ஈரோஸ் தலைவர் பாலகுமாருக்கு பிரபாகரன் வழங்கிய அனுமதி: பின்னர் வந்த எச்சரிக்கை!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 139)

0
1175

கட்டுப்பாடு எங்கே?

வடக்கு கிழக்கு மாகாண சபையில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அதிகாரத்திற்கு வந்ததும் அதன் உறுப்பினர்களின் அட்டகாசங்கள் மேலும் தீவிரமாகின.

ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தின் தொல்லைகள் தொடர்பாக ஏராளமான புகார்கள் இந்தியப் படையினருக்குச் சென்றன.

இந்திய அரசுடன் நெருக்கமாக இருந்த இயக்கம் என்பதனால் இந்தியப் படையினரால் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை.

ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தின் சில நடவடிக்கைகள் இந்தியப் படையின் தலையிலும் விழுந்தது. இதனால் இந்திய அமைதிப் படையின் மூத்த அதிகாரிகள் சிலர் ஈ.பி.ஆர்.எல்.எஃப் மீது அதிருப்தி கொண்டிருந்தனர்.

புலிகளுடன் இந்தியப் படையினர் சண்டையிட்டுக் கொண்டிருந்த போதும், புலிகளின் கட்டுப்பாடு, இராணுவ ரீதியான திட்டமிட்ட செயற்பாடுகள் தொடர்பாக அவர்கள் மீது இந்தியப் படையினருக்கு, குறிப்பாக, மூத்த அதிகாரிகள் சிலர் மதிப்பளித்தனர்.

இந்திய அமைதிப்படை அதிகாரிகள் பின்னர் தங்கள் அனுபவங்கள் தொடர்பாக எழுதிய நூல்களில் கூட தங்களுடன் இணைந்து நின்ற இயக்கங்களை மறந்தும்கூடப் பாராட்டவில்லை.

யாழ்ப்பாணத்தில் அசோகா ஹொட்டலில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தின் முக்கிய பிரமுகர்கள் தங்கியிருந்தனர். அவர்களுக்குப் பாதுகாப்பாகப் பெருந்தொகை உறுப்பினர்களும் தங்கியிருந்தனர்.

அசோகா ஹொட்டலில் மதுபான விடுதியும் இருந்தது. அந்த விடுதியில் மட்டும் மதுபானம் வாங்கியதில் பல இலட்சம் ரூபாய்கள் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தால் கடனாகச் செலுத்த வேண்டியிருந்தது.

மது அருந்துவதில் தவறில்லை. புலிகளின் இயக்கத்தை விடவும் ஏனைய இயக்கங்கள் மது அருந்துவதை ஓரளவு அனுமதித்தே இருந்தன.

ஆயினும் ஒரு வரன்முறைக்கு அப்பாலே மது அருந்துதல் மாறிவிட்டது. கட்டுப்பாட்டையே வேரறுக்கும் ஒன்றாக மது அருந்துதல் மாறிக்கொண்டிருந்தது.

மாலையானால் மது மயக்கம் என்று கூறுமளவுக்குப் பல உறுப்பினர்கள் மதுப்பழக்கத்திற்கு அடிமையானார்கள். அசோகா ஹொட்டலில் பெட்டி பெட்டியாக மதுப் பெட்டில்கள் வந்திறங்கின.

பெரிய இயக்கம் என்று காட்டுவதிலிருந்த அக்கறை கட்டுப்பாடான உறுப்பினர்களை வளர்த்தெடுப்பதிலும், பொறுப்புக்களில் அவர்களை அமர்த்துவதிலும் இல்லாமல் போனது.

கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டிப்பது, தண்டிக்க வேண்டிய நேரத்தில் தண்டிப்பது, தட்டிக்கொடுத்துத் தகுதியானவர்களை முன்னுக்குக் கொண்டுவருவது போன்றவற்றைச் செய்வதற்கு யாரும் இல்லை.

ஈ.பி.ஆர்.எல்.எஃப், ரெலோ போன்ற இயக்கங்களில் அப்போதும் போர்க்குணம் கொண்ட உறுப்பினர்கள் இருந்தனர். அவர்களைவிட கட்டுப்பாடற்ற உறுப்பினர்கள் தொகை மேலோங்கியதால் அவர்கள் ஓரம் கட்டப்பட்டனர்.

