ஒருமுறையாவது வைகைப்புயலைச் சந்திப்பது தான் வாழ்நாள் லட்சியம்! – அறந்தாங்கி நிஷா!

0
591

றந்தாங்கி நிஷா!

தமிழில் இவரைத் தெரியாதவர்கள் யாருமிருக்க வாய்ப்பில்லை. கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் மேடைப் பேச்சாளராக இருந்து விட்டு தற்போது விஜய் டி.வியின் கலக்கப் போவது யாரு? காமெடி ஷோவில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

முதலில் மேடைப்பேச்சு பின்னர் சின்னத்திரை ரியாலிட்டி ஷோ எனக் கலக்கிக் கொண்டிருந்தவர் தற்போது தனுஷின் மாரி பார்ட் 2 திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

கேட்டால்,‘அட ஹீரோயின் சாய்பல்லவியோட படம் முழுக்க அவரோட ஃப்ரெண்டா வர ரோல்ப்பா எனக்கு…’- என்று சிரிக்கிறார்.

thanushhh

தனுஷ் படம்மட்டுமல்ல இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான கலகலப்பு 2 திரைப்படத்திலும் அறந்தாங்கி நிஷாவின் அதிரடி கலகலப்பு உண்டாம்.

காமெடியில் நிஷாவின் ரோல் மாடல் வைகைப்புயல் வடிவேலு. தனது வாழ்நாளில் ஒரே ஒருமுறையேனும் வடிவேலுவைச் சந்தித்து அவரோடு ஓரிரு நிமிடங்கள் மட்டுமேனும் பேசியே ஆக வேண்டுமென்பதை தனது வாழ்நாள் லட்சியமாக வைத்திருக்கிறார் நிஷா.

பள்ளி, கல்லூரிகளில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி என ஆர்வத்துடன் கலந்து கொண்ட பரிச்சயமும், அப்போது தேடித்தேடி வாசித்த புத்தகங்களும் மட்டுமே தனது நகைச்சுவைக்கு மெருகூட்டுவதாகக் கூறுகிறார் நிஷா.

மேடையில் ரீல் ஜோடியை ஆயிரம் கலாய், கலாய்த்து கழுவிக் கழுவி ஊற்றி திரைப்படங்களில் வடிவேலுவை எகிறிக் குதித்து அடித்து பட்டையைக் கிளப்பும் கோவை சரளாவுக்கு இணையாக அடி வெளுத்து வாங்கினாலும் ரியல் வாழ்வில் நிஷா தனது கணவரை கடவுள் தந்த வரம் என்பதை விட கடவுளே நேரில் இறங்கி வந்தது போலத்தான் என் கணவர் எனத் தனது நேர்காணல்களில் சிலாகித்து நெகிழ்ந்து போகிறார்.

தனது சொந்த அத்தை மகனையே மணந்திருப்பதாகக் கூறும் நிஷா, தன் கணவரைப் போல இந்த உலகில் தன்னைப் புரிந்து ஏற்றுக் கொண்டவர் எவருமில்லை என்கிறார்.

ஒரு ஆடவனாக இருந்து தனக்கு உதவியதை விட ஒரு ஆண்டவனாக இருந்து தன் கணவர் தனக்கு உதவியது அதிகம் என்கிறார்.

பெண்களை வீட்டை விட்டு வெளியில் அனுப்புவதே தவறு என்றிருக்கும் இந்தச் சமுதாயத்தில் தான் நிகழ்ச்சிகளை முடித்து விட்டு எத்தனை மணிக்கு வீடு திரும்பினாலும் இத்தனை வருடங்களில் ஒருமுறை கூடத் தன் கணவர் தன்னைக் கேள்வி கேட்டதே இல்லை எனும் நிஷா, தன் அப்பா அப்படி இருந்தால் அது அவரது பெற்ற கடன்… ஆனால் தன் கணவர் தனது சின்னத்திரை அலுவல்களின் நடைமுறை அறிந்து ஒரு புரிதலோடு தன்னை அணுகுவது தனக்குக் கிடைத்த மாபெரும் வரம் என்கிறார்.

இரவு 3, 4 மணிக்கு கூட நிகழ்ச்சிகளுக்காகத் தனக்கு யாரேனும் தொலைபேசலாம். அப்போதும் கூட என் கணவர் முகம் சுளித்ததில்லை. என் அலைபேசியை எடுத்து வந்து என்னிடம் அளிப்பார்.

உனக்குத்தான் ஃபோன், உனக்கென்று ஒரு பர்சனல் இருக்கும் நீ பேசு என்று கூறி விட்டுச் செல்வார். அந்த அளவுக்கு என் உணர்வுகளுக்கும், சுயமரியாதைக்கும் மதிப்பளிக்கக் கூடியவர் என் கணவர். அதனால் தான் தனிமனித உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்கத் தவறும் இந்த உலகில் என் கணவர் எனக்கொரு ஹீரோ என்கிறார் நிஷா!

இனி தலைப்புக்கு வருவோம்.

அறந்தாங்கி நிஷாவைத்தான் கருப்பு கோவை சரளா எனச் சமீபகாலமாக ரசிகர்கள் அன்பான பட்டப்பெயரிட்டு கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லாம் கோவை சரளா போல நிஷாவும் காமெடியில் கலக்குவார் என்ற எதிர்பார்ப்பு தான். வேறென்ன?!

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.