71 பயணிகளுடன் கிளம்பிய ரஷ்ய விமானம் நொறுங்கியது

0
309

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து ஓர்ஸ்க் நகரத்திற்கு சென்ற ஒரு ரஷ்ய விமானம் நொறுங்கியது.

விமானம் ரேடார் திரைகளில் இருந்து மறைந்த பிறகு இந்த விபத்து நடந்துள்ளது. 71 பயணிகள் மற்றும் விமான குழுவினர் இதில் பயணித்துள்ளனர்.

சரடோவ் ஏர்லைன்ஸின் ஏஎன்148 என்ற இந்த விமானம், கஜகஸ்தான் உடனான ரஷ்யாவின் எல்லைக்கு அருகில் உள்ள உரால் மலைப்பகுதியின் ஓர்ஸ்க் நகரத்திற்கு சென்றுகொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்தது.

_99978096_ddb0b46e-2a65-4b03-ad6e-3bc2aba07702விமானத்தின் பாகம்

”விமானம் நொறுங்கியது. அதில் பயணித்தவர்கள் உயிர்பிழைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை” என அவசர சேவைகளின் தகவல்கள் இண்டர்ஃபேக்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளது.

_99978097_dc49042d-b83f-4952-8c47-57a9d2c831d3மாஸ்கோவின் தென்கிழக்கில் 80கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அர்குனோவோவில் விமானம் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.

டோமோடிடோவோ விமான நிலையில் இருந்து கிளம்பிய இரண்டு நிமிடத்தில், ரேடார் திரைகளில் இருந்து இந்த விமானம் மறைந்ததாக மற்றொரு செய்தி நிறுவனம் கூறுகிறது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.