மக்களி;டம் நல்ல பெயர் எடுக்க முடியவில்லை. தூங்கள் இணைந்துநின்ற இந்தியப் படையினரிடத்திலும் மரியாதயைப் பெற முடியவில்லை. இரண்டும் கெட்டாண் நிலைக்குச் சென்றுவிட்டனர்.

இக்கட்டத்தில்தான் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படுவதற்கான அறிவிப்பு வெளியானது.

vnniaasநாடாளுமன்றத் தேர்தல்.

1988 பெப்ரவரியில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியானது.

நாடாளுமன்றத் தேர்தலை வடக்கு கிழக்கில் ஜனநாயகம் நிலவுவதாகக் காட்டடும் வகையில் நடத்தி முடிக்கத் திட்டமிட்டது இந்திய அரசு.

இதனையடுத்து சுவாரஸ்யமான இராஜதந்திர நடவடிக்கைகள் அரங்கேறத் தொடங்கின.

மாகாண சபையில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தினர் ஆளும் கட்சியாக இருந்தாலும், நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியினருக்கு முக்கிய பாத்திரம் வழங்க முடிவுசெய்தது இந்திய அரசு.

ஆப்போது கூட்டணியின் செயலதிபர் அமிர்தலிங்கம் தமிழ் நாட்டில் சென்னையிலிருந்த அரச விடுதியொன்றில் தங்கியிருந்தார்.

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டுக் கொழும்பு சென்று தேல்தலில் போட்டியிடும் நடவடிக்கைகளைக் கவனிக்குமாறு இந்திய அரசிடமிருந்து அமிர்தலிங்கத்திற்குத் தகவல் சென்றது.

அமிர்தலிங்கம் கொழும்பு விரைந்தார். அவரை இந்தியத் தூதர் திக்ஷித் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட ஈ.பி.ஆர்.எல்.எஃப், ரெலோ, ஈ.என்.டி.எல்.எஃப் ஆகிய இந்திய சார்பு இயக்கங்கள் போட்டியிட வேண்டும். புரச்சாரம் செய்யப் போதிய பாதுகாப்பை இந்தியப் படையினர் வழங்கும் என்று இந்தியா தரப்பில் கூறப்பட்டது.

ஈரோஸ் இயக்கத்தினரைத் தனியாகப் போட்டியிட வைக்கலாமென இந்திய தரப்பு முதலிலேயே முடிவுசெய்துவிட்டது. போட்டியிருந்தால்தான் வடக்கு-கிழக்கில் ஜனநாயகம் இருப்பதாக உலகுக்குக் காட்ட முடியும். இந்திய மக்களுக்கும் இந்தியப் படையின் சாதனையாக அதனைச் சுட்டிக்காட்ட முடியும்.

புளொட் இயக்கம் தனியாகப் போட்டியிடப் போவதாகக் கூறிவிட்டது. அப்போது புளொட் இயக்க நிலைப்பாடு தொடர்பாக இந்திய அரசு அத்தனை ஆர்வம் காட்டவில்லை. இந்திய அரசுப் பக்கமும் சாராமல் புலிகளின் பக்கமும் சாராமல் இலங்கை அரசின் உதவியுடன் புளொட் இயக்கம் செயற்பட்டுக்கொண்டிருந்தது.

கூட்டணியினரின் சின்னத்தில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட ஈ.பி.ஆர்.எல்.எஃப் அவ்வளவாக விரும்;பவில்லை. குறிப்பாக, வரதராஜப்பெருமாள் விரும்பவில்iலை.

அதேநேரம் இந்திய அரசின் ஆசீPர்வாதத்துடன் கூட்டணியினர் தனியாகப் போட்டியிட்டால் வடக்னு-கிழக்கில் தமக்கெதிராக கூட்டணியினருக்கே மக்கள் வாக்களித்துவிடக் கூடும் என ஈ.பி.ஆர்.எல்.எஃப் அஞ்;சியது.

கூட்டணியினரைத் தனியாகப் போட்டியிட வைப்பதைக் காட்டிலும், அவர்களுடன் சேர்ந்து வேலையைக் காட்டினால் என்ன? என யோசித்து ஈ.பி.ஆர்.எல்.எஃப்.

