கிளிநொச்சியில் கணவரை வெறுத்த இளம்பெண் கொடூரமாகக் கொலை !! அதிர்ச்சிக் காட்சிகள்!!

0
1147

கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று (14) மதியம் ஒரு மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் வட்டக்கச்சி பத்து வீட்டுத்திட்டத்தைச் சேர்ந்த 24 வயதுடைய பாஸ்கரன் நிரோசா என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் தெரியவரவில்லை.

கிராமத்தில் நடைபெறவுள்ள பூப்புனித நீராட்டு விழாவுக்கு அயலவர்கள் சென்றிருந்த போது இக்கொலை இடம்பெற்றிருக்கிறது.

வீட்டிற்கு பின்புறமாக இறந்த நிலையில் மீட்கப்பட்ட குறித்த பெண்ணின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு பிரேத பரிசோனைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

27751892_793884080816821_6801957171280511886_nஇறந்த பெண்ணுக்கு ஏழு வயதான மகனும், ஒன்றரை வயது மகளும் உள்ளனர். சம்பவம் நடைபெற்ற சந்தர்பத்தில் கணவர் தொழிலுக்குள் சென்றிருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக விசாரணைகள் இராமநாதபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சத்துரங்க தலமையிலான குழுவினரும், கிளிநொச்சி குற்றத் தடகவியல் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றார்

27751896_793884054150157_8399968936065218437_nகுறித்த பெண்ணை பார்க்க அவரது சகோதரி வந்த போது, அவர் உயிருக்காக போராடிக்கொண்டிருப்பதைக் கண்டு, அயலவர்களிடம் தெரிவித்ததன் பின்னர், பொலிஸார் குறித்த இடத்திற்கு விரைந்தனர்.

இதே வேளை குறித்த பெண் விவாகரத்து பெறுவதற்கு நீண்ட காலமாக போராடி வந்ததாகவும் இந்நிலையில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் உயிரிழந்த பெண்ணின் தாயார் குறிப்பிடுகின்றார்.

சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான பூர்வாங்க விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.