“இந்த வாரம் எந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகிறார்கள்?”

0
1227

 ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் அவர்கள் 12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (மார்ச் 2 – மார்ச் 8) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன்பெறுங்கள்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

சுறுசுறுப்பாக இயங்குவீர்கள். உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். பொருளாதார நிலைமை நன்றாக இருக்கும். பாராமுகமாக இருந்த நண்பர்கள் மனம் மாறி நட்பு பாராட்டுவார்கள்.தேக ஆரோக்கியம் சீராகவே இருக்கும். குடும்பத்தாருடன் அன்பு, பாசம் மேலோங்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத ஊதிய உயர்வு கிடைக்கும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். வியாபாரிகளுக்கு கொள்முதல் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நண்பர்களைக் கலந்தாலோசித்து புதிய முயற்சிகளை செய்யலாம். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். கால்நடைகளின் மூலமாகவும் நல்ல லாபத்தை அடைவீர்கள்.

அரசியல்வாதிகள் புதிய செயல்களைச் செய்ய வேண்டாம். காரணம் உங்கள் செயல்களில் சிக்கல்கள் உருவாகலாம். கலைத்துறையினரைத் தேடி புதிய வாய்ப்புகள் வரும். பொருளாதார வசதிகளில் முன்னேற்றம் அடைவீர்கள். பெண்மணிகள் நிதானத்துடன் செயல்படவும். மாணவமணிகள் வருங்காலத்திற்காக செய்யும் பயிற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும்.

பரிகாரம்: “நமசிவாய’ என்று காலையிலும் மாலையிலும் தியானித்து வரவும்.

அனுகூலமான தினங்கள்: 2,3.

சந்திராஷ்டமம்: 8.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

கலகலப்பான வாரம். தீய பழக்கவழக்கங்களிலிருந்து விடுபடுவீர்கள், புதிய உற்சாகத்தைப் பெறுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உறவினர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவார்கள். உங்களின் எண்ணங்கள் அனைத்தும் செயல்வடிவம் பெற்று வெற்றிகளைக் கொடுக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு சிறு தொல்லைகள் கொடுத்து வந்த ஊழியர்கள் அடங்கி விடுவார்கள். பணவரவுக்கும் குறைவு இருக்காது. வியாபாரிகளுக்கு இது லாபகரமான வாரம். கொடுக்கல் வாங்கல்கள் சீராகவே இருக்கும். விவசாயிகளுக்கு இந்த வாரம் திருப்திகரமாக இருக்கும். உழைப்பிற்கு ஏற்ற பலன்களை அடைவீர்கள்.

அரசியல்வாதிகளின் முயற்சிகள் வெற்றி பெறாது. கவனமாக இல்லாவிட்டால் எதிர்கட்சிக்காரர்களின் தொல்லைகளைச் சந்திக்க நேரிடும். கலைத்துறையினர் புகழைத் தக்க வைத்துக்க கொள்வீர்கள். ஆனாலும் வாய்ப்புகள் சுமாராகவே வரும். பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். உடல்நலத்தில் கவனமாக இருக்கவும். மாணவமணிகள் உழைப்புக்கு ஏற்ற மதிப்பெண்களை அள்ளுவீர்கள். ஆசிரியர்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்.

பரிகாரம்: “தினமும் 108 முறை ” ஸ்ரீ ராமஜெயம்’ என்று எழுதி வரவும்.

அனுகூலமான தினங்கள்: 2,4.

சந்திராஷ்டமம்: இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

குதுகலமான வாரம். அலைச்சல் திரிச்சல் மாறி குடும்பத்தில் நிலவிவந்த இறுக்கமான சூழ்நிலை மாறும். பெற்றோர் திட்டமிட்ட செயல்கள் வெற்றிபெறும். உங்களின் பெயரும் புகழும் உயரும். பெரியோர்களின் ஆசியுடன் முக்கியமான வேலைகளைச் செய்து முடிப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் கவனம் செலுத்தவும். சக ஊழியர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரிகளுக்கு இது முன்னேற்றமான வாரம். புதிய வருமானத்தைப் பெறுவதற்கான வழிமுறைகளைத் தேடுவீர்கள்.விவசாயிகள் புதிய குத்தகைகளைப் பெறுவீர்கள். மகசூல் அதிகரித்து நல்ல லாபத்தை அள்ளுவீர்கள். கால்நடைகளாலும் நலம் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் கருத்துவேறுபாடுகள் ஏற்படும். மக்களுக்காக நீங்கள் செய்யும் போராட்டங்களைக் கட்சி மேலிடம் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும். கலைத்துறையினருக்கு அங்கீகாரமும் புகழும் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். பெண்மணிகளைத் தேடி இனிமையான செய்திகள் வந்து சேரும். மாணவமணிகளின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும்.

