சமூக ஊடகத்தில் பல ஆண்களுடன் நட்பு கொண்ட ஒரு பெண்!! : முடிவு என்ன?? ( ஒரு பெண்மணியின் உண்மை கதை இது)

0
848

ஒரு திருமணமான பெண் எதனால் தனது கணவனிடம் அதிருப்தி அடைவாள்? அவளது எதிர்பார்ப்புகள் என்னென்ன? அவற்றை எவ்வாறு பூர்த்தி செய்துகொள்வாள்? அவளது உண்மைக் கதையை, நவீன இந்திய பெண்களின் வாழ்க்கை விருப்பங்களை விவரிக்கும் சிறப்புத் தொடர்..

_99866138_5_pragya_story_illustration1

அன்று என்னுடைய முகநூல் பக்கத்தை நான் திறந்தபோது, அவரிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதைக் கண்டதும் நான் அதிர்ந்து போனேன். அவர் ஏன் எனக்கு குறுஞ்செய்தி அனுப்பவேண்டும்?

அப்போது எனது கணவர் வீட்டில் இல்லை; நான் தனியாகவே இருந்தேன். இருப்பினும் என்னைச் சுற்றி யாராவது இருக்கிறார்களா என்று நான் பயத்துடன் பார்த்தேன். இது அற்பமான ஒரு செயல்! என்னைப் பார்த்து நானே சிரித்துக்கொண்டு அந்த குறுஞ்செய்தியைப் படித்தேன்.

‘ஹாய், நான் உன்னுடைய நண்பனாக வேண்டும்’ என்றது அந்த குறுஞ்செய்தி.

உதட்டோரம் சிறு புன்னகையுடன், பதிலளிப்பதா அல்லது புறக்கணிப்பதா என்று தெரியாமல் சில நிமிடங்கள் அந்த குறுஞ்செய்தியையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தேன்.

தெரியாத நபருக்கு நான் ஏன் பதில் அனுப்பவேண்டும்? இதுபற்றி என் கணவருக்குத் தெரிந்தால் என்னவாகும்? அவர் இதை எப்படி எடுத்துக்கொள்வார்?

அவரைப் பற்றிய எண்ணம் என்னைக் கோபமடையச் செய்தது. அவருக்கு இதிலெல்லாம் ஆர்வமில்லை என்பதால், அவரைப் பொறுத்தவரை முகம் தெரியாத ஒரு நபரிடம் இருந்து வந்த வெறும் ‘ஹாய்’ என்ற குறுஞ்செய்தி வேதனைக்குள்ளாகிவிடும்.

என் வாழ்க்கை வேறு விதமாக இருந்திருந்தால், நான் நிச்சயம் இது போன்ற குறுஞ்செய்தியை நிராகரித்திருப்பேன். ஆனால் நான் மிகவும் கோபமாக இருந்ததால், அந்த மனநிலையில் ‘ஹாய்’ என்று மறுமொழி அனுப்பிவிட்டேன்.

அவருடைய பெயர் ஆகாஷ். அவரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது; ஆனால் அதையெல்லாம் யோசிக்காமல் அவரது ‘நட்பு வேண்டுகோளை’ நான் ஏற்றுக்கொண்டேன்.

ஏதோ சில காரணங்களால் நான் ஒரு விமான பணிப்பெண் என்று அவர் நினைத்துக்கொண்டிருந்தார். அவரிடம் நான் உண்மையைச் சொல்லியிருக்க முடியும் ஆனால் ஒரு விமான பணிப்பெண்ணாக என்னை அவர் கற்பனை செய்திருந்ததும் எனக்குப் பிடித்திருந்தது.

poem-yaalaruviஎன்னுடைய சிறுவயதுமுதல் என்னிடம் பல பேர் நான் மிகவும் அழகாக இருப்பதாகக் கூறியிருக்கிறார்கள்; பால் போன்ற நிறம், பாதாம் வடிவத்தில் கண்கள், கூர்மையான அம்சங்கள், நல்ல கட்டான வடிவம் கொண்ட நான் நிச்சயம் அனைவரையும் கவர்வேன் அல்லவா?

ஆனால் எனது பெற்றோர் அப்போது இருந்த அவசரத்தில், அவர்களுக்கு முதலில் பிடித்த ஒருவனையே எனக்கு திருமணம் செய்துவைத்தனர். என் கணவருக்கோ, எனது உணர்வுகளிலோ அல்லது என்மீது காதல் கொள்வதிலோ எந்த ஆர்வமும் இல்லை.

