இறுதிச்செலவுக்கு ரூ.300 வைத்துவிட்டு உயிர்விட்ட ஆதரவற்ற முதியவர்!- நெஞ்சை உருக்கும் சம்பவம்

0
307

Ramanathapuram: ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் வயல்வெளியில் முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக திருப்பாலைக்குடி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அப்பகுதிக்குச் சென்ற திருப்பாலைக்குடி போலீஸார்  அந்த முதியவரின் உடலை பார்வையிட்டு சோதனை செய்தனர்.

அப்போது அவரது உடல் அருகே கடிதம் ஒன்று இருந்துள்ளது. அந்தக் கடிதத்தில், ‘தான் ஒரு அநாதை என்றும், தனது சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை எனவும் குறிப்பிட்டிருந்ததுடன், தனது இடுப்பில் ரூ.300 வைத்திருப்பதாகவும் தனது பிணத்தைக் காண்பவர்கள் அந்தப் பணத்தைக் கொண்டு தன்னை புதைத்து விட வேண்டும்’ என்றும் அந்த முதியவர் எழுதி வைத்திருந்தார்.

முதியவரின் உடலைக் கைப்பற்றிய போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக ராமநாதபுரம்  மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

அநாதையான முதியவர் தனது உடல் அடக்கத்திற்கு செலவாகும் பணத்தினை வைத்துவிட்டு இறந்துக் கிடந்த சம்பவம் அப்பகுதியில் சென்றோரை கண்கலங்க வைத்தது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.