பரிகாரம்: சனிக்கிழமையன்று திருவேங்கடவனையும் பத்மாவதி தாயாரையும் சேவியுங்கள்.

அனுகூலமான தினங்கள்: 3,4.

சந்திராஷ்டமம்: இல்லை.

கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

கவனமாக இருக்க வேண்டிய வாரம். சிறு எதிப்புகள் உண்டாகும். ஆகவே, எதிலும் நிதானத்துடன் இருக்கவும். தந்தை வழி உறவினர்களால் சிறு பூசல்கள் உண்டாகலாம். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.  தொழில் முன்னேற்றத்திற்காக செய்யும் பயணங்களால் பலன் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைச் சுமை குறையும். மேலதிகாரிகளால் பாராட்டப் படுவீர்கள். வியாபாரிகள் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி அடைவீர்கள். கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். விவசாயிகளுக்கு கொள்முதலில் நல்ல லாபம் கிடைக்கும். விவசாய உதவியாளர்கள் உங்களுக்கு பயன்படுவார்கள்.

அரசியல்வாதிகளின் அந்தஸ்து உயரும். இதனால் புதிய பொறுப்புகளை ஏற்று நடத்துவீர்கள். கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். சக கலைஞர்களுடன் நட்புடன் பழகவும். பெண்மணிகள் விட்டுக்கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்கலாம். ஆன்மீக பலம் பெற ஆலயங்களுக்கு சென்று வருவீர்கள். மாணவமணிகள் அதிக மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

பரிகாரம்: குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 3,5.

சந்திராஷ்டமம்: இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். பொருளாதார நிலைமை நன்றாக இருக்கும். உங்கள் செயல்கள் அனைத்தும் வெற்றியை அதிகரிக்கும். சமுதாயத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சகஜ நிலையை தக்க வைத்துக் கொள்வீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாவீர்கள். ஆனால் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் அனைத்து இடையூறுகளையும் தகர்ப்பீர்கள். வியாபாரிகளைத் தேடிப் பலவகையிலும் லாபம் வரும். கூட்டாளிகளிடம் மனம் விட்டுப் பேசவேண்டாம். விவசாயிகளுக்கு தோட்டம், வயல் வரப்பு சம்பந்தப்பட வேலைகள் சுமுகமாக நடைபெறும்.

அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களின் ஆதரவு குறைவாகவே இருக்கும். அதேசமயம் எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு பாராட்டுகள் கிடைக்கும். லாபகரமான ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். பெண்களுக்கு இல்லத்தில் நிலவும் சூழ்நிலையில் நிம்மதியடைவீர்கள். மாணவமணிகள் கல்வியில் அக்கறை காட்டவும்.

பரிகாரம்:  “ராம் ராம’ என்று ஜபித்துக்கொண்டே “ஆஞ்சநேயரை’ சுற்றிவரவும்.

அனுகூலமான தினங்கள்: 4,5.

சந்திராஷ்டமம்: இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

சாதகமான வாரம். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். சுபச் செலவுகளைச் செய்வீர்கள். புதிய முயர்சிகளுக்கு செயல் வடிவம் கொடுக்க முயல்வீர்கள். உடல் நலத்தில் கவனம் செலுத்தவும். தேவையற்ற செலவுகளைக் குறைக்கவும்.

உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வைப் பெறுவீர்கள். திட்டமிட்ட வேலைகளைச் செய்து முடிப்பதில் காலதாமதம் ஏற்படும். வியாபாரிகள் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வெற்றியடையலாம். கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். விவசாயிகளுக்கு மகசூல் மந்தமாகவே இருக்கும். புதிய குத்தகைகளை எடுக்க வேண்டாம்.

அரசியல்வாதிகள் கவனமாகச் செயல்படவும்.. உங்களுக்கு சம்பந்தமில்லாத செயல்களில் ஈடுபட்டு பெயரைக் கெடுத்துக்கொள்ள வேண்டாம். கலைத்துறையினர் புதிய முயற்சிகளை நன்றாக ஆலோசித்து செயல்படுத்தவும். நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பெண்மணிகளுக்கு குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். மாணவமணிகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். படிப்பில் போதிய அக்கறை காட்டவும்.

பரிகாரம்: பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 5,6.

