செவ்வாய்க் கிரகத்தை நோக்கி அனுப்பப்பட்ட கார் (வீடியோ இணைப்பு)

0
242

செவ்வாய்க் கிர­கத்தை நோக்கி ஆடம்­பரக் கார் ஒன்று இன்று புதன்கிழமை விண்­வெ­ளிக்கு அனுப்­பப்­பட்டுள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) தனியார் நிறு­வ­னத்­தினால் தயா­ரிக்­கப்­பட்ட ஃபால்கன் ஹெவி (Falcon Heavy) எனும் விண்­வெளி ரொக்கெட் இன்று முதல் தட­வை­யாக ஏவப்­ப­ட்டுள்­ளது.

elon-muskஅமெ­ரிக்­காவின் புளோ­ரிடா மாநி­லத்­தி­லுள்ள கேப் கனே­வரெல் நக­ரி­லுள்ள கென்­னடி விண்­வெளி நிலை­யத்­தி­லி­ருந்து அமெ­ரிக்க நேரப்­படி செவ்வாய் பிற்­பகல் 3.45 மணிக்கு (இலங்கை நேரப்­படி இன்று புதன் அதி­காலை 2.15) இந்த ரொக்கெட் ஏவப்­பட்டுள்ளது.

வழ­மை­யாக சோத­னை­யாக ஏவப்­படும் ரொக்­கெட்­டு­களில் சரக்குப் பகு­தியில் கொங்­கிறீட், இரும்பு போன்ற பொருட்­களே வைக்­கப்­பட்­டி­ருக்கும்.

ஆனால், ஸ்பேஸ் எக்ஸ் நிறு­வ­னத்தின் ஸ்தாப­கரும் பிர­தம நிறை­வேற்று அதி­கா­ரி­யு­மான இலோன் மஸ்குக்கு இது அலுப்­பூட்­டு­கி­றதாம்.

அதனால் டெஸ்லா நிறு­வ­னத்தின் Tesla Roadster (ரோட்ஸ்டெர்) ரக காரை மேற்­படி ரொக்­கெட்டின் சரக்குப் பகு­தியில் இணைத்து விண்­வெ­ளிக்கு அனுப்­பு­கிறார் இலோன் மஸ்க்.

பொறி­யி­ய­லா­ளரும் தொழி­ல­தி­ப­ரு­மான அலன் முஸ்க், டெஸ்லா இன்­கோர்­ப­ரேஷன் எனும் வாகனத் தயா­ரிப்பு நிறு­வ­னத்தின் ஸ்தாப­கரும் பிர­தம நிறை­வேற்று அதி­கா­ரி­யு­மாவார். மின்­சார வாகனத் தயா­ரிப்­புக்குப் பிர­சித்தி பெற்ற நிறு­வனம் இது.

இந்­நி­லையில் தனது சொந்த Tesla Roadster சிவப்பு நிறக் காரை ஃபால்கன் ஹெவி ரொக்கெட் மூலம் விண்­வெ­ளி க்கு அனுப்­பு­வ­தற்கு இலோன் மஸ்க் தீர்­மா­னித்­துள்ளார். சிவப்புக் கிர­கத்தை நோக்கி சிவப்பு கார் அனுப்­பப்­ப­டு­வ­தாக இலோன் மஸ்க் தெரி­வித்­துள்ளார்.

starman-in-roadsterஇந்தக் கார் ஏவப்­ப­டும்­போது வெடித்துச் சித­றா­விட்டால் பல பில்­லியன் வரு­டங்கள் விண்­வெ­ளியில் வலம் வரும் என இலோன் மஸ்க் தெரிவித்தார்.

Car0இக் ­காரின் சாரதி ஆச­னத்தில் மனி­த­ பொம்­மை­யொன்று வைக்­கப்­பட்­டுள்­ளது. இந்த பொம்­மைக்கு ஸ்டார்மேன் என பெய­ரி­டப்­பட்­டுள்­ளது.

carewஇன்று ஏவப்­ப­ட்டுள்ள ஃபால்கன் ஹெவி ரொக்­கெட்­டா­னது தற்­போது பாவ­னை­யி­லுள்ள மிகப் பெரிய ரொக்கெட் ஆகும். 3 பாரிய என்ஜின்கள் மற்றும் 27 சிறிய என்ஜின்களைக் கொண்ட ரொக்கெட் இது.

சுமார் 22 லட்சம் கிலோகிராம் எடையுள்ள பொருட்களை விண்வெளிக்கு அனுப்பக்கூடிய சக்தியை இந்த ரொக்கெட் கொண்டுள்ளது.

car

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.