இந்த விபத்தை பார்த்த பின்னர் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம் இதுதான்!

0
452

வாகன ஓட்டிகளின் அஜாக்கிரதையால் ஏராளமான விபத்துக்கள் நடக்கின்றன. அந்த வகையில், இப்போது பார்க்கப்போகும் வீடியோவில் ஒரு விஷயத்தை நாம் தெரிந்து கொள்வது அவசியம்.

வாகன ஓட்டுனர்களின் அஜாக்கிரதையான செயல்களால்தான் அதிக அளவிலான விபத்துக்கள் ஏற்பட காரணம்.

அந்த வகையில், இந்த வீடியோவில் கார் ஒன்று சாலையின் குறுக்கே நுழைய விழைகிறது.

அப்போது அந்த வழியாக வரும் ஸ்கூட்டரை ஓட்டியவர், கார் மீது மோதாமல் இருப்பதற்காக திடீரென பிரேக் பிடித்து நிறுத்த முயல்கிறார்.

xscooter-accident-03-1519460959.jpg.pagespeed.ic.5guGoMhfP4ஆனால், எதிர்பாராதவிதமாக பிரேக் பிடித்தவுடன் ஸ்கூட்டர் தலைக்குப்புற கவிழ்ந்துவிடுகிறது.

இதில், அந்த ஸ்கூட்டரில் வரும் சிறுமி உள்பட மூன்று பேர் கீழே விழந்து விடுகின்றனர். அதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு பெரிய அளவிலான காயங்கள் இல்லாமல் எழுந்து விடுகின்றனர்.

ஆனால், அதன்பிறகு ஸ்கூட்டரை தூக்க அந்த குடும்பஸ்தர் முற்படுகிறார். அப்போதுதான் அந்த ஆச்சரியமான சம்பவம் நடக்கிறது.

xscooter-accident-11-1519461048.jpg.pagespeed.ic._nMBD7ix_Gஎதிர்பாராதவிதமாக, அந்த ஸ்கூட்டர் நிமிர்த்தும்போது ஆக்சிலரேட்டர் மீது கை பட்டவுடன் அந்த ஸ்கூட்டர் சீறிப் பாய்ந்து ஓடத் துவங்குகிறது.

அந்த ஸ்கூட்டரை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் அந்த குடும்பஸ்தர் தோல்வியடைந்து விட்டு விடுகிறார்.

தானாக ஓடும் அந்த ஸ்கூட்டர் அந்த சாலையில் பின்னால் வரும் ஒரு வாகனத்துடன் மோதி கீழே விழுகிறது.

மிக அரிதான இந்த சம்பவ வீடியோவை பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சியும், ஆச்சரியமும் மிஞ்சுகிறது.

ஏனெனில், ஸ்கூட்டர் தானாக ஆக்சிலரேட்டர் முறுக்கிக் கொண்டு ஓடுவதுதான்.

இந்த சம்பவத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம், ஸ்கூட்டர் உள்ளிட்ட இருசக்கர வாகனங்கள் கீழே விழந்துவிட்டால், முதலில் எஞ்சினை ஆஃப் செய்த பின்னரே தூக்க வேண்டும்.

சில வேளைகளில் ஆக்சிலரேட்டர் கைப்பிடியில் ஏதேனும் பிரச்னை இருந்தால் இதுபோன்று நடப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

ஸ்கூட்டர், பைக் கீழே விழுந்தால் இனி கவனமாக கையாளுங்கள். இந்த விபத்திற்கு ஸ்கூட்டரின் சக்கரங்கள் திடீரென பூட்டிக் கொள்வதும் காரணமாக தெரிகிறது.

ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இருந்தால், இதுபோன்ற விபத்துக்கள் தவிர்க்க முடியும். ஒரு நிமிடத்தில் நடந்து முடிந்தவிட்ட இந்த சம்பவத்தின் சிசிடிவி வீடியோ பதிவுகளை இப்போது பாருங்கள்.

நிச்சயம் இருசக்கர வாகனங்களை ஓட்டும்போதும், கீழே விழுந்தால் தூக்கும்போது எந்த அளவுக்கு கவனமாக இருக்க வேண்டும் என்பது புரியும்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.