சட்டசபையில் ஜெயலலிதா படம்: கருணாநிதிக்கு நேர்ந்தது ஜெயலலிதாவுக்கும் நடக்குமா?

0
449

ஒரு சட்டசபையின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள்தான். சில சமயம் அற்ப ஆயுசில்கூட முடிந்து போய்விடும்.

இப்போது எம்.எல்.ஏ-க்களாக இருப்பவர்கள் அடுத்த முறை வருவார்களா? என்பதற்கு எந்த உத்தரவாதம் இல்லை.

அதனால் எம்.எல்.ஏ பதவி ஒன்றும் நிரந்தரம் கிடையாது. ஆனால், எந்த ஆட்சி போனாலும், எந்த ஆட்சி வந்தாலும் இவர்களை மட்டும் சட்டசபையில் இருந்து பிரிக்கவே முடியாது. மகாத்மா காந்தி, ராஜாஜி, திருவள்ளுவர், அண்ணா, காமராஜ், பெரியார், அம்பேத்கர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், காயிதே மில்லத், முகம்மது இஸ்மாயில், எம்.ஜி.ஆர் ஆகிய பத்து பேருக்கு மட்டும் சட்டசபையில் நிரந்தர இடம் உண்டு. அவர்கள் உருவப்படங்களாக சபையில் எப்போதும் வீற்றிருக்கிறார்கள்.

THEF13_ASSEMBLY3_65640g_15355

சட்டசபையில் மகாத்மா காந்தியின் உருவப்படம்தான் முதன்முதலில் திறக்கப்பட்டது. ராஜாஜி கவர்னர் ஜெனரலாக இருந்தபோதுதான், காந்தியின் படத்தை 24.7.1948 அன்று திறந்து வைத்தார்.

‘வாழ்க நீ எம்மான்’ என்கிற பாடலை எம்.எஸ். சுப்புலட்சுமி பாடிய பிறகுதான் அந்த விழாவே தொடங்கியது.

சர் முத்தையா செட்டியார் வழங்கிய காந்தியின் படம்தான் சட்டசபையில் திறக்கப்பட்டது.

அடுத்த மாதமே ராஜாஜியின் படத்தை, அன்றைக்குப் பிரதமராக இருந்த நேரு 23.8.48 அன்று திறந்தார்.

அதைத் தொடர்ந்து திருவள்ளூவர் படத்தை, 22.3.1964-ல் அப்போதைய துணை ஜனாதிபதி ஜாகீர் உசேன் திறந்து வைத்தார்.

அண்ணா முதல்வராக இருந்தபோதுதான் 1969-ல் இறந்தார். அதன்பிறகு கருணாநிதி முதல்வர் ஆனார். அதே ஆண்டு பிப்ரவரி 10-ம் தேதி, அண்ணாவின் உருவப்படம் அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தியால் திறந்து வைக்கப்பட்டது.

எல்லாப் படங்களும் சட்டசபையில் திறந்து வைக்கப்பட்டபோது, அண்ணாவின் படம் மட்டும், ராஜாஜி மண்டபத்தில் திறக்கப்பட்டது.

அதன்பிறகு அந்தப் படம், சட்டசபையில் மாட்டப்பட்டது. காமராஜர் படத்தை அன்றைய ஜனாதிபதி நீலம் சஞ்சீவ ரெட்டி, 18.8.77 அன்று சட்டசபையில் திறந்தார். பெரியார், அம்பேத்கர், பசும்பொன் தேவர், காயிதே மில்லத், ஆகிய நான்கு தலைவர்களின் படங்கள், எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது 9.8.80-ல் கேரள கவர்னர் ஜோதி வெங்கடாசலத்தால் ஒரே நாளில் திறக்கப்பட்டன. ஜெயலலிதா முதன்முறை முதல்வர் ஆனபோது, 31.1.92 அன்று எம்.ஜி.ஆரின் படம் திறக்கப்பட்டது.

