மொட்­டுக்கு 239, ஐ.தே.க. 42 கூட்­ட­­மைப்பு 38, மைத்­தி­ரிக்கு 10 !!

0
497

நடந்து முடிந்த உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­தலில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான சிறி­லங்கா பொது­ஜன பெரமுன 239 உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­களை கைப்­பற்­றி­யுள்­ளது.

தேர்­தலில் பொது­ஜன பெர­மு­ன­வா­னது மொத்­த­மாக 4941952 வாக்­கு­களை பெற்று அனைத்து உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­க­ளிலும் சிறி­லங்கா பொது­ஜன பெர­முன 3369 உறுப்­பி­னர்­களை பெற்­றுள்­ளது.

அதன்­படி பொது­ஜன பெர­முன 44.65 வீத­மான வாக்­கு­களை பெற்­றுக்­கொண்­டுள்­ளது.

அத்­துடன் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஐக்­கிய தேசிய கட்சி நாடு முழு­வதும் மொத்­த­மாக 3612259 வாக்­கு­களை பெற்று 42 உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­களை கைப்­பற்­றி­யுள்­ள­துடன் 2385 உறுப்­பி­னர்­களை தன­தாக்­கிக்­கொண்­டுள்­ளது.

அதன்­படி  ஐக்­கிய தேசிய கட்­சி­யா­னது 32.63 வாக்­கு­ களை பெற்று உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­தலில் இரண்­டா­வது  இடத்தைப் பெற்றுக்கொண்­டுள்­ளது.

சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியும் இணைந்து மொத்­த­மாக 1481656 வாக்­கு­களை பெற்று 10 சபை­களை கைப்­பற்­றி­யுள்­ள­துடன் 1032 உறுப்­பி­னர்­களை கைப்­பற்­றி­யுள்­ளது.

இதே­வேளை  வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு 339675 வாக்­கு­களை பெற்று 38 சபை­களை கைப்­பற்­றி­யுள்­ள­துடன் 407 உறுப்­பி­னர்­களை பெற்­றுள்­ளது.

கூட்­ட­மைப்பு 3.07 வீத­மான வாக்­கு­களை பெற்­றுள்­ளது. மக்கள் விடு­தலை முன்­னணி 693875 வாக்­கு­களை பெற்று 431 உறுப்­பி­னர்­களை தன­தாக்­கிக்­கொண்­டுள்­ளது. 6.27 வீத­மான வாக்­கு­களை ஜே.வி.பி. பெற்­றுள்­ளது.

இத­னி­டையே பிர­தான கட்சி என்ற வகையில் சுதந்­திரக் கட்­சியே இந்தத் தேர்­தலில் பாரிய பின்­ன­டைவை சந்­தித்­துள்­ளது. பல சின்­னங்­களில் போட்­டி­யிட்ட சுதந்­திரக் கட்­சி­யா­னது கிட்­டத்­தட்ட 15 வீத வாக்­கு­களை பெற்­றுள்­ளது.

அந்­த­வ­கையில் தேர்­தலில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மையில் கள­மி­றங்­கிய சிறி­லங்கா பொது­ஜன பெர­முன அமோக வெற்­றி­யீட்­டி­யுள்­ளது.

வடக்கு கிழக்கு தவிர்ந்த அனைத்து மாவட்­டங்­க­ளிலும் அதி­க­மான உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் சிறி­லங்கா பொது­ஜன பெர­முன ஆதிக்கம் செலுத்­து­கின்­றது.

தென்­னி­லங்­கையின் பெரும்­பான்மை மக்கள் செறிந்து வாழ்­கின்ற பகு­தி­களில் மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மை­யி­லான சிறி­லங்கா பொது­ஜன பெர­முன பாரிய வாக்­குகள் வித்­தி­யா­சத்தில் வெற்­றி­யீட்­டி­யுள்­ளது.

தென்­னி­லங்­கையில் அதி­க­மான உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­களில் ஐக்­கிய தேசிய கட்சி சிறி­லங்கா பொது­ஜன பெர­மு­ன­விடம் தோல்­வியை தழு­வி­யுள்­ளது.

ஐக்­கிய தேசிய கட்­சி­யா­னது வழ­மை­போன்று கொழும்பு மாந­கர சபையில் அமோக வெற்­றி­யீட்­டி­யுள்­ளது. எனினும் மொத்­த­மாக கொழும்பு மாவட்­டத்தில் சிறி­லங்கா பொது­ஜன பெர­முன வெற்­றி­பெற்­றுள்­ளது.

 கண்டி மாத்­தளை மாநக ர சபைகள் அம்­பாந்­தோட்டை நகர சபை வத்­தளை பிர­தேச சபை நுவ­ரெ­லியா மாந­கர சபை நாவ­லப்­பிட்டி அக்­கு­ரணை போன்ற உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­களை ஐக்­கிய தேசிய கட்சி கைப்­பற்­றி­யுள்­ளது.

