புங்குடுதீவை உள்ளடக்கிய, “வேலணை” பிரதேச சபையின் தேர்தல் முடிவுகள் விபரமாக..!

0
774

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் வேலணை பிரதேச சபைக்காக புங்குடுதீவு பிரதேசத்தில், புங்குடுதீவு மேற்கில் போட்டியிட்ட திரு. கணபதிப்பிள்ளை வசந்தகுமார் வெற்றியை ஈட்டியுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் வேலணை பிரதேச சபைக்காக புங்குடுதீவு பிரதேசத்தில், புங்குடுதீவு கிழக்கில் போட்டியிட்ட திருமதி.யசோதினி சாந்தகுமார் வெற்றியை ஈட்டியுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் வேலணை பிரதேச சபைக்காக புங்குடுதீவு பிரதேசத்தில், புங்குடுதீவு மத்தியில் போட்டியிட்ட திரு நாவலன் கருணாகரன் வெற்றியை ஈட்டியுள்ளார். இதேவேளை இவருக்கு பெரும் நெருக்கடியை ஈ.பி.டி.பி அமைப்பின் வேட்பாளர் கொடுத்து உள்ளதாகவும், நெருக்கடியிலேயே இவர் வெற்றி ஈட்டியுள்ளதாகவும் தெரிய வருகிறது.

27868092_1898742833789665_1510537905152095256_nஅத்துடன் புங்குடுதீவில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு வாக்கு வீதத்தில் முதலாமிடத்தையும், ஈ.பி.டி.பி எனும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இரண்டாமிடத்தையும், மகிந்த ராஜபக்சவின் “தாமரை மொட்டு” சின்னமான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மேற்படி வேலணை பிரதேச சபையை யார் நிர்வகிக்க போகிறார்கள்? என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.

ஏனெனில் வேலணை பிரதேச சபை தேர்தல் முடிவின்படி… (விகிதாசார வேட்பாளர்களையும் இணைத்து)

தமிழ் தேசியக் கூட்டமைப்பு – 3,627 வாக்குகள், -07 + 01 = 08 ஆசனங்கள்

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி – 2,891 வாக்குகள், -05 + 01 = 06 ஆசனங்கள்

மகிந்தவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 899 வாக்குகள், -00 + 02 = 02 ஆசனங்கள்

அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் – 737 வாக்குகள், -00 + 01 = 01 ஆசனம்

ஐக்கிய தேசியக் கட்சி – 403 வாக்குகள், -00 + 01 = 01 ஆசனம்

தமிழர் விடுதலைக் கூட்டணி – 345 வாக்குகள், -00 + 01 = 01 ஆசனம்

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி – 306 வாக்குகள், -00 + 01 = 01 ஆசனம்

பெரும்பான்மையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றுள்ள போதிலும், அறுதி பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் “சிக்கல் உருவாகி உள்ளதென” அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.