பச்சை நிற ஆடையில் ஜொலித்த ஸ்ரீதேவி! – கடைசி தருணங்கள்

0
655

தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீதேவி (54) துபாயில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். ஸ்ரீதேவி மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

2c37aa65-eb18-4bdb-8380-9df9435d7433_111811ஸ்ரீதேவி, அவரின் கணவர் போனி கபூர் மற்றும் மகள் குஷி ஆகியோர், துபாயில் நடந்த அவர்களின் உறவினர் மோஹித் மார்வா இல்ல திருமண விழாவிற்கு சென்றிருந்தனர்.

அந்த திருமண நிகழ்வில் ஸ்ரீதேவி பச்சை நிற உடையில் ஜொலிஜொலித்தார். இதுவே ஸ்ரீதேவி கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சி ஆக மாறிவிட்டது.

DW2qTrvW0AAZAV4_11252திருமண நிகழ்ச்சி முடிந்து, தான் தங்கியிருந்த அறைக்கு சென்ற ஸ்ரீதேவிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

துபாய் நேரப்படி 11.30 மணியளவில் நடிகை ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்ததாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

669dd34b-dcce-471e-95d2-6cae00a9410f_11222இந்நிலையில், ஸ்ரீதேவி கடைசியாக கலந்து கொண்ட அந்த திருமண விழாவில் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.