ராஜம்மாள்… ஜெயலலிதா மரணத்தின் மர்மத்தை உடைப்பாரா?

0
274

ஜெயலலிதா மரணத்தின் சல்லி வேரை தேடிக்கொண்டிருக்கிறது ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷன். டாக்டர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வந்த விசாரணைக் கமிஷன் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.

ஜெயலலிதா வீட்டில் பணி செய்யும் ஊழியர்களை விசாரணைக்கு அழைத்திருக்கிறது. போயஸ் கார்டன் வீட்டில் சமையல் செய்யும் ராஜம்மாளை நாளை விசாரணைக்கு அழைத்திருக்கிறார்கள்.

ஜெயலலிதாவின் கார் டிரைவர் ஐயப்பனை 23-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. ஏற்கெனவே கார்டனில் வேலை பார்த்த சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயனை விசாரணை செய்திருக்கிறார்கள்.

போயஸ் கார்டனில் வேலை பார்ப்பவர்களின் பட்டியலை ஜெயலலிதாவின் பி.ஜே பூங்குன்றன் விசாரணைக் கமிஷனிடம் முன்பே அளித்திருக்கிறார். அதன்படி ஒவ்வொருவராக விசாரணைக்கு அழைக்கப்பட்டு வருகிறார்கள்.

சமையல்காரர், வாட்ச்மேன், தோட்டக்காரர், அலுவலக உதவியாளர்கள், டிரைவர்கள், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் என வெளியே அதிகம் தெரியாத 15 பேர் போயஸ் கார்டன் வீட்டில் வசிக்கிறார்கள்.

ஜெயலலிதா மறைந்து ஓராண்டு கடந்தும் தொடர்ந்து வசித்துவருகிறார்கள். இளவரசியின் மகன் விவேக், இவர்களுக்கு இப்போதும் மாதாமாதம் சம்பளம் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.

ஜெயலலிதாவின் நிழல்போல இருந்த, அவருடைய தனிப் பாதுகாப்பு அதிகாரி (பி.எஸ்.ஓ) பெருமாள்சாமி, பி.ஏ. பூங்குன்றன் ஆகியோர்கூட போயஸ் கார்டன் வீட்டில் வசிக்கவில்லை.

ஆனால், சாதாரண வேலையாட்கள் அங்கேயே தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்குத் தங்கள் முதலாளி ஜெயலலிதா மரணத்தின் மர்மம் தெரியும் என்பதால், அவர்களை விசாரிக்க முடிவு செய்திருக்கிறது நீதிபதி ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷன்.

ஜெயலலிதா உள்பட கார்டனில் வசித்த மற்றும் வசிக்கும் முக்கியமானவர்கள் அனைவருக்கும் சமைத்துப் போட்டவர் ராஜம்மாள்.

74 வயதாகும் ராஜம்மாள், பல வருடங்களாக கார்டனிலேயே தங்கி சமையல் வேலை செய்துவருகிறார்.

கடந்த ஜூன் மாதம் போயஸ் கார்டன் வீட்டுக்குத் தீபா போனபோது, அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் சகோதரர் தீபக் ஆகியோருடன் தகராறு ஏற்பட்டது.

அந்த நேரத்தில், ராஜம்மாள்தான் வெளியே வந்து தீபாவிடம் பேசியிருக்கிறார். ‘‘ஏன் இங்கே வந்த… உன்னை ஏதாவது செய்திடுவாங்க…’’ என ராஜம்மாள் தன்னிடம் சொன்னதாக தீபா சொல்லியிருந்தார். கமிஷன் முன்பு ராஜம்மாள் என்ன சொல்லப்போகிறார் எனத் தெரியவில்லை.
jayacase2_19389

மணி என்பவரின் மகள் லட்சுமி, ஜெயலலிதாவின் சுற்றுப்பயணங்களில் அவரின் உதவியாளராக உடன் சென்றவர். தேர்தல் பிரசாரம் மற்றும் வெளியூர் நிகழ்ச்சிகளுக்கு ஜெயலலிதா ஹெலிகாப்டரில் சென்றபோது, அவருடன் லட்சுமியும் பயணம் செய்தார்.

லட்சுமியைப்போல, நிறைய இளம் வயதுப் பெண்கள் கார்டனில் வேலை பார்த்தார்கள். பிறகு, அங்கிருந்து அவர்கள் சென்றுவிட்டார்கள். லட்சுமி, தொடர்ந்து அங்கேயே வேலை செய்துவருகிறார்.

வாட்ச்மேன் உள்பட வடமாநிலப் பணியாளர்கள் சிலரும் ஜெயலலிதா வீட்டிலேயே தங்கியுள்ளனர். வெளியே அறியப்படாத இவர்கள், ஜெயலலிதாவைப் பற்றி என்ன சொல்லப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

jayacase1_19009

 

 

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.