது.

ஒவ்வொருவரும் நிச்சயமாக சென்று பார்வையிட வேண்டிய இடங்களில் இந்த ஏழு வெந்நீர் கிணறுகளும் முக்கியமானவையாகும்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.