கொழும்பு அரசியலில் பதற்றத்தை உண்டாக்கிய மகிந்தவின் வெற்றி : அமைச்சரவை கலையுமா?

0
322

 

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் எதிர்பாராத விதமான வெற்றியால் தெற்கு அரசியலில் குழப்ப நிலையொன்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

தெற்கில் பெரும்பாலான இடங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய பெருமளவான வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து மகிந்தவின் கட்சி முன்னிலைக்கு வந்துள்ளது.

இது மகிந்தவின் அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் அரசாங்கத்திற்குள் தற்போது குழப்ப நிலைகள் ஏற்பட்டு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் மகிந்த அணி பக்கம் தாவும் நிலைமை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மகிந்த ராஜபக்‌ஷக்கள் தொடர்பான ஊழல் மோசடிகளை வெளியிடும் வகையில் பிரசாரங்களை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் பிரசாரங்களை முன்னெடுத்து வந்த போதும் அது இந்த தேர்தலில் செல்லுபடியற்றதாகியுள்ளது.

அதிகளவான சிங்கள பௌத்த மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்தே இருக்கின்றனர். என்பதனையே இந்த தேர்தல் பெறுபேறுகள் எடுத்துக்காட்டியுள்ளன.

ஐக்கிய தேசிய கட்சி – ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்பன அரசாங்கத்தில் இருந்துக்கொண்டே இந்த தேர்தலில் பாரிய தோல்வியை தழுவியமை தெற்கு அரசியலில் பெரும் குழப்ப நிலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை அமைக்கும் பொறுப்பை ஏற்கும் நிலைமையொன்று உருவாகியுள்ளதாகவே தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.