கூரிய ஆயுதத்தால் குத்தி இரு பிள்ளைகளின் தந்தை கொலை ; மைத்துனர் கைது

0
425

கட்டுகாஸ்தோட்டைப் பொலிஸ் பிரிவில் கூறிய ஆயுதத்தால் குத்தப்பட்டு இரு பிள்ளைகளின் தந்தை கொலை செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ள நிலையில் சந்தேகத்தின் பேரில் கொலை செய்யப்பட்ட நபரின் மைத்துனர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக கட்டுகாஸ்தோட்டைப் பொலிசார் தெரிவித்தனர்.

முப்பது வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான அஜித்குமார என்பவரே சம்பவத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மரணித்தவருக்கும் அவரது சகோதரியின் கணவனுக்கும் இடையே சிறு பிணக்கு இருந்ததாகவும் அதன் விளைவாகவே மோதல் ஏற்பட்டு கொலை இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட நபரை கண்டி நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.