இந்திய அரசும் பொதுப் பட்டியல் விடயத்தில் உறுதியாக நின்றதால் அக் கட்டளைக்கு செவிமடுத்தாகவேண்டிய கட்டாயமும் இருந்தது.

கூட்டணியின் செயலதிபர் அமிர்தலிங்கம் ஈ.பி.டி.பி செயலாளர்நாயகம் டக்ளஸ் தேவானந்தவுடன் நல்லுறவு வைத்திருந்தார். தேர்தல் நடவடிக்கைக்காக கொழும்பு வருவதற்கு முன்னர், சென்னையில் ஈ..பி.டி.பினரைச் சந்தித்து அமிர்தலிங்கம் பேச்சு நடத்தினார்.

அப்போது பொதுப்பட்டியல் விடயம் தொடர்பில் அமிர்தலிங்கத்திற்குத் தெரிந்திருக்கவில்லை. தேர்தலில் கூட்டணியுடன் ஈ.பி.டி.பி போட்டியிடுவது தொடர்பாகப் பேச்சு நடத்தப்பட்டது.

கொழும்பில் ஈ.பி.டி.பி பிரதிநிதியாக அப்போதிருந்தவர் மு.சந்திரகுமார். கொழும்பு வந்த அமிர்தலிங்கம் சந்திரகுமாரைச் சந்தித்தும் இணைந்;து போட்டியிடுவது தொடர்பாகப்; பேசியிருந்தார். கூட்டணிக்குள் அவ் விடயம் தொடர்பாகப் பேசிவிட்டு முடிவைத் தெரிவிப்பதாகக் கூறியிருந்தார்.

இக்கட்டத்தில் கூட்டணியின் தலைமையில் ஈ.பி.ஆர்.எல்.எஃப், ரெலோ, ஈ.என்.டி.எல்.எஃப் இயக்கங்கள் கூட்டாகப் போட்டியிடுவது தொடர்பான இணக்கத்தை இந்தியத் தூதர் திக்ஷித் ஏற்படுத்தி முடித்தார்.

பொதுப்பட்டியல் தொடர்;பாகப் பேசுவதற்கான கூட்டமொன்று கொழும்பில் நடத்தப்பட்டது.

கூட்டணி, ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃப், ஈ.என்.டி.எல்.எஃப் பிரதிநிதிகள் கலந்;துகொண்டனர். பொதுப்பட்டியலில் ஈ.பி.டி.பியை இணைப்பது பற்றி அமிர்தலிங்கம் பிரஸ்தாபித்தார்.

ஈ.பி.ஆர்.எல்.எஃப், ஈ.என்.டி.எல்.எஃப் பிரதிநிதிகள் அதனைக் கடுமையாக ஆட்சேபித்தனர். இந்தியத் தரப்பினரும் ஈ.பி.டி.பியைப் பொதுப்பட்டியலில் இணைக்க அவ்வளவாக விரும்பவில்லை.

அதனால் ஈ.பி.டி.பியை இணைக்க அமிர்தலிங்கம் எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை.

பொதுப்பட்டியல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட விரும்பினார் அமிர்தலிங்கம். அதனால் மட்டக்களப்பு மாவட்ட பொதுப்பட்டியலில் அமிர்தலிங்கம் தலைமையில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர்.

யாழ் மாவட்டம், திருமலை மாவட்டம், அம்பாறை மாவட்டம், வவுனியா மாவட்டம், ஆகிய இடங்களில் தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற பெயரில் உதய சூரியன் சின்னத்தில் பொதுப்பட்டியலில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர்;.

கூட்டணியின் தலைமையில் பொதுப்பட்டியல் தயாரிக்கப்பட்டிருந்த போது, அடுத்த காயை நகர்த்திய இந்தியா.

புதுடெல்லியிலிருந்த இந்திய அரசு, ஈரோஸ் தலைவர் பாலகுமாருக்குத் தகவல் அனுப்பியது. ‘நீங்ளும் தேர்;தலில் போட்டியிடலாம். போதிய பாதுகாப்பை உங்;களுக்கு வழங்குமாறு இந்திய அமைதிப்படைத் தளபதிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’

முன்னர் மாகாண சபைத் தேர்தலிலும் யாழ்ப்பாணத்தில் சுயேட்சைக் குழுவை நிறுத்த ஈரோஸ் செய்த முயற்சி பற்றி இத்தொடரில் விபரிக்கப்பட்டிருந்தது.