WhatsApp_Image_2018-02-12_at_11.47.43_15560உயிருடன் இருந்தபோது படம் திறக்கப்பட்ட இரண்டு தலைவர்கள், ராஜாஜியும் கருணாநிதியும்தான். ஆனால், திறக்கப்பட்ட கருணாநிதி படம், ஜெயலலிதா ஆட்சியில் நீக்கப்பட்டது. கருணாநிதியின் படத்தை நீக்கிய ஜெயலலிதாவின் படம் இன்றைக்கு (2018 பிப்ரவரி 12) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சட்டசபையில் கருணாநிதியின் படம் திறக்கப்பட்டது தொடர்பான ஃபிளாஷ்பேக் இது. 2006-2011 தி.மு.க. ஆட்சிக் காலத்தில், அண்ணாசாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டசபை வளாகம் கட்டி முடிக்கப்பட்டது. 2010 மார்ச் 13-ம் தேதி புதிய தலைமைச் செயலக வளாகம் திறக்கப்பட்டது. இந்தப் புதிய சட்டசபையில்தான் கருணாநிதியின் படம் வைக்கப்பட்டது.

TN_Assembly_340964f_15432ஓமந்தூரார் கட்டடம்

‘புதிய சட்டசபை வளாகத்தில், முதல்வர் கருணாநிதியின் படம் இடம் பெற வேண்டும்’ எனக் கருணாநிதி (?) தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்திலேயே தீர்மானிக்கப்பட்டதுதான் கொடுமை.

”1957-ம் ஆண்டு முதல் அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று, 50 ஆண்டுக் காலத்துக்கும் மேலாகத் தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார் கருணாநிதி.

ஐந்தாம் முறையாகத் தமிழக முதல்வராகப் பொறுப்பு வகித்து, ஜனநாயகத்தைக் கட்டிக்காத்து வருகிறார்.

‘தமிழகச் சட்டமன்ற சரித்திரத்தில், 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி இந்த மாமன்றத்திற்குச் சிறப்பு சேர்த்து வரும் முதல்வர் கருணாநிதியின் உருவப் படத்தை, புதிய சட்டமன்ற வளாகத்திலும், பழைய சட்டமன்ற வளாகத்திலும் திறந்து வைப்பது’ என்ற தீர்மானம் அமைச்சர் வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் முன்மொழிய, அமைச்சர் அன்பழகன் வழிமொழிய, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது” என அப்போது அரசு அறிவித்தது.

புதிய சட்டசபை கட்டடத்தில் 2010-11-ம் ஆண்டுக்கான பட்ஜெட் 2010 மார்ச் 19-ல் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது சட்டசபையில், முதல் முறையாக முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படம் மாட்டப்பட்டது.

THEF13_ASSEMBLY5_65642g_15567

அண்ணா

பழைய சட்டசபையிலும் கருணாநிதியின் படம் இடம்பெற்றிருந்தது. 2011-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, புதிய தலைமைச் செயலகம் – சட்டபேரவை வளாகத்தை அரசு மருத்துவமனையாக மாற்றினார்.

பழைய சட்டசபையை மீண்டும் பயன்படுத்தினார். அப்போது அங்கே இருந்த கருணாநிதி படத்தையும் எடுத்துவிட்டார்கள்.

சொத்துக் குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளியான ஜெயலலிதாவின் படத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி அரசு விரும்பியது.

மோடியின் தேதி கேட்டு அவரை நேரிலும் சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. குற்றவாளியின் படத்தைத் திறந்தால் தேவையில்லாத விமர்சனம் கிளம்பும் என்பதால் விழாவில் பங்கேற்க மோடி மறுத்துவிட்டார். வேறு வழியில்லாமல் ஜெயலலிதாவின் படத்தை, சபாநாயகர் தனபால் திறந்தார்.

குற்றவாளி ஜெயலலிதாவின் படத்தை சட்டசபையில் திறப்பதற்கு எதிர்க்கட்சிகள் மட்டமல்லாது பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின.

நீதிமன்றத்திலும் தி.மு.க வழக்குப் போட்டது. எது எப்படியோ, அ.தி.மு.க. ஆட்சியில் கருணாநிதியின் படம் நீக்கப்பட்டது போல, ஒருசமயம் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதாவின் படமும் நீக்கப்படலாம்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.