மாலத்தீவு அவசரநிலைப் பிரகடனம்.. சர்வதேசத்துக்கான அபாய அலாரமா?

0
257

ரு பலவீனமான அரசியல் கட்சி, வலுவிழந்த நீதித்துறை, போராட்டத்தில் களமிறங்கி இருக்கும் முன்னாள் அதிபர் மும்முனைப் பேரிடரால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் மாலத்தீவு இந்தியா சீனா அதிகார பலபரிட்சைக்கான மேடையைத் தனது நாட்டில் தற்போது அமைத்துக் கொடுத்துள்ளது.

மாலத்தீவு தேசத்தின் எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒன்பது அரசியல் கைதிகளை விடுவிக்க ஆணையிட்டு அந்த நாட்டின் உச்சநீதி மன்றம் ஆணை பிறப்பித்ததை அடுத்து தனது அதிகார பலம் குறைந்துவிடுமோ என்கிற அச்சத்தில் அந்த நாட்டு அதிபர் அப்துல்லா யாமீன் உடனடியாகப் பதினைந்து நாட்களுக்கான அவசர நிலையை அறிவித்தார்.

கூடவே, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றுமொரு நீதிபதி ஆகியோருடன் முன்னாள் அதிபர் மௌமன் அப்துல் கயாம் ஆகியோரைக் கைது செய்யவும் ஆணை பிறப்பித்தார்.

அப்துல் கயாமின் மகன் ஃபாரிஸ் முன்னர் அதே உச்சநீதிமன்றத்தால் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டார். மேலும் அப்துல் கயாமும் தற்போதைய அதிபர் அப்துல்லா யாமீனும் சகோதரர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

_86495500_86495499_22554மாலத்தீவில் ரிசார்ட்டுகள் அமைப்பது மற்றும் அதன் மேம்பாடு தொடர்பாக 2016ல் அந்த நாடு கொண்டுவந்த மசோதா மீது ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் எதிரெதிர் அணிகளாகப் பிரிந்தனர்.

இதில் அப்துல்லா கயாமின் மகன் மகள் உட்பட அனைவருமே அரசின் மசோதாவுக்கு எதிராகக் குரல் கொடுத்தனர். கயாமின் மகள் துன்யா தனது வெளியுறவுத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இது ஒருபுறம் இருக்க, நீதிமன்றம் விடுவித்த முக்கிய நபர்களில் குறிப்பிடப்பட வேண்டியவர் மற்றொரு முன்னாள் அதிபரான நஷீது. அந்த நாடு ஜனநாயக முறை வாக்கெடுப்பில் தேர்ந்தெடுத்த முதல் அதிபர் அவரே.

2011ல் ஒரு மர்மமான சூழலில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். கயாமின் ஆட்கள் தன்னை மிரட்டி ராஜினாமா செய்யவைத்ததாகக் கூறி அவர் எழுப்பிய குற்றச்சாட்டை அடுத்து அவர் தேசத்துரோகி எனக் குற்றம் சாட்டப்பட்டு நாடுகடத்தப்பட்டார்.

அவர் சிகிச்சைக்காகச் சென்ற இங்கிலாந்து தேசம் அவருக்கு அடைக்கலம் தந்தது.

maldives-emergency-update-reuters_22443

சர்வதேச  பாதிப்புகள்

1192 தனித்தீவுகள் உடைய மாலத்தீவு  தேசத்தில் 199 தீவுகள் இன்னும் மனிதர்களால் ஆக்கிரமிக்கப்படாமலேயே இருக்கின்றன.

உலகின் இரண்டில் ஒரு பங்கு எண்ணெய் மற்றும் அது எடுத்துச்செல்லப்படும் கப்பல்கள் மாலத்தீவின் கடல் வழியாகத்தான் எடுத்துச் செல்லப்பட வேண்டும்.

அதனாலேயே தற்போது அங்கே ஏற்பட்டிருக்கும் அவசர நிலை சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.அதாவது இந்திய எல்லையிலிருந்து சுமார் 1200 கி
மீ. தொலைவில் இருக்கும் தேசம் சர்வதேச எண்ணெய்ப் போக்குவரத்துக்கான முக்கியக் களம்.