  Police_1பிரபா அனுமதி.

நாடாளுமன்றத் தேர்தலில் தடுக்கப்பட்ட முயற்சியை, நாடாளுமன்றத் தேர்தலில் செய்து பார்க்க நினைத்தது ஈரோஸ்.

ஆனால் ஒரே தடை இருந்தது. அந்தத் தடையைக் கடந்தால்தான் தேர்தலில் துணிந்து போட்டியிடலாம். வேட்பாளர்;களும் போட்டியிட முன்வருவர்.

அந்தத் தடை-புலிகள். அவர்களது சம்மதம் இல்லாது போட்டியிட பாலகுமார் விரும்பவில்லை.

பிரபாகரனைச் சந்திக்க விரும்புவதாகத் தகவல் அனுப்பினார் பாலகுமார். சந்திக்க அனுமதி கிடைத்தது.

யாழ்ப்பாணத்திலிருந்து வன்னிக் காட்டுக்ககுள் ஈரோஸ் தலைமையில் குழு ஒன்று சென்றது. பாலகுமார் உட்பட ஐந்து பேர் அக் குழுவிலிருந்தனர்.

ஈரோஸ் குழுவினரைக் காட்;டுக்குள் சுற்றி சுற்றி அழைத்துச் சென்றனர் புலிகள். கடைசியாக ஒரு முகாமைச் சென்றடைந்தனர்.

palkumarrநடந்து நடந்து ஈரோஸ் குழுவினருக்கு கால்கள் களைத்துவிட்டன. முகாமைச் சென்றடைந்ததும் நிம்மதி. அந்த முகாமில்தான் பிரபாகரன் இருப்பதாக நினைத்து சந்திக்கத் தயாராகினர்.

சில மணி நேரங்களில் வந்து சேர்ந்தார் மாத்தையா. ஈரோஸ் குழுவினரை உபசரித்துவிட்டு, மாத்தையா கூறினார், ‘நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். தலைவரைப் பார்க்க பாலகுமாரை மட்டும் அழைத்துச் செல்லப்போகிறேன்.

நீங்கள் இந்த முகாமிலேயே இருந்துகொள்ளுங்கள். நாங்கள் போய் வருகிறோம். பாலகுமார் சந்தித்துவிட்டு உங்களிடம் வந்துசேருவார்’

பாலகுமார் மாத்தையாவுடன் புறப்பட்டுச் சென்றுவிட்டார். பாலகுமாருடன் சென்றவர்கள் அந்த முகாமிலேயே பாலகுமார் வரும்வரைத் தங்கியிருந்தனர்.

வன்னிக் காட்டுக்குள் வேறொரு பாதுகாப்பான முகாமில் பிரபாகரனை நேரில் சந்தித்தார் பாலகுமார்.

நாடாளுமன்றத் தேர்தலில் ஈரோஸ் போட்டியிடுவதற்கான காரணத்தைப் பிரபாகரனிடம் எடுத்துக்கூறினர் பாலகுமார்.

ஈரோஸ் போட்டியிடாவிட்டால் ஈ.என்.டி.எல்.எஃப போன்ற இயக்கங்களுக்கு வாய்ப்புக் கொடுப்பதாகிவிடும். ஈரோஸ் நாடாளுமன்றம் சென்றால் கூட புலிகளின் எண்ணங்களுக்கு எதிராகச் செயற்படாது. ஈ.என்.டி.எல்.எஃப் போன்ற இயக்கங்களுக்கு மக்கள் ஆதரவு கிடையாது என்பதை நிரூபிக்க இதனை ஒரு வாய்ப்பாக கொள்ளலாம் என்று பாலகுமார் விளக்கினார்.

images5ஏல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த பிரபா இறுதியாகக் கூறினார்,

‘நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதால் சிலவற்றைச் சந்திக்கலாம் என்று கூறுகிறீர்கள். ஏனக்கு அதில் நம்பிக்கை இல்லை. நீங்கள் முயன்று பார்க்கலாம் நாங்கள் அதைத் தடைசெய்ய மாட்டோம்.

