உலகின் மிக உயரமான ஆணும் மிக குள்ளமான பெண்ணும் சந்திப்பு- (படங்கள், வீடியோ)

0
1357

உலகின் மிக உயரமான மனிதரான துருக்கியைச் சேர்ந்த சுல்தான் கோசன், உலகின் மிக குள்ளமான பெண்ணான இந்தியாவைச் சேர்ந்த ஜோதி அம்கே ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை எகிப்தில் சந்தித்தனர்.

World-tallest-man-and-shortest-woman-2-660x400எகிப்தின் எல் கீஸா நகரிலுள்ள கீஸா பிரமிட் அடியில் கடந்த வெள்ளிக்கிழமை இவர்கள் இணைந்து ஊடகங்களுக்குப் போஸ் கொடுத்தனர்.

dims
35 வயதான சுல்தான் கோசன் 8 அடி 2.8 அங்குலம் (251 சென்ரிமீற்றர்) உயரமானவராக விளங்குகிறார். 24 வயதான ஜோதி அம்கே 2 அடி, 06 அங்குலம் (63 சென்ரிமீற்றர்) மாத்திரமே உயரமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

489ACB3100000578-5331913-image-m-44_1517350409833இவர்கள் இருவரும் முறையே உலகின் மிக உயரமான ஆணாகவும் உலகின் மிக குள்ளமான பெண்ணாகவும் 2011 ஆம் ஆண்டு கின்னஸ் சாதனை நூல் வெளியீட்டாளர்களால் அங்கீகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

489C944200000578-5331913-image-a-45_1517350433024

எகிப்திய சுற்றுலா ஊக்குவிப்புச் சபையின் அழைப்பின் பேரில் இவர்கள் இருவரும் எகிப்துக்கு விஜயம் மேற்கொண்டனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.