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

உற்சாகமான வாரம். சந்தோஷம் தரும் செய்திகள் உங்களைத் தேடி வரும். சிந்தனைகளால் உயர்வடைவீர்கள். திட்டமிட்ட வேலைகளில் குதூகலத்துடன் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தோர் வழியில் சோதனைகள், கருத்துவேறுபாடுகள் உண்டாகும். அவசியமான பயணங்களையே செய்யவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகள் அனைத்தும் சுமுகமாக முடியும். திருப்திகரமான வருமானம் கிடைக்கும்.

வியாபாரிகள் நல்ல முறையில் விளைபொருள்களை விற்பனை செய்வீர்கள். மற்றபடி கூட்டாளிகளை அனுசரித்துச் செல்லவும். விவசாயிகள் புதிய குத்தகைகளை நாடிச் செல்ல வேண்டாம். உங்கள் கைப்பொருள்களைத் தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்கவும்.

அரசியல்வாதிகளின் அந்தஸ்து உயரும். பெயரும் புகழும் அடைவீர்கள். கலைத்துறையினர் புதிய வாய்ப்புகள் பெறுவர். உடனிருப்போரை அனுசரித்துச்செல்லவும்.

பெண்மணிகள் கணவரை அனுசரித்து நடந்து கொள்ளவும். தாயின் உடல்நலனில் கவனம் செலுத்தவும். மாணவமணிகள் கல்வியில் உயர்ந்த இடத்தைப் பெறுவதற்கு இது உகந்த காலம். ஆகவே தேர்வுக்காகத் திட்டமிட்டு படிக்கவும்.

பரிகாரம்: பிள்ளையாருக்கு அருகம்புல்லினால் அர்ச்சனை செய்யவும்.

அனுகூலமான தினங்கள்: 3,6.

சந்திராஷ்டமம்: இல்லை.

}
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

மகிழ்ச்சிகரமான வாரம். புத்திசாலித்தனத்துடன் செயல்படுவீர்கள். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். சமூகத்தில் உங்கள் மதிப்பு மரியாதை உயரும். ஆனாலும் உடல்நல பாதிப்பால் மருத்துவச் செயலவுகள் செய்ய நேரிடும். சிலருக்கு கடன் வாங்க நேரிடலாம்.

உத்தியோகஸ்தர்களின் ஆற்றல் அதிகரிக்கும். தைரியத்துடன் எதையும் சாதிப்பீர்கள். வியாபாரிகளுக்கு கடன் குறையும். கூட்டாளிகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். அதோடு புதிய சந்தைகளை நாடிச் செல்வீர்கள். விவசாயிகளுக்கு லாபம் அதிகரிக்கும். சந்தையில் நிலவும் போட்டிகளைச் சாதுர்யமாக சமாளிப்பீர்கள்.

அரசியல்வாதிகளின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த மதிப்பும் அங்கீகாரமும் பெறுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும்.பெண்மணிகளின் உடல் நலம் பாதிக்கப்படலாம். மாணவமணிகளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய பெற்றோர்கள் முன்வருவார்கள். ஆசிரியர்களும் உதவிகரமாக இருப்பார்கள்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமையன்று பெருமாள் கோயிலுக்குச் சென்று தாயாரை வழிபடவும்.

அனுகூலமான தினங்கள்: 4,7.

சந்திராஷ்டமம்: இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

சாதகமான வாரம். பொருளாதார முன்னேற்றத்திற்கு வழி பிறக்கும். செய்தொழிலில் ஏற்படும் பிரச்னைகளுக்கு புத்திசாலித்தனத்துடன் தீர்வு காண்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி நிலவும். குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவார்கள். உங்கள் மதிப்பு மரியாதை உயரும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் ஒத்துழைப்போடு நடந்து கொள்ளவும். பணவரவு அதிகரிக்கும். வியாபாரிகள் அனுகூலமான திருப்பங்களை எதிர்பார்க்கலாம். கவனமாக இருந்தால் வீண் விரயங்களைத் தவிர்க்கலாம். விவசாயிகள் அதிக மகசூலைக் காண்பீர்கள். வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக்கொள்வீர்கள்.

அரசியல்வாதிகள் எதிரிகளிடம் கவனமாக இருக்கவும். சூழ்நிலைக்குத் தகுந்தவாறு நடந்து கொண்டால் அலைச்சலைத் தவிர்க்கலாம்.  கலைத்துறையினர் தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். ரசிகர்களின் ஆசைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். பெண்மணிகளுக்கு குடும்பத்தில் அன்பு பாசம் அதிகரிக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். மாணவமணிகள் கல்வியில் முன்னேறக் கடுமையாக உழைக்கவும்.