எனக்கு கணவராக வருபவர் என்னை எப்போதும் அன்போடு பார்த்துக்கொள்வார், சின்னச்சின்ன ஆச்சர்யங்கள் கொடுப்பார், எப்போதாவது எனக்கு தேநீர் போட்டுக்கொடுப்பார் என்றெல்லாம் கற்பனை செய்திருந்தேன்.

ஆனால் எனது கணவர் ஒரு இயந்திரம் போன்றவர். காலையில் விழிப்பார், வேலைக்குச் செல்வார், தாமதமாகவே வீடு திரும்புவார், இரவு உணவு உண்பார் பின்னர் உறங்கச் சென்றுவிடுவார்.

அவர் பிஸியாக இருப்பதை நான் புரிந்துகொள்ளவில்லை என்று அர்த்தமில்லை. ஆனால் தன் மனைவியிடம் அன்பாகப் பேச ஒருவருக்கு எவ்வளவு நேரம் ஆகப்போகிறது? அவளைக் கட்டி அணைக்க, அவள் முகத்தை ஆசையோடு பார்க்க எவ்வளவு நேரம் ஆகப்போகிறது?

என் கணவருக்கு இது போன்ற எந்த உணர்வும் இல்லை; அவரைப் பொறுத்தவரையில் மனைவிக்குப் பிடித்தவற்றையெல்லாம் செய்வது அவரது அகங்காரத்தைக் காயப்படுத்திவிடும்.

நாங்கள் உடலுறவில் ஈடுபட்டிருக்கிறோம் ஆனால் அதில் எந்தவித காதலும் இல்லை. உண்மையில், நாங்கள் உடலுறவுக்கு முந்தைய விளையாட்டுகளில் கூட ஈடுபட்டதில்லை.

எவ்வளவு சுவையாக நான் சமைத்தாலும் சரி, வீட்டை எவ்வளவு நேர்த்தியாக நான் நிர்வாகித்தலும் சரி, எனக்கு எந்த பாராட்டும் இதுவரை கிடைத்ததில்லை.

ஆகாஷ் மீண்டும் குறுஞ்செய்தி அனுப்பியதிலிருந்து நான் எனது சிந்தையைத் தொலைத்தேன். அவர் எனது புகைப்படத்தைப் பார்க்க விரும்பினார். இணையம் எனக்கு ஒரு அறிமுகமில்லாத பகுதியாகவே இருந்தது.

எனது முகநூல் பக்கத்தைக் கூட எனது கணவர்தான் உருவாக்கினார். நண்பராக வேண்டும் என்ற வேண்டுகோளை எப்படி ஏற்பது மற்றும் குறுஞ்செய்திகளுக்கு எவ்வாறு பதிலளிப்பது என்றெல்லாம் அவர்தான் எனக்குச் சொல்லிக்கொடுத்தார்.

ஆனால் என்னுடைய பக்கத்தில் எந்த புகைப்படமும் இல்லை. ஏனென்றால் புகைப்படங்கள் திருடப்பட்டு ஆபாச தளங்களில் பதிவேற்றம் செய்யப்படுவதாக நான் கேள்விப்பட்டதனால் எனது புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய நான் பயந்தேன்.

ஆனால் ஆகாஷ் மீண்டும் மீண்டும் வற்புறுத்தினார். சில நேரங்களில் இது பற்றிய பேச்சைத் தவிர்க்க நான் முயற்சித்தேன்; நான் ஒரு விமான பணிப்பெண் அல்ல என்பதையும் நான் அவரிடம் சொல்லிவிட்டேன்.

என் மறுமொழியை கேட்டும் அவர் என் புகைப்படத்தை பார்ப்பதில் இன்னும் பிடிவாதமாக இருந்தார்.

ஆனால், என் புகைப்படத்தை நான் பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தாலும் கூட அது சாத்தியப்பட்டிருக்காது; ஏனெனில் என்னிடம் ஒரு நல்ல புகைப்படம் கூட இல்லை.

அவர் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்துக்கொண்டிருந்ததுடன் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார்; அடிக்கடி பல்வேறு பார்ட்டிகளிலும் கலந்துக்கொண்டிருந்தார்.

அதுபோன்ற கூட்டங்கள் அல்லது நிகழ்வுகளில் பெண்கள் குடிப்பது மற்றும் சிகரெட் பிடிப்பதை பற்றியும் அவர் என்னிடம் கூறியுள்ளார்.

அவையனைத்துமே எனக்கு புதியவை; அதாவது அறியப்படாத உற்சாகமூட்டும் உலகத்தின் கதவைப் போன்றவை.