அம்­பாறை மாவட்­டத்­திலும் ஐக்­கிய தேசிய கட்சி சிறி­லங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸுடன் இணைந்து பல உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­களை கைப்­பற்­றி­யுள்­ளது.

ஐக்­கிய தேசிய கட்­சியை பொறுத்­த­வரை சிறு­பான்மை மக்கள் அதி­க­மாக வாழும் பிர­தே­சங்­க­ளி­லேயே வெற்­றி­யீட்­டி­யுள்­ள­துடன் அதிக வாக்­கு­க­ளையும் பெற்­றுள்­ளது.

வழ­மைப்­போன்று வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு வெற்­றி­களை பெற்­றுள்­ளது. வடக்கு கிழக்கில் கூட்­ட­மைப்பு 38 உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­களை கைப்­பற்­றி­யுள்­ளது.

உதா­ர­ண­மாக யாழ். மாவட்­டத்தில் யாழ். மாந­கர சபை உள்­ளிட்ட அதி­க­மான உள்­ளூ­ராட்சி சபை­களை இலங்கை தமி­ழ­ரசு கட்­சியில் போட்­டி­யிட்ட தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பெற்­றுக்­கொண்­டுள்­ளது. சில சபை­களில் தனித்து ஆட்­சி­ய­மைக்க முடி­யா­வி­டினும் சபை­களை வெற்­றிக்­கொண்­டுள்­ளது.

 இம்­முறை யாழ். மாவட்­டத்தில் சைக்கிள் சின்­னத்தில் போட்­டி­யிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி இரண்டு உள்­ளூ­ராட்­சி­மன்றங்களின் அதி­கா­ரத்தை கைப்­பற்­றி­யுள்­ளமை விசேட அம்­ச­மாகும்.

அக்­கட்­சி­யா­னது யாழ். மாந­க­ர­ச­பையில் எதிர்க்­கட்­சி­யா­கவும் உரு­வெ­டுத்­துள்­ளது. சாவகச்­சேரி மற்றும் பருத்­தித்­துறை உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­களை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கைப்­பற்­றி­யுள்­ளது.

இதே­வேளை ஈ.பி.டி.பி. கட்­சி­யா­னது நெடுந்­தீவு மற்றும் ஊர்­கா­வற்­றுறை உள்ளூராட்சிமன்­றங்­களை கைப்­பற்­றி­யுள்­ளது.

 அதே­போன்று மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் மட்­டக்­க­ளப்பு மாந­கர சபை உள்­ளிட்ட பல சபை­க­ளையும் அம்­பாறை மாவட்­டத்தில் சில உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­க­ளையும் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தின் பல உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­க­ளையும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு கைப்­பற்­றி­யுள்­ளது.

மலை­யகம்

மலை­ய­கத்தை பொறுத்­த­வரை நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் சுதந்­திரக் கட்­சி­யுடன் இணைந்து சேவல் சின்­னத்தில் போட்­டி­யிட்ட இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் பல சபை­களை கைப்­பற்­றி­யுள்­ளது.

அத்­துடன் தமிழ் முற்­போக்கு கூட்­டணி ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இணைந்து யானை சின்­னத்தில் போட்­டி­யிட்டு மூன்று சபை­களை கைப்­பற்­றி­யுள்­ளது. அத்­துடன் பதுளை மாவட்­டத்தில் வெற்­றிலை சின்­னத்தில் போட்­டி­யிட்ட இலங்கை தொழி­லாளர் காங்கிரஸ் வெற்­றி­பெற்­றுள்­ளது.

 ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி – சுதந்­திரக் கட்சி

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி பல சின்­னங்­களில் இம்­முறை போட்­டி­யிட்­டது. எப்­ப­டி­யி­ருப்­பினும் சுதந்­திரக் கட்சியும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியும் இணைந்து 10 சபை­களை வெற்­றி­கொண்­டுள்­ளன.

இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் மற்றும் தேசிய காங்­கிரஸ் ஆகிய கட்­சி­களின் ஊடா­கவும் சுதந்­திரக் கட்­சி­யா­கவும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யா­கவும் சில பிர­தே­சங்­களில் போட்­டி­யிட்­டது.

 தென்னிலங்கையில் மிகவும் குறைவான உறுப்பினர்களைளே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் சுதந்திரக் கட்சி பெற்றுள்ளன.

மக்கள் விடுதலை முன்னணி

இம்முறை உள்ளூராட்சிமன்ற தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி எந்த உள்ளூராட்சிமன்றத்தையும் கைப்பற்றவில்லை. மாறாக குறிப்பிடத்தக்க அளவில் ஆசனங்களை பெற்றுள்ளது.

693875 வாக்குகளை மொத்தமஇாக பெற்றுள்ள மக்கள் விடுதலை முன்னணியானது 431 உறுப்பினர்களை பெற்றுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பெற்றதைவிட வாக்குகளைவிட அதிக வாக்குகளை மக்கள் விடுதலை முன்னணி இந்தத் தேர்தலில் பெற்றுக்கொண்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.