நளினியை விடுவிக்க முடியாது! – தமிழக அரசின் திடீர் விளக்கம்

0
317

எம்.ஜி.ஆரின் 100 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு 10 ஆண்டு, 20 ஆண்டு தண்டனை முடித்த ஆயுள் தண்டனைக் கைதிகளை வரும் 25-ம் தேதி விடுவிக்க கடந்த1-ம் தேதி தமிழக அரசு ஓர் அரசாணையை வெளியிட்டது.

அதில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, 10 ஆண்டுகளுக்கும் மேல் சிறைத்தண்டனை அனுபவித்த கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான வழிகாட்டுதல்கள், நிபந்தனைகள் குறித்த விவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

தமிழக அரசின் அரசாணையைத் தொடர்ந்து தமிழக உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி, தமிழகத்தில் உள்ள 9 மத்திய சிறை அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி வைத்தார். `

10 ஆண்டுகளுக்கும் மேல் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை நல்லொழுக்கம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அதற்கான பட்டியலைத் தயாரித்து வழங்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். 10 ஆண்டுகளுக்கும் மேல் தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் பற்றிய கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.

அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள கைதிகள் பட்டியலில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில்  ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி ஆகியோர் பெயரும் இடம் பெற்றிருந்தன.

ஆனால், பிரிவு 435-ன்படி (சி.பி.ஐ விசாரணை செய்த வழக்கு) நளினியை விடுதலை செய்ய முடியாது என்று தமிழக அரசுக் கூறியுள்ளது.

`தன்னை விடுதலை செய்ய தடையாக உள்ள 435 (1)(அ) பிரிவு சட்ட விரோதமானது. அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என அறிவித்து என்னை விடுதலை செய்ய வேண்டும்’ என்று சென்னை உய‌ர் நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் நளினி ரிட் வழக்குப்பதிவு செய்துள்ளார். இவ்வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.