விடுதலைப் புலிகள் ஓர் ‘கிறிமினல்’ அமைப்பாகும்? – சுவிற்சலாந்து வழக்குத் தொடுனர் நீதிமன்றத்தில் தெரிவிப்பு!!

0
2241

 

தற்போது சுவிற்சலாந்தின் பெலின்ஸோனா (Bellinzona) குற்றவியல் நீதிமன்றத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பினர் குற்றச் செயல்களை மேற்கொள்வதற்காக அங்குள்ள தமிழர்களிடம் அவை குற்றம் எனத் தெரிந்தும் பலாத்காரமாக பணங்களை வசூலித்ததோடு பயங்கரவாதத்திற்குத் துணை புரிந்தார்கள் என வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இவ் வழக்கு நிருபிக்கப்பட்டால் விடுதலைப்புலிகள் அமைப்பு அங்கும் தடை செய்யப்படுவதோடு பலர் சிறை செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் இவ் அமைப்பு அந்த நாட்டில் குற்றச் செயல்களைப் புரியவில்லை என்பதால் அந்த நாட்டில் புலிகளைத் தடை செய்ய முடியாத என கடந்த கால வாதங்கள் அமைந்தன.

வழக்குத் தொடருநரான யூலியட் நொற்றோ (Juliette Noto) அவர்களின் கருத்துப்படி சுமார் 12 பேர் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை நன்கு அறிந்திருந்தும் மௌனமாக இவை தொடர்பாக செயற்பட்ட ராஜதந்திரிகளுக்குத் தெரியப்படுத்தாமல் செயற்பட்டார்கள்.

இதன் அடிப்படையில் இதில் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரும் இக் குற்றத்தில் ஈடுபட்ட அமைப்பினை ஆதரித்தமையால் குற்றவாளிகள் எனக் காணப்பட வேண்டும் என அவர் வாதிட்டார்.

உலகத் தமிழர் இணைப்புக் கமிட்டியின் (World Tamil Cordinating Committee -WTCC) தலைவர் எனப்படுபவரின் செயற்பாடுகள் குறித்து விபரிக்கையில் அவரே இச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துபவராகவும், விடுதலைப்புலிகளின் சுவிற்சலாந்திற்கான இணைப்பாளராகவும் செயற்பட்டுள்ளார்.

இவரது பயமுறுத்தல்கள் குறித்து புலம்பெயர் தமிழருக்கு விளக்கத் தேவையில்லை. அவரது பிரசன்னம் மட்டுமே பணம் கொடுத்தலின் அவசியத்தை உணர்த்தி விடும்.

உலகத் தமிழர் அமைப்பின் நிதியாளரான இவரின் கோரிக்கைக்குப் பணம் வழங்காதவர்களின் விபரங்களை வைத்திருந்த அவர் வைத்திருந்தார்.

4இவரிடம் ஈவிரக்கம் இல்லாதது மட்டுமல்ல பயமும் ஏற்படுத்தும் குணாம்சங்களும் உண்டு. அத்துடன் பணம் வழங்காதவர்களின் விபரங்களை இலங்கைக்கு அனுப்பி அவர்களின் குடும்பங்களைப் புலிகளின் மூலம் பயமுறுத்தி வந்தார்.

இவர் இந்த மொத்த செயற்பாட்டுப் பொறிமுறையில் மிக முக்கியமான பகுதியாகச் செயற்பட்டார்.

உலகத் தமிழர் அமைப்பின் நான்காவது தரத்தில் உள்ளவர் அதன் செயலாளரும், நிதிப் பொறுப்பாளருமாகும். இவர் ஒரு ‘சகலகலா வல்லவன்.’ இவர் சகலவற்றையும் அறிந்திருந்தார்.

அதாவது உலகத் தமிழர் அமைப்பினையும், விடுதலைப்புலிகளுக்குப் பணம் செல்லும் கம்பனிகள் மற்றும் பலவற்றை மறைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

வழக்குத் தொடுநரின் கருத்துப்படி கடன்களைப் பெறுவதற்கென நிதிக் கம்பனிகளுக்கும், கொடுக்கல் வாங்கல்களை மறைப்பதற்கும், பணத்தை வெளியில்

அனுப்புவதற்கும், ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்கும் ஐவர் தரகர்களாகச் செயற்பட்டுள்ளனர். சிலர் இலங்கையிலுள்ள குடும்பங்களைப் பயமுறுத்தி இவர்களைச் செயற்பாட்டில் இணைத்துள்ளனர்.

பணங்களைத் திரட்டும் செயற்பாடுகள் குறித்துத் தெரிவிக்கையில் புலம்பெயர் தமிழர்களிடம் பணம் பெறுவதோ அல்லது அதனை உரிய இடத்தில் ஒப்படைப்பதோ பெரிய பிரச்சனையாக இருப்பதில்லை.

ஏனெனில் உலகத் தமிழர் பேரவை உருவாக்கியுள்ள ஒழுங்குமுறை, அதன் பயமுறுத்தும் ஒடுக்குமுறை அப் பணத்தைத் திரட்டப் போதுமானது.

