ஒரே நாளில் கோடீஸ்வரர்கள் ஆன கிராமத்தினர்!

0
341

ருணாச்சலபிரதேசத்தில் டவாங் மாவட்டத்தில், பூம்ஜா கிராமத்தில் ராணுவப் பயன்பாட்டுக்காக 200 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்திவிட்டு, சுமார் 40 கோடியே 80 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

இந்தக் கிராமத்தில் வசித்துவந்த 31 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒரே நாளில் செல்வந்தர்களாக மாறியுள்ளனர்.

இந்தக் கிராமத்தில் வசித்த 29 குடும்பங்களுக்குத் தலா ஒரு கோடியே 9 லட்சம் வழங்கப்பட்டது. ஒரு குடும்பத்துக்கு 2.44 கோடியும் மற்றொரு குடும்பத்துக்கு 6.73 கோடியும் இழப்பீடாகக் கிடைத்தது.

5 ஆண்டுகளுக்கு முன் டவாங் காரிஸன் என்ற ராணுவ மையத்தை அமைப்பதற்காக, கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்குத் தற்போது இழப்பீட்டுத் தொகையைப் பாதுகாப்பு அமைச்சகம் வழங்கியதையடுத்து நிலம் வழங்கிய குடும்பத்தினருக்குக் காசோலை வழங்கப்பட்டது.

விழாவில் அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு கலந்து கொண்டு காசோலைகளை வழங்கினார்.

குஜராத்தில் கட்ச் பகுதியில் உள்ள பலாடியா, மதபார் கிராமங்கள்தாம் இந்தியாவில் இதுவரை பணக்கார கிராமங்களாகக் கருதப்பட்டன. இந்தக் கிராமத்திலிருந்து வெளிநாட்டில் அதிகம் பேர் வசிக்கின்றனர்.

தங்கள் பெயரில் இந்தக் கிராம வங்கிகளில் கோடிக்கணக்கில் தொகையை டெபாஸிட் செய்துள்ளனர். அந்தவகையில்,  அருணாச்சலபிரதேசத்தைச் சேர்ந்த இந்தக் கிராமமும் இந்தியாவின் பணக்கார கிராமமாக மாறியுள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.