வெளிவந்த தேர்தல் முடிவுகள்: வலி. வடக்கு பிரதேச சபையில் கூட்டமைப்பு பெரும் வெற்றி

0
435

 வலிகாமம் வடக்கு பிரதேசபைக்கான தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 17 ஆசனங்களைக் கைப்பற்றி பெரு வெற்றி பெற்றுள்ளது.

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின், 21 வட்டாரங்களின் தேர்தல் முடிவுகள் தெரிய வந்துள்ளன. இதன்படி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 17 வட்டாரங்களில் வெற்றியீட்டியுள்ளது.

ஈபிடிபி 3 வட்டாரங்களில் வெற்றி பெற்று இரண்டாவது .இடத்தில் உள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 1 வட்டாரத்தில் வெற்றி பெற்றுள்ளது.

விகிதாசார பிரதிநிதித்துவ ஒதுக்கீடுகளுடனான தேர்தல் முடிவு இன்னமும் அறிவிக்கப்படவில்லை

புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று பிரதேச சபைகளையும் வசப்படுத்துகிறது கூட்டமைப்பு

புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று பிரதேச சபைகளையும் வசப்படுத்துகிறது கூட்டமைப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று பிரதேச சபைகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியைப் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் உள்ள 12 வட்டாரங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 11 வட்டாரங்களில் வெற்றியைப் பெற்றுள்ளது. சுயேட்சைக் குழு 1 வட்டாரத்தைக் கைப்பற்றியுள்ளது.

கரைத்துறைப் பற்றி பிரதேச சபையில், உள்ள 13 வட்டாரங்களில் 9 வட்டாரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியிருக்கிறது.

இங்கு தமிழர் விடுதலைக் கூட்டணி, சுயேட்சைக் குழு, சிறிலங்கா பொதுஜன பெரமுன, முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா 1 ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.

இங்கு இன்னமும் விகிதாசார உறுப்பினர்களின் ஒதுக்கீடுகள் அறிவிக்கப்படவில்லை.

கிளிநொச்சியில் மூன்று பிரதேச சபைகளும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வசம்…

 tna

இன்று இடம்பெற்ற உள்ளுராட்சி சபைத்தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று பிரதேச சபைகளையும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் 21 வட்டாரங்களில் 16 வட்டாரங்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும், 05 வட்டாரங்களில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரமாரின் சுயேட்சைக் குழுவும் வெற்றிப்பெற்றுள்ளது.

பச்சிலைப்பள்ளியில் எட்டு வட்டாரங்களில் 6 வட்டாரங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், 2 வட்டாரங்களில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரமாரின் சுயேட்சைக் குழுவும் வெற்றிப்பெற்றுள்ளது.

பூநகரி பிரதேச சபையில் 11 வட்டாரங்களில் அனைத்து வட்டாரங்களையும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வெற்றிப் பெற்றுள்ளது.

சாவகச்சேரி, பருத்தித்துறை நகர சபைகள் தமிழ்க் காங்கிரஸ் வசம்

TNPF-300x200சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அதிக வட்டாரங்களில் வெற்றி பெற்றுள்ளது. 11 வட்டார ரீதியான உறுப்பினர்களையும், 7 விகிதாசார ரீதியான உறுப்பினர்களையும் கொண்ட சாவகச்சேரி நகர சபையில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 7 வட்டாரங்களில் வெற்றி பெற்றுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 3 வட்டாரங்களிலும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி 1 வட்டாரத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

விகிதாசார முறையிலான ஆசனப் பகிர்வு இன்னமும் அறிவிக்கப்படாத போதிலும், இங்கு தமிழ்க் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் வாய்ப்புகள் இருப்பதாக தெரிய வருகிறது.

அதேவேளை, பருத்தித்துறை நகரசபையிலும் அதிகளவு வட்டாரங்களில் தமிழ்க் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

வவுனியா வடக்கு பிரதேசசபை 8 வட்டாரங்களில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது!!

ITK-TNAவவுனியா வடக்கு பிரதேசசபை 8 வட்டாரங்களில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது.

இதேவேளை நான்கு சிங்கள வட்டாரத்திலும் மகிந்த ராஜபக்சவின் கட்சியான பொதுஜனபரமுன வெற்றிபெற்றுள்ளதுடன் தமிழ் தேசிய் மக்கள் முன்னணி ஒரு ஆசனத்தினை கைப்பற்றியுள்ளது.