அவரை போன்றே அவரது மனைவியும் அதிக ஊதியம் அளிக்கும் கார்ப்பரேட் நிறுவனமொன்றில் பணிபுரிந்துக்கொண்டிருந்தார்.

தனது மனைவி ஓய்வின்றி பணிபுரிந்துவருவதாக அவர் என்னிடம் கூறினார்; அவர்களால் ஒருவருக்கொருவர் அதிக நேரம் செலவிட முடியவில்லை.

“நான் ஏதோவொன்றைப் பற்றி கவலை கொண்டு இருந்தபோது என் மனைவியை கைபேசியில் அழைத்து பேச விரும்பினேன்; ஆனால் அவளோ, தான் அப்போது அலுவலக கூட்டம் ஒன்றில் பிசியாக இருப்பதாகச் சொன்னாள்” என்று ஒருநாள் அவர் என்னிடம் கூறினார்.

என்னை அதே சூழ்நிலையுடன் என்னால் முற்றிலும் தொடர்புபடுத்த முடியும். எங்களது உரையாடல் தினந்தினம் தொடர்ந்தது.

அது மிகவும் வேடிக்கையாக இருந்தது. அதனால், நான் என் வேலைகளை விரைவாக முடித்துவிட்டு, பிற்பகலை எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.

ஒருநாள் ஆகாஷ் வெப் காமெராவை ஆன் செய்யுமாறு கூறினார். அதிர்ச்சியடைந்த நான் உடனடியாக ஆஃப்லைனுக்குச் சென்றுவிட்டேன்.

அன்றைய தினம் நான் குளிக்கக்கூட இல்லை. அவர் என்னை அப்படியே பார்த்திருந்தால் என்ன ஆகியிருக்கும்!

இந்நிலையை எப்படி கையாள வேண்டுமென்று தெரியாததால் அவரை நான் தவிர்க்கத் தொடங்கினேன். அதன் பிறகு, பொதுவாக எங்களது உரையாடல் நடக்கும் நேரத்தில் ஆன்லைன் செல்வதையும் தவிர்த்துவிட்டேன்.

இறுதியில் அவர் எனது முகநூல் பக்கத்தை பிளாக் செய்வதற்கு சில நாட்கள் முன்பு வரை இது தொடர்ந்தது. தவிர்க்க முடியாத அந்த சம்பவம் இன்னும் எனது இதயத்தை பிளந்துகொண்டிருக்கிறது.

எங்களுக்குள் எவ்வித உறவும் நிலவவில்லை என்றாலும் அவரது இழப்பு எனது வாழ்க்கையை வெறுமையானதாக மாற்றிவிட்டது.

ஆகாஷைவிட என்மீது எனக்கே அதீத கோபம் ஏற்பட்டது. நான் மற்றவரைச் சார்ந்திருப்பதை போன்று உணர்ந்தேன்.

ஏன் எனக்கென்று ஒரு தனி தொழிலும், சுதந்திரமான வாழ்க்கையும் இல்லையென்ற கேள்விகள் மேலோங்கின.

எனக்கென்று ஒரு வேலை இருந்திருந்தால் எனது வாழ்க்கையை நான் எனது விருப்பப்படி வாழ்த்திருப்பேன். இந்த சம்பவத்திற்குப் பிறகு சில வாரங்கள் நான் முகநூலிலிருந்து விலகியிருந்தேன்.

கண்களிடையே அந்த நிகழ்வுகள் நடைபெறாவிட்டால், அதுகுறித்து மனதிற்குள் எதுவுமே இல்லை என்று அர்த்தமில்லை. நாங்கள் ஒன்றாக உரையாடிய நேரங்கள் குறித்த ஞாபகங்கள் என்னைத் தொடர்ந்து ஆட்கொண்டன.
love-Lechery-right-or-wrong_SECVPF

நாங்கள் உரையாடியபோது நேரம் பறந்தோடிச் சென்றது. எவ்வித காரணமுமின்றி நாள் முழுவதும் என் முகம் மலர்ந்திருந்தது.

இதுகுறித்து யோசித்துப் பார்க்கும்போதெல்லாம், எனது மெய்நிகர் உறவால் பெரும்பாலும் பயனடைந்தது எனது கணவர் என்றே எனக்குத் தோன்றும்.

என் கணவர் எவ்வித கூடுதல் முயற்சியும் எடுக்காமலேயே நான் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்தேன். எங்களுக்கிடையே நிலவிய வெற்று உறவிலிருந்த இடைவெளியை ஆகாஷ் நிரப்பினார்.