ஆனால் ஒரு வரைமுறைக்குள் உங்கள் நடவடிக்கை இருக்க வேண்டும். தமிழீழ இலட்சியத்திற்கு எதிராக உங்கள் பாதை அமையுமாயின் உங்கள் தொடர்பாக நாங்கள் வேறு முடிவுகள் எடுக்கவும் நேரிடும். அப்படியொரு நெருக்கடியை எனக்கு ஏற்படுத்தி விடாதீர்கள்.

பிரபாகரனே பச்சைக்கொடி காட்டிவிட்டார் என்ற திருப்தியில் திரும்பினார் பாலகுமார்.

ஈரோஸ் இயக்கத்தின் வெகுஜன அமைப்பாக இருந்தவர் ஈழவர் ஜனநாயக முன்னணி. ஆதன் சார்பாகவே தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவதாக முடிவுசெய்யப்பட்டது.

வேட்பாளர் பட்டியலில் புலிகள் இயக்க ஆதரவாளர்களின் பெயர்களையும் இணைப்பது என்று தீர்மானித்தனர்.

யாழ்ப்பாணத்தில் எட்வெட் செபஸ்தியாம்பிள்ளை தலைமையில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர்.

ஈழரவ் ஜனநாயக முன்னணியின் பொறுப்பாளராக இருந்தவர் எட்வேட்.

ஈரோஸ் இயக்க ஸ்தாபகர் இரட்ணசபாபதி, பரராஜசிங்கம் ஆகிய ஈரோஸ் முக்கியஸ்தர்களும் யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டனர்.

புலிகள் இயக்க அனுதாபிகளான சிவானந்தராசாஈ கணபதிப்பிள்ளை, ராஜேந்திரன் ஆகியோரின் பெயர்களும் பட்டியலில் இருந்தன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சௌந்தரராஜன் தலைமையில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். திருமலையில் ரட்ணராஜா, வவுனியாவில் சந்திரசேகரன் ஆகியோரின் தலைமையில் வேட்பாளர்கள் ஈரோஸ் இயக்கம் சார்பாக நிறுத்தப்பட்டனர்.

paseerமட்டக்களப்பு ஈரோசின் பட்டியலில் பசீர் சேகுதாபூத் மட்டுமே ஈரோஸ் இயக்க உறுப்பினர். ஏனையோர் சமூகத்தின் செல்வாக்குள்ளவர்கள். மற்றும் சிலர் புலிகள் அயக்க அனுதாபிகள்.

திருமலையில் மட்டுமே ஈரோஸ் பட்டியலில் இருந்தவர்கள் அனைவரும் ஈரோஸ் அமைப்பின் உறுப்பினர்களாக இருந்தனர்.

அம்பாறை மாவட்டத்தில் மட்டும் ஈரோஸ் போட்டியிடவில்லை.

அம்பாறையில் ஈரோசும் போட்டியிட்டால், அங்கிருந்து தமிழ் பிரதிநிதியைத் தெரிவுசெய்யக் கூடிய வாக்குகள் சிதறிவிடும். ஆதனால் போட்டியிடுவதைத் தடுக்குமாறு ஈரோசுடன் கூட்டணியின் பிரதிநிதிகள் சிலர் பேச்சு நடத்தினர்.

அம்பாறை மாவட்ட ஈரோஸ் உறுப்பினர்களும் வாக்குகள் சிதறுவதை விரும்பவில்லை. அதனால் அங்கு போட்டியிடுவதில்லை என முடிவு செய்தனர் ஈரோசினர்.

கொலை மிரட்டல்.

வடக்கு-கிழக்கில் ஈரோஸ் போட்டியிடுவதற்கான போதிய பாதுகாப்பை வழங்குக’ என்று இந்திய அமைதிப்படைக்குப் புதுடெல்லியிலிருந்து உத்தரவு வந்தது.

.என்.டி.எல்.எஃப் இயக்க நடவடிக்கைகளால் இந்தியப் படையின் மூத்த அதிகாரிகள் சிலர் அவர்கள் மீது அதிருப்தியடைந்திருந்தனர் என்று கூறியிருந்தேன் அல்லவா.