வவுனியா வடக்கு பிரதேசசபை மாமடு (ஒலுமடு) தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஜெயசுதாகர் வெற்றி

வவுனியா வடக்கு பிரதேசசபை சம்பத்நுவர வட்டாரம் பொதுஜனபெரமுன (தாமரை மொட்டு மகிந்த கட்சி) வெற்றி

வவுனியா வடக்கு பிரதேசசபை எத்தாவெட்டுணுவெல வட்டாரம் பொதுஜனபெரமுன (தாமரை மொட்டு மகிந்த கட்சி) வெற்றி

வவுனியா வடக்கு பிரதேசசபை கல்யாணபுர பொதுஜனபெரமுன (தாமரை மொட்டு மகிந்த கட்சி) வெற்றி

வவுனியா வடக்கு பிரதேசசபை கஜபாபுர பொதுஜனபெரமுன (தாமரை மொட்டு மகிந்த கட்சி) வெற்றி

வவுனியா வடக்கு பிரதேசசபை மாமடு (ஒலுமடு) தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஜெயசுதாகர் வெற்றி

வவுனியா வடக்கு பிரதேசசபை பட்டிக்குடியிருப்பு வட்டாரம் தமிழ் தேசியக்கூட்டமைப்பு செந்தூரன் வெற்றி

வவுனியா வடக்கு பிரதேசசபை பரந்தன் வட்டாரம் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தேவராசா வெற்றி

வவுனியா வடக்கு பிரதேசசபை நெடுங்கேணி வட்டாரம் தமிழ் தேசியக்கூட்டமைப்பு சத்தியேந்திரன் வெற்றி

வவுனியா வடக்கு பிரதேசசபை குளவிசுட்டான் வட்டாரம் தமிழ் தேசியக்கூட்டமைப்பு சி. அருட்செல்வம் வெற்றி

வவுனியா வடக்கு பிரதேசசபை சின்னடம்பன் வட்டாரம் தமிழ் தேசிய மக்கள் முன்னிணி (சைக்கிள்) சஞ்சுதன் வெற்றி

வவுனியா வடக்கு பிரதேசசபை புளியங்குளம் வட்டாரம் தமிழ் தேசியக்கூட்டமைப்பு யோகராசா வெற்றி

வவுனியா வடக்கு பிரதேசசபை கனகராயன்குளம் தெற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு ந. விநாயகமூர்த்தி வெற்றி

வவுனியா வடக்கு பிரதேசசபை கனகராயன்குளம் வடக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு ச. தணிகாசலம் வெற்றி

காரைநகர் பிரதேச சபையில் கூட்டமைப்பு – சுயேட்சைக் குழு சமபலம்

local-election-results-2காரைநகர் பிரதேச சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், சுயேட்சைக் குழுவும் வட்டார ரீதியில் சமபலத்துடன் இருப்பதால், இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

காரைநகர் பிரதேச சபைக்கு வட்டார ரீதியாக 6 உறுப்பினர்களும், விகிதாசார ரீதியாக 4 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

இந்த நிலையில், வட்டார ரீதியான தேர்தல் முடிவுகளின் படி, 3 வட்டாரங்களை தமிழ்த் தேசியக் கூட்டைமைப்பும், 3 வட்டாரங்களை சுயேட்சைக் குழுவும் கைப்பற்றியுள்ளன.

சமபல நிலை காணப்படும் நிலையில், விகிதாசார ரீதியான முடிவுகளின் அடிப்படையிலேயே இங்கு ஆட்சியமைக்கப் போவது யார் என்பது தெரியவரும்.

கிளிநொச்சி – கனகராயன்குளம் தெற்கு பகுதியின் தேர்தல் முடிவுகள்

ITK-TNAஇன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் கிளிநொச்சி மாவட்டம் கரகராயன்குளம் தெற்கு பகுதியின் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன.

இதில்,

தமிழ் தேசியக் கூட்டமைப்பு – 208

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 205

தமிழர் விடுதலைக் கூட்டனி – 174

மொத்த வாக்களிப்பு – 633

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 14

வல்வெட்டித்துறை நகரசபையின் 7 வட்டாரங்கள் கூட்டமைப்பு வசம்

tnaவல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியைப் பெறும் நிலையில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வல்வெட்டித்துறை நகரசபையின் 9 வட்டாரங்களில் 7 வட்டாரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. வல்வெட்டித்துறை நகரம், சிவன்கோவிலடி வட்டாரம், மயிலியதனை, கொம்மந்தறை, ரேவடி, பொலிகண்டி, வல்வெட்டி வடக்கு ஆகிய ஏழு வட்டாரங்களிலும் தமிழ் அரசுக் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

தொண்டைமானாறு வட்டாரத்தை ஈபிடிபி கைப்பற்றியுள்ளது. ஆதிகோவிலடி வட்டாரத்தில் சுயேட்சைக்குழு வெற்றி பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.