பேஸ்புக் நேரலையில் தற்கொலைக்கு முயன்ற பஞ்சாபி இளைஞர் – (வீடியோ)

0
422

பேஸ்புக்கில் நேரலை ஒளிபரப்புகள் அனைவரையும் கவர்ந்தவை. ஆனால், பஞ்சாப் மாநில இளைஞர் ஒருவர் தமது தற்கொலை முயற்சியை ஃபேஸ்புக்கில் நேரலை செய்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

பஞ்சாப் மாநிலம் முக்த்சர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் பேஸ்புக் நேரலை செய்து தற்கொலைக்கு முயன்ற வீடியோ வைரலாகிவருகிறது.

புட்டிவாலா கிராமத்தை சேர்ந்த குருதேஜ் சிங், நிலத்தகராறு ஒன்றில் தனக்கு நியாயம் கிடைக்கவில்லை என்று கூறி, அதனால் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார்.

அதை பேஸ்புக்கில் நேரலையாக ஒளிபரப்பிய அவர், தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டார்.

நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இருப்பதாக அவர் நேரலையில் கூறியதாகவும், தனக்கு நியாயம் வழங்கவேண்டும் என்று அப்போது கேட்டுக்கொண்டதாகவும் உள்ளூர் காவல்துறையினர் தெரிவித்தனர்.

35 வயதான குர்தேஜ் சிங் துப்பாக்கி உரிமம் வைத்திருப்பதாகவும், அதிர்ஷ்டவசமாக அவர் காயங்களுடன் உயிர் தப்பியதாகவும் கோட்பாயி காவல்நிலைய பொறுப்பாளர் கிருஷ்ண குமார் பிபிசியிடம் தெரிவித்தார்.

தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குர்தேஜ் சிங்கின் பேஸ்புக் நேரலை காட்சிகள் பேஸ்புக்கில் வைரலாகி, அதிக அளவு பகிரப்படுகிறது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.