இதன் அடிப்படையிலேயே காலனிய ஆதிக்கத்துக்குப் பிறகு மாலத்தீவை தனித்த சுதந்திர நாடாக அங்கீகரித்த தேசங்களில் இந்தியாவும் இருந்தது.

1988ல் அந்த தேசத்தின் அப்போதைய அமைச்சரவையைக் கலைக்க சில குழுக்கள் முயற்சித்த நிலையில் அதிபர் கயாம் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் உதவியை நாடினார். அப்படி உருவானதுதான் இந்தியாவின் ஆபரேஷன் காக்டஸ்.

மாலத்தீவில் கட்டப்பட்ட இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஒரு தொழில்நுட்பக் கல்லூரி என அத்தனையும் இந்திய அரசின் முதலீட்டு உதவியுடனே நடந்தது.

2004ல் சுனாமியின் பாதிப்பு மாலத்தீவு வரை நீண்டபோது தனது நிவாரணக்கப்பல்களை உடனடியாக அனுப்பி உதவிக்கரம் நீட்டியது இந்தியா.

26/11 மும்பை சம்பவத்திற்குப் பிறகு இருநாட்டுக் கடல் எல்லையையும் வலுப்படுத்தும் வகையில் அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி இருநாட்டுக் கடல் எல்லையில் புதிய ராடார்களை அமைக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

அதே சமயம் சுற்றுலாத்துறையை தனது பொருளாதார மையமாக வைத்து இயங்கிவரும் மாலத்தீவில் இதே காலகட்டத்தில்தான் சில குண்டுவெடிப்புச் சம்பவங்களும்,மிகச்சமீபமாக ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஊடுருவல் முயற்சியும் அரங்கேறியது உள்ளிட்டவை இந்திய எல்லைப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்ததும் இதற்கு ஒரு காரணம்.

maldives-pti_650x400_81518178529_22320ஒருபக்கம் இந்தியாவுடனான உறவை வலுப்படுத்தி வந்த இந்தியா மற்றொருபுறம் சீனாவுடனான வரம்பற்ற வாணிப ஒப்பந்தத்திற்குக் கையெழுத்திட்டது.

தனது பொருளாதாரத்தை அதிகரிக்கும் பொருட்டு வெளிநாட்டவர்களும் தங்களது நாட்டில் நில உரிமையாளராகலாம் என்று அந்த நாடு 2015ல் மசோதா ஒன்றை நிறைவேற்றிய நிலையில் சீனாவிலிருந்து மாலத்தீவுக்கு சுற்றுலா செல்லுபவர்கள் எண்ணிக்கையும் அங்கே நில உரிமையாளர்களான சீனர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

உச்சகட்டமாக சீனநாட்டுப் போர்க்கப்பல்கள் மூன்றை தனது நாட்டின் எல்லையில் ஆகஸ்ட் 2017ல் நங்கூரமிட்டதன் மூலம், ஏற்கெனவே நிலவிவந்த சீனாவுடனான இந்தியாவின் பனிப்போருக்கு வலுசேர்த்தது.

தற்போது மாலத்தீவில் நிலவிவரும் அவசர நிலைச்சூழலில் அந்த நாட்டின் முன்னாள் அதிபர் நஷீது இந்திய இராணுவத்தின் உதவியைக் கோரியுள்ளதை அடுத்து சீனா, ‘ஒரு நாட்டின் அரசியல் பிரச்னைகளை அந்த நாடு மட்டுமே சரிசெய்து கொள்ளவேண்டும்.

அண்டை தேசத்தை அதற்காக உதவிக்கு அழைப்பது இந்தியா மாலத்தீவுக்கு கொடுத்துவரும் அழுத்தத்தை வெளிப்படையாகக் காட்டுகிறது’ என்று கூறியுள்ளது.

மாலத்தீவு பிரச்னையில் இந்தியா தலையிடும் நிலையில் சீனாவின் தலையீடும் அதில் இருக்கும். அப்படியாகும் நிலையில் பிரச்னை சர்வதேச வடிவம் எடுக்க வாய்ப்புகள் அதிகம்.

ஆக, இந்தப் பிரச்னை தொடர்பாக தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் பட்சத்தில்தான் சர்வதேசப் பொருளாதாரச் சந்தை உட்பட அனைத்தின் விதியும் நிர்ணயமாகும்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.