நளினி, முருகன், பேரறிவாளன் மற்றும் சாந்தனை விடுவிக்கலாம் என சிறைத்துறையினர் தமிழக அரசுக்கு பரிந்துரை

0
170

இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன், பேரறிவாளன் மற்றும் சாந்தனை விடுதலை செய்யலாம் என சிறைத்துறையினர், தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

நன்னடத்தை அடிப்படையில் இவர்களை விடுதலை செய்யலாம் என சிறைத்துறையினர் பரிந்துரைத்துள்ளதாக ‘தி ஹிந்து’ செய்தி வௌியிட்டுள்ளது.

சிறைத்துறையினரின் பரிந்துரைக்கடிதம் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவிக்கும் கைதிகளில் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்படக்கூடியவர்களின் பட்டியலை தமிழக அரசு கோரியிருந்தது.

இந்த கோரிக்கைக்கு அமையவே, நன்னடத்தையின் அடிப்படையில் நளினி, முருகன், பேரறிவாளன் மற்றும் சாந்தன் ஆகியோரை விடுதலை செய்யலாம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.