விடை தெரியாத வினாக்கள் ஏராளம்!

0
432

நடிகை ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பாக துபாய் பொலிசார் விளக்கம் அளித்திருந்தாலும் விடை தெரியாத கேள்விகள் ஏராளமாக இருக்கின்றன. ¨

துபாயில் திருமண நிகழ்ச்சிக்காக சென்ற ஸ்ரீதேவி குளியலறையில் இறந்து கிடந்தார். முதலில் மாரடைப்பு ஏற்பட்டதால் ஸ்ரீதேவி இறந்ததாக கூறப்பட்டது.

பின்னர் மதுபோதையில் குளியல் தொட்டியில் ஸ்ரீதேவி விழுந்து இறந்து விட்டதாக கூறப்பட்டு வருகிறது. இது தொடர்பாக இன்னமும் விசாரணை நடத்தப்பட்டும் வருகிறது.

இதனிடையே ஸ்ரீதேவியின் மரணத்தை முன்வைத்து பல்வேறு விடை தெரியாத கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.

இந்த கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் போதுதான் ஸ்ரீதேவியின் மரணம் பற்றிய உண்மைகளும் தெரிய வரும்.

• ஸ்ரீதேவி தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு போனி கபூர் எத்தனை மணிக்கு வந்தார்? எத்தனை மணிக்கு ஸ்ரீதேவி மரணம் தொடர்பாக பொலிசாருக்கு போனி கபூர் தெரிவித்தார்?

ஸ்ரீதேவியின் மரணம் எத்தனை மணிக்கு நிகழ்ந்தது? குளியல் தொட்டியில் விழுந்து இறந்தார் எனில் ஏற்கனவே அதில் தண்ணீர் நிரப்பப்பட்டு இருந்ததா?

• ஸ்ரீதேவி இறந்து கிடந்ததாகக் கூறப்படும் குளியல் அறையின் கதவை போனி கபூர் எப்படி உடைத்தார்? அல்லது அந்தக் கதவு திறந்தே கிடந்ததா?

• ஸ்ரீதேவி மது அருந்தி இருந்தார் என கூறப்படுகிறது. மது போத்தல், மது குடிக்கும் கிளாஸ் ஆகியவை ஸ்ரீதேவி அறையில் இருந்தனவா?

• குளியல் தொட்டியில் ஸ்ரீதேவி விழுந்து நீரில் மூழ்கி இறந்தார் என கூறப்படுகிறது. அப்படியானால் குளியல் தொட்டியில் இருந்த தண்ணீர் வெளியேறி அறைக்குள்ளும் அந்த தளத்திலும் ஓடியதா?

• குளியல் தொட்டியில் விழுந்து இறந்தார் எனில் ஸ்ரீதேவியின் தலையில் காயம் ஏதும் இருந்ததா? ஸ்ரீதேவியின் மரணம் சர்ச்சையாகும் நிலையில் அவரது கைத்தொலைபேசி எண்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டதா? இத்தனை கேள்விகளுக்கு எப்போதுதான் கிடைக்கும்?

இது இவ்விதமிருக்க, நடிகை ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஸ்ரீதேவி மரணம் தொடர்பாக ஊடகங்களுக்கு சுப்பிரமணியன் சுவாமி இதனைத் தெரிவித்துள்ளார்.

“ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டிருக்கலாம். உடல் நலனில் அக்கறை கொள்ளக் கூடிய ஸ்ரீதேவிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததே இல்லை.

ஒருவேளை ஸ்ரீதேவிக்கு யாரேனும் வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றினார்களா? அதேபோல் குளியல் தொட்டியில் விழுந்து ஒருவர் மரணமடைய வாய்ப்பு இல்லை.

குளியல் தொட்டியில் யாரேனும் தள்ளி மூச்சுவிட முடியாதபடி அழுத்தினால்தான் மரணம் ஏற்படும். ஸ்ரீதேவி தங்கியிருந்த ஹோட்டல் அறையின் சிசிரிவி கேமராக்களில் என்ன பதிவாகி உள்ளது?

ஸ்ரீதேவி மாரடைப்பால்தான் இறந்தார் என திடீரென மருத்துவர்கள் கூறியது ஏன்? சினிமா நடிகைகளுக்கும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுக்கும் உள்ள தொடர்புகள் குறித்து விசாரிக்க வேண்டும்”.

இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

இதேவேளை மரணமடைந்த ஸ்ரீதேவியின் தலையில் உள்ள காயம் குறித்து மீண்டும் விசாரணை செய்ய துபாய் அரசு வழக்கறிஞர் பரிந்துரை செய்துள்ளதாக சில ஊடகங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

துபாய் அரசு வழக்கறிஞரின் ஒப்புதல் கிடைக்காததால் ஸ்ரீதேவி உடல் மும்பை வருவதில் தாமதம் ஏற்பட்டது.

துபாய் சட்டவிதிமுறைகள்படி வெளிநாட்டவர் யாரவது மருத்துவமனைக்கு வெளியே இறந்துவிட்டால், மரணம் குறித்து பொலிஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தடயவியல் சோதனை நடத்தப்படும்.

அதன் பின் ‘எம்பாமிங்’ செய்யப்பட்டு, அவரது நாட்டுக்கு அனுப்பப்படும், அந்த நடைமுறைதான் ஸ்ரீதேவி விவகாரத்திலும் பின்பற்றப்பட்டது.

நடிகை ஸ்ரீதேவியின் தலையின் பின்புறத்தில் ஆழமான காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து காயம் குறித்து மீண்டும் விசாரணை செய்ய துபாய் அரசு வழக்கறிஞர் பரிந்துரை செய்துள்ளதாக ஊடகங்களில் வெளியான தகவல்கள் தெரிவித்தன.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.