கமலின் முதல் மனைவியின் தற்போதைய நிலை!! மலர்ந்த காதல் பிரிந்தது இப்படிதான்..? 28 ஆண்டுகளுக்கு பிறகு சரியான பதிலடி..!!

0
1557

காதல் மன்னனாக திரையில் ஜொலித்தாலும் கமலுக்கு திருமண வாழ்க்கை என்னவோ செட் ஆகவில்லை. கடைசியாக நடிகை கௌதமியுடன் லிவ்விங் டூ கெதர் ரிலேசன் ஷிப்பிலிருந்தும் பிரிந்தார்கள்.

இந்த நேரத்தில் கமலின் முதல் மனைவியான வாணி கணபதி பற்றிய சில விடங்கள்…

வாணி கணபதியின் தந்தை கணபதிக்கு ஃபார்மாஷூட்டிக்கல் கம்பெனியில் வேலை என்பதால் தொடர்ந்து வெவ்வேறு இடங்களில் வாழ வேண்டிய சூழல்.

சென்னையில் வாணி கணபதி பிறந்த நேரத்தில் அப்பாவுக்கு நாக்பூரில் வேலை. அதன் பிறகு குடும்பத்துடன் கொல்கத்தாவில் செட்டில் ஆகிவிட்டார்கள்.

அம்மா இந்துபாலா கணபதி ராஜலட்சுமி என்பவரிடம் பரதநாட்டியம் கற்றுக் கொண்டிருந்தார். அப்போது உடன் அழைத்துச் செல்லும் மகள் வாணியை ஜூனியர் கிளாஸில் சேர்த்துவிடுவது வழக்கம். இப்படித்தான் வாணிக்கு நான்கு வயதிலிருந்தே பரதம் அறிமுகமாகியிருக்கிறது.

ஒரு கட்டத்தில் படிப்பா? நடனமா ? என்ற சூழல் வந்த போது தடுமாறி நின்றார். பின்னர் அதன் பிறகு முழு நேர பரதநாட்டியக் கலைஞராக தன்னை மெருகேற்றிக்கொண்டார்.

625.0.560.370.180.700.770.800.668.160.89.jpgss

அதன் பிறகு வாணி கணபதி குடும்பத்துடன் மும்பைக்கு மாற்றலாகிச் சென்றார். அங்கே ராஜராஜேஸ்வரி கலா மந்திர் என்னுமிடத்தில் கோவிந்தராஜ் பிள்ளை மற்றும் மகாலிங்கம் பிள்ளை ஆகியோரிடம் நடனம் கற்றுக் கொண்டார். அவர்கள் மூலமாக குரு கல்யாண சுந்தரத்தின் அறிமுகம் கிடைத்திருக்கிறது.

வாணி கணபதியின் நடனத்தை செழுமையாக்கியவர் என்றால் அது கல்யாணசுந்தரம் தான். கல்யாணசுந்தரமும் அவருடைய மனைவி மைதிலியும் வாணி கணபதிக்கு இன்னொரு தாய் தந்தையாகவே இருந்திருக்கிறார்கள்.

நடனத்தை மட்டுமல்லாது வாணி கணபதியின் தனிப்பட்ட வாழ்க்கையின் மீதும் அவர்கள் அக்கறை கொண்டிருந்தார்கள்.

வாணி கணபதி சோர்ந்து போகும் போதெல்லாம் உடன் இருந்து உற்சாகப்படுத்துவது, அவரை அந்த சோகத்திலிருந்து மீட்பது இவர்கள் தான்.

625.0.560.370.180.700.770.800.668.160.89.jpgssssssssssssssssss

வாணி கணபதியின் நடன குரு கல்யாணசுந்தரத்தின் குடும்பத்தினர் திரைப்பட வினியோகிஸ்தர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்களின் குடும்ப நண்பரான ஏ.பி.நாகராஜன் வாணி கணபதியின் நடனத்தை ஒரு முறை நேரில் பார்த்திருக்கிறார். அதைப் பார்த்து விட்டு, படத்தில் நடிக்கிறாயா என்று குரு மூலமாக கேட்டார்.

அப்போது என்ன முடிவெடுப்பது என்பது தெரியாமல்… இப்போது நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லி தன் குருவிடமே தன்னை வழிகாட்டும்படி சொல்லிவிட்டார்.

அப்படி நடிக்க ஒப்புக் கொண்ட படம் தான் மேல்நாட்டு மருமகள். அந்த திரைப்பட ஷூட்டிங்கின் போது தான் கமலை முதன்முதலாக நேரில் சந்தித்திருக்கிறார் வாணி கணபதி.

பாடல் ரெக்கார்டிங் நடந்து கொண்டிருந்த ரெக்கார்டிங் தியேட்டரில் இருவரும் பேசிக் கொண்டிருந்த சமயம், கமல் வாணி கணபதியிடம் , தொடர்சியாக சினிமாவில் இருக்க ஆசையா? என்று கேட்டிருக்கிறார்.

என்ன சொல்வதென்று தெரியாமல் வாணி முழிக்க, சற்றும் தாமதப்படுத்தாமல் உன்னை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று சொல்லிவிட்டிருக்கிறார் கமல்.

திருமணம் செய்து கொண்டு வாணியை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்ற கமல் முதலில் அறிமுகப்படுத்தியது சுஹாசினியைத் தானாம். அன்றிலிருந்து வாணியின் நெருக்கமான தோழியாக இருக்கிறார் சுஹாசினி.