புதுடெல்லியிலிருந்து உத்தரவு வந்ததும் அந்த அதிகாரிகள் ஈரோஸ் கேட்கும் உதவிகளை சிரத்தையுடன் செய்துகொடுத்தனர்.

ஈரோஸ் தேர்தலில் போட்டியிடப் போகிறது என்றும் ஈ.என்.டி.எல்.எஃப், ஈ.என்.டி.எல்.எஃப், ரெலோ ஆகிய மூன்று இயக்கங்களும் கடும் கோபம் கொண்டிருந்தனர்.

ஈரோஸ் நிறுத்தியுள்ள வேட்பாளர்கள் தனிமனிதர்களும் அல்ல. ஈரோஸ் காரர்களும் அல்ல. புலிகள்தான் ஈரோசின் பெயரில் தங்கள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர் என்ற பிரச்சாரத்தைப் பெரியளவில் தொடங்கினார்கள்.

ஈரோசின் பட்டியலில் நிறுத்தப்பட்டிருந்த வேட்பாளர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. யாழ்ப்hணத்தில ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர்கள் ஈரோஸ் அமைப்பின் உறுப்பினர்களதும், வேட்பாளர்களதும் வீடுகளுக்கு நள்ளிரவில் சென்று மிரட்டினார்;கள்.

ஈரோஸ் இயக்க உறுப்பினர்கள் ஒன்பதுபேர் யாழ்ப்பாணத்தில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இக்கொலைகளைத் தொடர்ந்து எட்வேர்ட் செயஸ்தியாம்பிள்ளை தலைமையில் ஒரு அறிக்கை வெளியானது.
‘ஈழவர் ஜனநாயக முன்னணி வேட்பாளர்களுக்குப் போதிய பாதுகாப்பு உத்தரவாதம் தரப்படாவிட்டால், தேல்தலில் போட்டியிடுவதிலிருந்து விலக நேரிடும்’ என்று அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இதனையடுத்து வேட்பாளர்களுக்கு இந்தியப் படையினர் கூடுதலான பாதுகாப்பை வழங்கினர்.

ஈரோஸ் போட்டியிலிருந்து விலகிவிட்டால், நடைபெறும் தேர்தலை ஜனநாயத் தேர்தலாகக் காட்ட முடியாது என்று இந்தியா நினைத்தது.

ஈரோஸ் போட்டியிலிருந்து விலகிவிடக் கூடாது என இந்திய தரப்பிலிருந்து பாலகுமாருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டதுடன், தேவையான உதவிகள் செய்யப்படும் என உத்தரவாதம் கொடுக்கப்பட்டது.

pirapakarann1திடீர் திருப்பம்

ஈரோஸ் பட்டியலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவருக்கும் திடீரென்று ஒருநாள் எச்சரிக்கைக் கடிதங்கள் வந்துசேர்ந்தன.

கடிதத்தை அனுப்பியது வேறுயாருமில்லை. புலிகள் இயக்கத்தினர்தான்.

வேட்பாளர்கள் பலர் திகைத்துப் போனார்கள். ஏனைய இயக்கங்களில் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க அவர்கள் தயாராக இருந்தார்கள். புலிகள் இயக்கத்தினரின் எச்சரிக்கையைக் கண்டுதான் பயந்து போனார்கள்.

ஈரோஸ் இயக்கத்தினரும் குழம்பிவிட்டனர். பாலகுமார் உடனடியாகப் பிரபாகரனுக்குச் செய்தியனுப்பினார். சந்திப்பிற்கு அனுமதி கேட்டார்.

வன்னிக்கு வருமாறு அழைக்கப்பட்டார். புறப்பட்டுச் செல்லும் இறுதி நேரத்தில் பாலகுமாருக்குப் புலிகளிடமிருந்து தகவல் வந்தது.

‘புலிகளின் பிரதிநிதி உங்களைச் சந்திப்பார். நீங்கள் வரவேண்டாம்’

காத்திருந்தார் பாலகுமார்.

பிரபாகரனின் பிரதிநிதி வந்தார். வந்தவர் பொட்டம்மான்.

தொடரும்…
-அரசில் தொடர் எழுதுவது அற்புதன்-
தொகுப்பு-கி.பாஸ்கரன்(சுவிஸ்)

கலைஞர் கருணாநிதிக்கு பிரபா கடிதம்!! : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 138)

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.