பரிகாரம்: மஹாலட்சுமியை வணங்கி நலம் பெறுங்கள்.

அனுகூலமான தினங்கள்: 3,7.

சந்திராஷ்டமம்: இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

உற்சாகமான வாரம். கவலைகள் மறையும். உங்களின் எல்லா செயல்களும் நேர்த்தியாக முடியும். உங்கள் ஆற்றலும் தைரியமும் அதிகரிக்கும். சகோதர, சகோதரி வகையில் சிறப்புகள் உண்டாகும். வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். பொருளாதாரம் மேம்படும்.

உத்தியோகஸ்தர்கள் அனைத்து வேலைகளையும் திருப்திகரமாக முடிப்பீர்கள். வருமானம் படிப்படியாக வளரும். வியாபாரிகள் வருமானத்தைப் பெருக்குவீர்கள். போட்டி, பொறாமைகள் சற்று கூடுதலாக இருப்பதால் அனைத்து விஷயங்களிலும் சற்று கவனமாக இருக்கவும். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். சிலர் புதிய உபகரணங்களையும் கால்நடைகளையும் வாங்குவார்கள்.

அரசியல்வாதிகள் எடுத்த காரியங்களில் வெற்றியடைவீர்கள். அதனால் கட்சியில் முக்கியப் பொறுப்புகளைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பணவரவுக்குக் குறைவு இருக்காது. பெண்மணிகளுக்கு கணவர், குடும்பத்தாரிடம் நன்மதிப்பு கிடைக்கும். மாணவமணிகள் விளையாட்டில் கவனத்தைக் குறைத்துக் கொண்டால் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறலாம்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமையன்று சூரியபகவானை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 5,8.

சந்திராஷ்டமம்: 2.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

மகிழ்ச்சிகரமான வாரம். நினைத்த வேலைகளை எந்த இடையூறுகளும் இல்லாமல் முடித்துவிடுவீர்கள். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வீடு, நிலம் போன்றவற்றில் இருந்த பிரச்னைகள் தீரும். குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்லவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு அனைத்து வேலைகளும் சந்தோஷமாக முடியும். ஊதிய உயர்வு கிடைக்கும். வியாபாரிகளைத் தேடி வாடிக்கையாளர்கள் வருவார்கள். இருப்பினும் வரவு செலவுகளை கவனத்துடன் செய்தால் எதிர்காலப் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். விவசாயிகள் உற்பத்திப் பொருள்களின் விற்பனையில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள்.  புதிய முதலீடுகளுக்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் மதிப்பு மரியாதை உயரும். பண வரவு சீராகவே இருக்கும். கலைத்துறையினரின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். தொழிலில் மேலும் முன்னேற்றம் அடைவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பெண்மணிகளுக்குக் கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். மாணவமணிகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். இதனால் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

பரிகாரம்: அம்பாளை வழிபட்டு நலன் பெறுங்கள்.

அனுகூலமான தினங்கள்: 2,8.

சந்திராஷ்டமம்: 3,4.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய) 

திருப்திகரமான வாரம். திட்டமிட்ட வேலைகளை விரைவாக முடிப்பீர்கள். பூர்வீகச் சொத்து விஷயமாக இருந்து வந்த தடங்கல்கள் நீங்கும். குடும்பத்தில் மங்களகரமான நிகழ்ச்சிகள் நடக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆன்மிகத்தில் மனதைச் செலுத்துவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பேச்சைக் கேட்டு நடப்பீர்கள். பணவரவு சீராக இருக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். புதிய முதலீடுகளைச் செய்யலாம். விவசாயிகள் சலிப்பில்லாமல் உழைத்தால் அதற்கேற்ற பலன்களைப் பெறலாம். புதிய குத்தகை முயற்சிகளைத் தவிர்க்கவும்.

அரசியல்வாதிகளுக்கு சங்கடங்கள் குறையும். கட்சி மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சிலருக்கு விருது பெறும் யோகம் உண்டாகும். பெண்மணிகளுக்கு கணவருடன் ஒற்றுமை அதிகரிக்கும். யாரிடமும் மனம் திறந்து பேசவேண்டாம். மாணவமணிகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். வெளிவிளையாட்டுகளிலும் ஈடுபடலாம்.

பரிகாரம்: பார்வதி தேவியை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 3,8.

சந்திராஷ்டமம்: 5,6,7.

ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர்

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.