625.0.560.370.180.700.770.800.668.160.89.jpgsssssssssssssssssssee

வாணியை விட இளையவராக இருந்தாலும் சுஹாசினியின் பக்குவம் நம்மை மிரளவைக்கும் என்கிறார் வாணி கணபதி.

எல்லாருடைய சம்மதத்தின் படி கமலுக்கும் வாணி கணபதிக்கும் திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகளிலேயே அவர்களின் உறவில் விரிசல் வர ஆரம்பித்தது.

இருவரும் விவாகரத்து பெற்றார்கள். விவாகரத்து பெற்ற சமயத்தில் இனி இவளது வாழ்க்கை என்னாகப்போகுதோ என்று பலரும் கவலைப்பட்டிருக்கிறார்கள்.

வாணி கணபதிக்கும் அடுத்து என்ன செய்ய வேண்டும், வாழ்க்கையை எப்படி வகுத்துக் கொள்ள வேண்டும் என்ற திட்டம் ஏதும் இருக்கவில்லை அப்போதெல்லாம் வாணி கணபதியை சோர்விலிருந்து மீட்டது நடனம் தான்.

கிட்டதட்ட முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் 1988 ஆம் ஆண்டு கமலும் வாணி கணபதியும் விவாகரத்து பெற்றனர்.

இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு மகள் ஸ்ருதியுடன் கமல்ஹாசன் ஒரு பேட்டியில் வாணி கணபதியை விட்டு பிரிந்த பிறகு என் பேங்க் பேலன்ஸ் ஜீரோ ஆகிவிட்டது.

வாடகை வீட்டிற்கு மாறினேன்,வாழ்க்கையை முதலிலிருந்து புதிதாக துவங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டேன் என்றார்.

இதற்கு பதிலளித்த வாணி கணபதி, இந்தியாவில் ஒருவன் மனைவிக்கு ஜீவானாம்சம் கொடுத்து ஒருவன் திவாலாகிட முடியும் என்று நினைக்கிறார்களா? கமல் ஏதோ வாடகை வீட்டிற்கு மாறினேன் என்று சொல்லியிருக்கிறாரே…

திருமணம் முடிந்ததிலிருந்து கிட்டத்தட்ட பத்து வருடங்கள் இரண்டு வீடு மாறியிருக்கிறோம். இரண்டுமே வாடகை வீடு தான். ஏதோ என்னை விவாகரத்து செய்த பிறகு தான் வாடகை வீட்டிற்கு செல்லும் நிலைமைக்கு தள்ளப்பட்டதாக சொல்வதெல்லாம் அபத்தமானது. தன் மேல் மகளின் அனுதாபம் விழ வேண்டும் என்று இப்படிச் சொல்லியிருக்கிறாரா என்று தெரியவில்லை. இது மிகவும் குழந்தைத்தனமானது.

கமலின் திறமைகளையும் அவரது படைப்பாற்றலையும் மதிக்கிறேன். ஆனால் அதற்காக இன்னொருவரை எளிதாக அவதூரு செய்யலாம் என்று அர்த்தமன்று. அந்த உரிமையும் அவருக்கு இல்லை.

விவாகரத்திற்கு பிறகு டிவி நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சி, மேக்கப், இண்டீரியர் டிசைனிங் என்று தனக்கான அடையாளத்தை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருந்தார் வாணி கணபதி.

இந்நிலையில் பெங்களூரில் சஞ்சரி என்ற பெயரில் ஒரு நடனப்பள்ளியை ஆரம்பித்து ஆசிரியராகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் வாணி கணபதி.

இந்த நடனப்பள்ளியை ஆரம்பிப்பதற்கும் குரு கல்யாண சுந்தரம் தான் தூண்டுகோலாக இருந்திருக்கிறார். முதலில் இந்த ஆசிரியர் பணியில் தனக்கு விருப்பமில்லை என்று சொன்னாலும், நீ பிறருக்கு கற்றுக் கொடுக்கும் போது தான் தொடர்ந்து நீ கற்றுக் கொள்ள முடியும் என்று அம்மா சொல்ல சம்மதித்து நடனப் பள்ளியை ஆரம்பித்திருக்கிறார்.

மாணவர்களுக்கு நான் கற்றுக் கொடுப்பதை விட அவர்களிடமிருந்து கற்பது அதிகம் என்று சொல்லும் வாணி கணபதி, ஒரு ஆசிரியரின் தகுதியே தொடர்ந்து கற்றுக் கொண்டேயிருப்பது தான் என்கிறார்.

தன்னைப் பற்றியும் தன்னைச் சுற்றியிருப்பவர்கள் பற்றியும் மட்டும் சிந்திக்காமல் இந்த சமூகத்தின் மீதும் தனக்கு அக்கறையிருக்கிறது என்பதை சொல்லாமல் உணர்த்தியிருக்கிறார் வாணி கணபதி.

பெங்களூரில் இருக்கிற பொலிட்டிக்கல் ஆக்‌ஷன் கமிட்டியின் கலை,கலாச்சார பிரிவு பொறுப்பாளராக இருக்கிறார். இதன் முக்கிய பணி பொதுமக்களின் பிரச்சனைகளை ஆட்சியாளர்களுக்கு கொண்டு சேர்ப்பது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.