எமது மக்கள் வாக்களிக்கக் கூடாது’

0
204

நெஞ்சி லுரமுமின்றி
நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை சொல்வரரடி -கிளியே
வாய்ச்சொல்லில் வீரரடி…

சொந்தச் சகோதரர்கள்
துன்பத்தில் சாதல் கண்டும்
சிந்தை யிரன்காரடீ -கிளியே
செம்மை மறந்தாரடீ.

“எமது மக்கள் வாக்களிக்கக் கூடாது” என வவுனியாவில் சுழற்சி முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று (09) தெரிவித்துள்ளனர்.

வவுனியா பிரதான தபாலகத்துக்கு அருகாமையில் 351 ஆவது நாளாக சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், ‘காணாமல் போனோரை எங்கும் தேடி பார்த்தோம்.

image_dd662bf798காணவில்லை’ என ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து விசேட வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், இருநாட்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்டோரை தேடியறியும் சங்கத்தின் தலைவி கி.ஜெயவனிதா கருத்து தெரிவிக்கையில்,

“ஜனாதிபதி, வாக்குக் கேட்பதுக்காக வடக்குக்கு வந்து, எமது போராட்டத்துக்கு எதிரான கருத்தை தெரிவித்துச் சென்றுள்ளார்.

அவருடன் இடம்பெற்ற பேச்சுக்களில் சுமந்திரன் உட்பட 3 மக்கள் பிரதிநிதிகள் வருகை தந்து எமது பேச்சுக்களை குழப்பியிருந்தனர்.

இவர்களினை நம்பி பயன் இல்லை. எனவே சர்வதேசமே எமக்கான தீர்வைப் பெற்றுத்தர வேண்டும்.

அத்துடன் ஒரு வருடமாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் எம்மைப்பற்றி கரிசனை கொள்ளாது, இடம்பெறும் தேர்தலில் எமது மக்கள் வாக்களிக்க செல்லக்கூடாது. அவ்வாறு சென்றால் மக்களும் எமக்கு துரோகம் செய்தவர்களாவர்” என அவர் தெரிவித்தார்.

நெஞ்சி லுரமுமின்றி -nenjil uramuminri

 image_85cc4fc763 எமது மக்கள் வாக்களிக்கக் கூடாது’ image 85cc4fc763 e1518181602284
1. நெஞ்சி லுரமுமின்றி
நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை சொல்வரரடி -கிளியே
வாய்ச்சொல்லில் வீரரடி.
2.கூட்டத்தில் கூடிநின்று
கூவிப் பிதற்றல்லன்றி
நாட்டத்திற் கொள்ளரடீ -கிளியே
நாளில் மறப்பாரடீ,
10.அச்சமும் பேடிமையும்
அடிமைச் சிறுமதியும்
உச்சத்திற் கொண்டாரடி -கிளியே
ஊமைச் சனங்களடீ.
11.ஊக்கமும் உள்வலியும்
உண்மையிற் பற்றுமில்லா
மாக்களுக்கோர் கணமும் -கிளியே
வாழதகுதியுண்டோ
16. சொந்தச் சகோதரர்கள்
துன்பத்தில் சாதல் கண்டும்
சிந்தை யிரன்காரடீ -கிளியே
செம்மை மறந்தாரடீ.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.