சுவிற்சலாந்தின் சட்ட மா அதிபர் ஜெரார்ட் சூட்பின் (Gerard Sautebin) இவர்கள் பயன்படுத்திய கடன் பெறும் பொறிமுறையை தனித்தனியாக கட்டவிழ்த்துக் காட்டினார்.

வங்கியிலிருந்து மிகப் பெரும் தொகையான பணங்களைப் பெறுவதற்கு உலகத் தமிழர் பேரவை உருவாக்கிய கடன் பெறும் வழிமுறை என்பது வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனை அதிகாரிகளுக்கும், தரகர்களுக்கும் இடையேயுள்ள சிக்கல் நிறைந்த உறவு ஆகும்.

இந் நீதிமன்ற விவாதங்களின் பின்னணியில் உலகத் தமிழர் பேரவை அதிகாரிகளுக்கும், கடன் பெறுபவர்களுக்கும் அதற்கான ஆலோசனை வழங்கிய வங்கி அதிகாரிகள், தரகர்கள் என்போரின் சூழ்ச்சி நிறைந்த உறவுகளை நீதிபதி கவனத்தில் எடுத்தார்.

வங்கி அதிகாரி அதாவது வாடிக்கையாளர்களின் தரவுகளைப் பெறும் அவர், அவற்றின் உண்மைத் தன்மையைக் கண்டறியாமல் சிபார்சுகளை மேற்கொண்டுள்ளார்.

இதன் விளைவாக மிகவும் கெட்டித்தனமான விதத்தில் மோசடி நடத்தப்பட்டு சுமார் 14 மில்லியன் சுவிஸ் பிராங்க் கடன் வழங்கப்பட்டுள்ளது.

ஒட்டு மொத்தமாக இதுவரை 1.192 மில்லியன் நஷ்டமும் ஏற்பட்டுள்ளது. இவ்வளவு பெரும் தொகையில் ஒரு வங்கி இழப்பை இதுவரை ஏற்படுத்தவில்லை.

இது நிதித்துறை சட்டவாக்கத்திலுள்ள குறைபாடுகளும், குற்றவியல் அமைப்புகளிற்கான ஆதரவுச் செயற்பாடுகளுமே காரணமாகும்.

குற்றவியல் அமைப்பு (Criminal Oranization) என்பதற்கு சுவிற்சலாந்து குற்றவியல்துறை விளக்கம் எதுவேனில், மிகவும் ஒழுங்கமைப்பட்டதாகவும், நீண்டகாலம் செயற்படுவதாகவும், தத்தமது சட்டத்திற்கு ஏற்ப மிகவும் மதித்து செயற்படுவதாகவும், செயற்பாடுகளைப் பிரித்து வழங்கியதாகவும், தமது குற்றச் செயல்களை இரகசியத்துடன் பேணுவதாகவும் காணப்படும் அமைப்பு எனக் கூறுகிறது.

இவ் விளக்கம் உலகத் தமிழர் பேரவைக்கும், விடுதலைப் புலிகளுக்கும் தெளிவாகப் பொருந்துகிறது.

விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை சமாதான காலத்தில் அதாவது 2002ம் ஆண்டு பெப்ரவரி முதல் 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் வரையான காலப் பகுதியையும், அதன் பின்னரான போர் நிறைந்த 2009ம் ஆண்டு மே வரையான காலப் பகுதியையும் கவனத்தில் எடுத்தால் அதுவும் அக் காலத்தில் வெளியான அறிக்கைகளைக் கவனித்தால் இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தமது அரசியல் எதிரிகளையும், படுகொலைகளையும் விடுதலைப்புலிகள் மேற்கொண்டுள்ளனர்.

குறிப்பாக இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் வாழ்ந்த முஸ்லீம் மக்கள் அகற்றப்பட்டார்கள். இக் காலப் பகுதியில் இரண்டு அமைச்சர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

2005ம் ஆண்டிற்கும் 2009ம் ஆண்டிற்குமிடையே இடம்பெற்ற போர்க் காலத்தை எடுத்துக் காட்டி சுயநிர்ணய உரிமையை புலிகள் மீறியுள்ளதாகவும், தேசிய விடுதலை இயக்கம் என்பது சர்வதேச சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாக அமைதல் அவசியம் என்றார்.

விடுதலைப்புலிகள் அமைப்பு அவ்வாறான ஒன்று அல்ல எனவும், சர்வதேச சட்டங்களை மீறிக் குற்றச் செயல்கள் மூலம் செயற்பட்ட அமைப்பு என வழக்குத் தொடுநர் மேலும் விபரித்தார்.

வழக்குத் தொடர்ந்தும் நடைபெறுகிறது.

http://www.20min.ch/schweiz/news/story/Tamil-Tigers-ist-eine-kriminelle-Organisation-17420928

http://www.20min.ch/schweiz/news/story/Tamil-Tigers-ist-eine-kriminelle-Organisation-17420928

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.