நான் தவறேதும் இழைக்கவில்லை. நான் என் கணவரை ஏமாற்றவில்லை; என் திருமண வாழ்வைத் தாண்டி யாருடனும் உறவு கொள்ளவுமில்லை. நான் உரையாடல் மட்டுமே செய்தேன்.

வெறும் மனைவியாக வாழ்ந்துகொண்டிருந்த எனக்குள் கனவுகளுடனும், ஆசைகளுடனும் இருந்த பெண்ணை அந்த உரையாடல் வெளிச்சம் போட்டு காட்டியது.

indexநான் அவரை தொடர்பு கொள்ள வேண்டுமா என்ற குழப்ப நிலை சில நாள்களுக்கு நீடித்தது.

அதன் பிறகு ஒருநாள், பயனர் கணக்கொன்றை முகநூலில் காண நேரிட்டது. அதிலிருந்தவர் அழகாக இருந்தார். எனக்குள் என்ன நேர்ந்தது என்று எனக்கு தெரியவில்லை; ஆனால் அவருக்கு நட்பு அழைப்பு விடுத்தேன்.

‘உங்களுக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில், எதற்காக எனக்கு நட்பு அழைப்பை அனுப்பினீர்கள்’ என்று அவர் மறுமொழி அனுப்பினார்.

‘ஏன்? திருமணமான பெண்கள் நட்பு வட்டத்தை உருவாக்கக் கூடாதா என்ன?’ என்று நான் கேட்டேன். அவ்வளவுதான். அப்போது பேச ஆரம்பித்த நாங்கள் இப்போதுவரை தொடர்பிலிருக்கிறோம்.

அவருடன் எனது நட்பு உருவாக்கம் முடிந்துவிடவில்லை. அதன்பிறகு, சில பிரபலங்களுடன் புகைப்படத்தில் இருக்கும் ஒரு நபரின் கணக்கொன்றை பார்த்தேன்.

அவரது வாழ்க்கையை பற்றி மேலும் தெரிந்துகொள்வது வேடிக்கையாக இருக்குமென்று எனக்குத் தோன்றியது. எனவே, அவருக்கு ஃபேஸ்புக்கில் நட்பு அழைப்பை அனுப்பினேன். அதை அவர் ஏற்றுக்கொண்டார்.

பிறகு எனது வாழ்க்கை எனக்கு முழுமையானதாகவும் உற்சாகமளிக்கக்கூடியதாகவும் தோன்றியது. அந்நிலையில் நான் கருவுற்றேன். எனது மகள் எனது வாழ்க்கையை அடியோடு மாற்றிவிட்டார். அவள் வந்த பிறகு எனக்கு எதற்கும் நேரமில்லாமல் போனது.

_99866666_32370d7b-3c14-4bbc-90cb-53903c650a73

என் மகளுக்கு இப்போது மூன்று வயதுதான் ஆகிறது. ஆனால், இதன்பிறகு எனக்கென எந்த தனியுரிமையையும் கொள்வதென்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.

சில நேரங்களில் எனக்கு யாரிடமாவது பேச வேண்டுமென்பதுபோல் தோன்றும். ஆனால், எனது கைபேசியை எடுக்கும் அந்த நொடியில் எனது மகள் ஓடோடி வந்து எனது கைபேசியில் கார்ட்டூன் காணொளிகளைக் காட்டுமாறு கெஞ்சுவாள்.

சில நேரங்களில் இது எனக்கு பெரும் வெறுப்பை உண்டாக்கும். நான் ஏற்கனவே இருந்ததைப்போன்ற பெண்ணாக என்னால் மீண்டும் இருக்க முடியுமா அல்லது ஒருவரின் மனைவியாகவும் மற்றும் தாயாகவும் இருப்பதே என் ஒரே விதியாக இருக்குமோ? என்று எண்ணி வியப்பேன்.

அதனால்தான், எனது மகளுக்கு இதைப் போன்ற சம்பவங்கள் நடக்க விடக்கூடாது என்று முடிவெடுத்திருக்கிறேன். எனது மகளை ஒரு சார்பற்ற நபராக வளர்ப்பேன்; அதனால் அவள் தனது வாழ்க்கையில் அவளுக்குத் தேவையானதை அவளே தேர்வு செய்துகொள்வாள்!

(பிபிசி செய்தியாளர் பிரக்யா மானவால் பகிரப்பட்டு திவ்யா ஆர்யாவால் தயாரிக்கப்பட்ட வட இந்தியாவில் வசிக்கும் ஒரு பெண்மணியின் உண்மை கதை இது. அந்த பெண்ணின் அடையாளம் அவரது வேண்டுகோளின்படி பெயர் அறியப்படாமல் வைக்கப்பட்டுள்ளது)

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.