எனக்கு பெண் கிடைத்தது நடிகர் சல்மான்கான் டுவிட் வைரலாகியது

0
207

பாலிவுட் நடிகர் சல்மான்கான் எனக்கு பெண் கிடைத்தது என்ற டுவிட்டர் பதிவு வைரலாகி உள்ளது.

பாலிவுட் நடிகர் சல்மான் கான் அவருக்கு 52 வயதாகிறது இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஐஸ்வர்யாராய், கத்ரினா கையூப், சங்கீதா பிஜ்லானி, சோமி அலி,என பல நடிகைகளுடன் காதல் இருந்ததாக தகவல் வெளியானது.

ஒவ்வொரு முறையும் அவருக்கு திருமணம் என செய்திகள் வரும் பிறகு இல்லை என்றாகி விடும்.

கடைசியாக ரொமானிய நடிகை லுலியாவை காதலிப்பதாக கூறப்பட்டது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல் வெளியானது பின்னர் இருவரும் அதற்கு மறுப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் இன்று சல்மான் கான் அவரது டுவிட்டர் வலைதளத்தில் ”Mujhe ladki mil gayi” எனக்கு பெண் கிடைத்தது என ஒரு வரி டுவிட்டை இந்தியில் ,போட்டு உள்ளார். அது வைரலாகி உள்ளது.

சல்மான் கானின் அடுத்து வரும் பாரத் சல்மான்கான் படத்தை அலி அப்பாஸ் ஜாபர் இயக்குகிறார், இப்படம் 2019 இல் வெளியாகிறது.

விளையாட்டுக்காக அடுத்த படத்திற்கு ஆயுஷ் சர்மாவை குறிப்பிட்டு நடிகை கிடைத்து விட்டார் என குறிப்பிட்டு உள்ளாரா, அல்லது திருமணத்திற்கு தான் தயாராகி விட்டாரா என தெரியவில்லை.

Mujhe ladki mil gayi
— Salman Khan (@BeingSalmanKhan) 6 February 2018

Nothing to worry na @aaysharma ki film #Loveratri ke liye ladki mil gayi Warina, Toh dont worry na be happy na pic.twitter.com/uetTpUKRdi
— Salman Khan (@BeingSalmanKhan) 6 February 2018

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.