மட்டக்களப்பில் கத்திக் குத்துக்கு இலக்காகி ஒருவர் படுகொலை!

0
776

மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்வாபுரம் கிராமத்தில் நேற்று இரவு (02-03-2018) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சம்பவத்தில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வெல்லாவெளிப் பொலிசார் தெரிவித்தனர்.

செல்வாபுரம் கிராமத்தில் நேற்று இரவு இடம்பெற்ற தகராற்றில் செல்வாபுரம் இரண்டாம் வட்டாரத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான மயில்வாகனம் கமலேஸ்வரன் (வயது 49) என்பவர் கத்திக் குத்துக்கிலக்காகி ஸ்தலத்திலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் தொடர்பில் அதே கிராமத்தைச் சேர்ந்த 24 வயதுடைய கேதீஸ்வரனும், அவருடைய சகோதரன் ஒருவரும் பொலிசாரால் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…..

கமலேஸ்வரனின் வீட்டுக்கு அருகில் குடியிருக்கும் கேதீஸ்வரன் என்பவர் கமலேஸ்வரனை அழைத்துக் கொண்டு வெளியில் சென்றுள்ளார்.

இவ்வாறு சென்றவர்கள் மது அருந்தி விட்டு கமலேஸ்வரனை அழைத்துக் கொண்டு வயல் வெளி ஒன்றில் வைத்து கூரிய கத்தியினால் வெட்டிக் கொலை செய்துள்ளார்.

கமலேஸ்வரனை கொலை செய்து விட்டு தனது கையில் சிறியதொரு காயத்தை கேதீஸ்வரன் ஏற்படுத்திவிட்டு அவ்விடத்திலே கிடந்து அலறிக் கத்தியுள்ளார்.

பின்னர் அவ்விடத்திற்கு விரைந்த பொதுமக்கள் இருவரையும் மீட்டுள்ளனர். பின்னர்தான் கேதீஸ்வரன் கொலை செய்து விட்டு தான் தப்பித்துக் கொள்வதற்காக இவ்வாறு செயற்பட்டுள்ளார் என அவ்விடத்திலிருந்து அவதானித்தவர்கள் தெரிவித்தனர்.

கமலேஸ்வரனுக்கும், கேதீஸ்வரனுக்கும் இடையில் மிக நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சனைகள் காரணமாக இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

IMG_1634 (1)IMG_1665 (1)IMG_1672ZZ (1)

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.